பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!

பிரபல எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான 'இ பைக் கோ' (eBikeGo) மின்சார வாகன விற்பனையில் களமிறங்கி இருக்கின்றது. இதன் கால் தடத்தை உறுதிப்படுத்தும் விதமாக டிரான்சில் பிராண்டின்கீழ் டிரான்சில் இ1 (Transil e1) எனும் எலெக்ட்ரிக் சைக்கிளை அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களில் இ பைக் கோ (eBikeGo)-வும் ஒன்று. இது பிரத்யேகமாக மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே வாடகைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் வாடகை வாகனங்களை முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் காண முடியும். இந்த நிறுவனமே தற்போது இந்தியாவில் மின் வாகன விற்பனையிலும் குதித்துள்ளது. நிறுவனம் ஆரம்ப கட்டமாக எலெக்ட்ரிக் மிதிவண்டி விற்பனையிலேயே களமிறங்கி இருக்கின்றது.

டிரான்சில் இ1

டிரான்சில் இ1

டிரான்சில் இ1 (Transil e1) எனும் எலெக்ட்ரிக் மிதிவண்டியையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதன் வாயிலாகவே நிறுவனம் இந்திய மின்வாகன சந்தையில் தன்னுடைய கால்தடத்தை பதித்து உள்ளது. அறிமுகமாக இந்த மின்சார பைக்கிற்கு ரூ. 45 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த அளவு அதிகபட்ச விலையை நிறுவனம் நிர்ணயித்து இருக்கின்றது.

ஆண், பெண் ரெண்டு பேரும் ஓட்டிக்கலாம்

வெகு விரைவில் இதற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, அடுத்த சில தினங்கள் அல்லது வாரங்களில் டெலிவரி பணிகளும் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்புற வாசிகளைக் கருத்தில் கொண்டே டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் பைக்கை நிறுவனம் உருவாக்கியும் இருக்கின்றது, தற்போது விற்பனைக்கும் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் மிதிவண்டியை அனைத்து பாலினரும் இயக்கும் வகையில் உருவாக்கி இருக்கின்றது.

அதிக உறுதியான ஸ்டீல்

ஸ்டீல் ஃப்ரேமைக் கொண்டே இ-சைக்கிளை அது உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் அதிக உறுதியான ஸ்டீல் ஆகும். சைக்கிளின் அதிக உறுதித் தன்மைக்கு இதுவே காரணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து டபுள் வால்லட் (double walled) அலாய் ரிம்கள் டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி, பிஎம்எஸ் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

40 கிமீ டிராவல் பண்ணலாம்

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 20 கிமீட்டருக்கும் குறைவான தொலைவில் அலுவலகத்திற்கு மிக சுலபமாக இந்த இ-சைக்கிளில் சென்று மீண்டும் திரும்ப முடியும். டிரான்சில் இ1 ஓர் நீரால் பாதிக்காத இ-சைக்கிள் ஆகும். பேட்டரி மின் மோட்டார் என அனைத்தும் இந்த திறனுடனேயே உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் முதல் 2.5 மணி நேரம் வரை தேவைப்படும்.

கி.மீட்டருக்கு., வெறும் 5 பைசா மட்டுமே செலவு

இந்த முழு சார்ஜுக்கும் 0.18 யூனிட்டே செலவாகும். அப்படி என்றால் ஒரு கிமீட்டருக்கு 5 பைசா என்ற வீதத்திலேயே நமக்கு செலவாகும். மூன்று விதமான ரைடிங் மோட்கள் இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. க்ரூஸ், வால்க் மற்றும் த்ரோட்டில் எனும் மூன்று விதமான இயக்க மோட்களே டிரான்சில் இ1-ல் வழங்கப்பட்டு உள்ளது. இ-சைக்கிளை எளிதில் வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக ஸ்மார்ட் சார்ஜரையும் நிறுவனம் வழங்குகின்றது.

கட்-ஆஃப் வசதிக் கொண்ட ஸ்மார்ட் சார்ஜர்

ஃபுல்லாக பேட்டரி சார்ஜாகும் பட்சத்தில் தானாகவே கட்-ஆஃப் வசதிக் கொண்டதே இந்த ஸ்மார்ட் சார்ஜர் ஆகும். இதுதவிர டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளில் ஓர் சிறிய எல்இடி ஸ்மார்ட் திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை வாயிலாக பல்வேறு முக்கிய தகவல்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, சைக்கிளின் வேகம், நேரம், பேட்டரி அளவு போன்ற முக்கிய தகவல்களை இந்த திரை வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்னும் பல வண்டிகளை எதிர்பார்க்கலாம்

இந்தியாவில் தற்போது மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல் டூ-வீலர்களுக்கு ஆப்பு வகைக்கும் வகையில் மிகக் குறைவான செலவில் சூப்பரான பலனை வழங்கக் கூடிய எலெக்ட்ரிக் மிதிவண்டியை இ பைக் கோ, டிரான்சில் பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. எதிர்காலத்தில் இன்னும் சில புதுமுக மின்சார வாகனங்களை இது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Most Read Articles

English summary
Ebikego launches transil e1 electric bicycle
Story first published: Wednesday, January 25, 2023, 19:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X