இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!

பெட்ரோல், டீசல் அல்லாத வாகனங்கள் பல இந்த முறை நடைபெற்ற 2022 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்ட என கூறலாம். சிஎன்ஜி, எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் என பல மாற்று எரிபொருள் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும், ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் இந்த முறை அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கவரும் வகையில் அமைந்தது. பார்வையாளர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் இந்த வாகனங்கள் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றன.

அந்தவகையில் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை காட்சிப்படுத்தின?, அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். ஹோண்டா, டிவிஎஸ், யமஹா, பஜாஜ், சுஸுகி, ஹீரோ என பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை அறிமுகம் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை பற்றிய விரிவான தகவலையேக் காண இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா எக்ஸ்ஆர்இ 300 (Honda XRE 300)

ஜப்பானி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, புத்தம் புதிய இருசக்கர வாகன மாடலையே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனமாக உருவாக்கி, அதையே 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த இருசக்கர வாகனம் ஸ்போர்ட் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் 291 சிசி ஏர்/ ஆயில் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 25.6 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4V)

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடலை ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக்காக உருவாக்கி இருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்மிக்க இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றாக அப்பாச்சி இருக்கின்றது. இந்த மாடலில் தனது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக்கை டிவிஎஸ் அறிமுகம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் 17.55 பிஎஸ் பவரையும், 14.73 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக்

யமஹா எஃப்இசட்-எஃப்ஐ (Yamaha FZ-FI)

யமஹா நிறுவனம் அதன் எஃப்இசட் எஃப்ஐ இருசக்கர வாகன மாடலையே ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. இந்த பைக்கை இந்தியாவில் காட்சிப்படுத்துவதுதான் முதல் முறை என எண்ணிக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த பைக்கை நிறுவனம் பிரேசில், தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே காட்சிப்படுத்திவிட்டது. அதேவேளையில் சில நாடுகளில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை விற்கும் பணிகளையும் தீவிரப்படுத்தி இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160)

இந்தியாவில் சூப்பரான டிமாண்டைப் பெற்றுக் கொண்டிருக்கும் இருசக்கர வாகன மாடல்களில் பஜாஜ் பல்சரும் ஒன்று. இந்த பைக் மாடலின் என்160-யிலேயே நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனத்தை பஜாஜ் அறிமுகம் செய்திருக்கின்றது. பெட்ரோல் பல்சர் என் 160 மாடலை அப்படியே உறித்து வைத்ததுபோல் இந்த மாடலும் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. ஆமாங்க, பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத நிலையே நம்மால் காண முடிகின்றது.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக்

அட்டகாசமான சிறப்பம்சங்களைத் தாங்கியதாக, குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இதனை பஜாஜ் உருவாக்கி இருக்கின்றது. பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஆங்குலர் ரக ஹெட்லேம்ப், ஸ்பிளிட் ரக இருக்கைகள், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், டூயல் ஸ்பிளிட் ஸ்டைல் எல்இடி ஹெட்லேம்ப், ஃபைபர் பாஷ் பிளேட், டேப்பர்டு ரியர் பகுதி மற்றும் அலாய் வீல் ஆகியவற்றாலேயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர் 250 எஃப்எஃப்வி (Suzuki Gixxer 250 FFV)

சுஸுகி நிறுவனம் அதன் ஜிக்ஸெர் 250 எஃப்எஃப்வி பைக் மாடலையே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் குவார்டர் லிட்டர் ஜிக்ஸெர் ரக பைக் ஆகும். அட்டகாசமான ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த வாகனம் உருவாக்கி உள்ளது. ஜிக்ஸெர் 250 மாடலை தழுவியே இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. வண்ண தேர்வு மற்றும் பிற அலங்கார விஷயத்தில் இந்த பைக் மிகவும் கவர்ச்சிகரமானதாக காட்சியளிக்கின்றது.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour XTec)

ஹீரோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடலாக எக்ஸ்டெக் இருக்கின்றது. பல்வேறு நவீன கால தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பைக் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் தகவல் வழங்கும் நேவிகேஷன் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாமர் எக்ஸ்டெக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த டூ-வீலரிலேயே ஹீரோ நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலை உருவாக்கி இருக்கின்றது. இதையே நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தியது.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் என்றால் என்ன?

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ரக வாகனங்கள் வழக்கமான பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. 0.2 பிஎஸ் மற்றும் 0.4 என்எம் டார்க் வரை அது கூடுதலாக வெளியேற்றும். ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் பெரிய அளவில் பெட்ரோலைச் சார்ந்திருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருளில் 91 சதவீதம் பெட்ரோல், 9 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே எத்தனால் கலக்கப்படுகின்றது.

ஆனால், ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் இ20 முதல் இ85 என அனைத்து மிகப்பெரிய அளவில் எத்தனால் கலக்கப்பட்ட வாகனங்களிலும் இயங்கும். இவற்றின் விலையும் மிக மலிவானது ஆகும். பெட்ரோலுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு அரசு வெகு விரைவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களைக் கட்டாயமாக்க இருக்கின்றது. அதேசமயத்தில், கூடிய விரைவில் 20 எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Flex fuel motorcycle unveiled auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X