இந்தியாவிற்கு வர தயாராகும் பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக்!! அல்ட்ராவொய்லெட் எஃப்77-க்கு சரியான போட்டி ரெடி...

உலகளவில் நம் இந்தியா மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை ஆகும். நம் நாட்டில் பல்வேறு நாடுகளின் வாகனங்கள் கடந்த காலங்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. சுஸுகி, ஹோண்டா, டொயோட்டா, டட்சன், நிஸான் போன்ற ஜப்பானிய பிராண்ட்கள் இந்திய சந்தைக்கு வருகை தந்துள்ளன.

மோட்டார்சைக்கிள் பிராண்ட்களை பொறுத்தவரையிலும் ஜப்பானிய பிராண்ட்களுடன், ஐரோப்பிய நிறுவனங்களின் கவனமும் இந்தியாவின் பக்கம் உள்ளது. ஆனால் அத்தகைய ஐரோப்பிய பிராண்ட்களில் பெரும்பான்மையானவை இத்தாலியை சேர்ந்தவை, டிரையம்ப் மோட்டார்சைக்கிள் மட்டும் இங்கிலாந்தை சேர்ந்தது. பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஜெர்மனியை சேர்ந்தது. ஆனால் பிரான்ஸ் நாட்டில் இருந்து இதுவரையில் எந்தவொரு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவிற்கு வந்தது இல்லை.

இந்தியாவிற்கு வர தயாராகும் பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக்!!

அந்த குறையை தீர்க்கும் விதமாக, பிரெஞ்சு மோட்டார்சைக்கிள் பிராண்டான ரைடர் இந்தியாவில் களம்புக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரெஞ்சு நிறுவனம் நம் நாட்டில் முதல் மோட்டார்சைக்கிளாக எஸ்.ஆர்6 என்ற தனது எலக்ட்ரிக் பைக்கை களமிறக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கிற்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ரைடர் எஸ்.ஆர்6 பைக் ஆனது தோற்றத்தில் கிட்டத்தட்ட யமஹா ஒய்.இசட்.எஃப் பைக்குகளை போன்று உள்ளது.

குறிப்பாக, பைக்கின் முன்பக்கம் யமஹா ஆர்15 பைக்கா இது? என நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், என்ஜின் இருக்க வேண்டிய இடத்தில் மூடப்பட்ட க்ரில் பகுதி உள்ளது. காற்று உள்ளே செல்வதற்கு ஏதுவாக துளைகள் உடன் இருக்கும் இந்த க்ரில் பகுதியின் மூலமாகவே பைக்கின் பேட்டரிகள் குளிர்விக்கப்படுகின்றன. ரைடர் எஸ்.ஆர்6 பைக் ஆனது பின் சக்கரங்களின் மூலம் இயங்கக்கூடியது. இதனாலேயே இந்த எலக்ட்ரிக் பைக்கில் எலக்ட்ரிக் மோட்டார் பின் சக்கரத்திற்கு அருகாமையில் பொருத்தப்படுகிறது.

இந்தியாவிற்கு வர தயாராகும் பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக்!!

தொடர்ச்சியாக 6.7 பிஎச்பி பவரையும், அதிகப்பட்சமாக 8.04 பிஎச்பி வரையிலான பவரையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டாரை க்யூ.எஸ் மோட்டார் என்ற நிறுவனம் தயாரித்து ரைடர் நிறுவனத்திற்கு வழங்குகிறது. 8.04 பிஎச்பி என்பது தற்போதைய 125சிசி பைக்குகளில் கிடைக்கும் ஒன்று. அதற்காக ரைடர் எஸ்.ஆர்6 எலக்ட்ரிக் பைக்கை 125சிசி பைக்குகளுடன் ஒப்பிட வேண்டாம். ஏனெனில் இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக சுமார் 118 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இந்த டார்க் திறன் ஆனது உடனடியாக 0 ஆர்பிஎம்-லேயே கிடைப்பது எலக்ட்ரிக் பைக்குகளுக்கு உண்டான மற்றொரு சிறப்பு.

ரைடர் ஆர்.எஸ்6 பைக்கில் எலக்ட்ரிக் மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்க 72 வோல்ட் 86 ஆம்பியர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்fத பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு 120kmph ஆகும். இந்த டாப்-ஸ்பீடில் தொடர்ச்சியாக சென்றால் ரேஞ்ச் எனப்படும் மைலேஜ் குறைவாகவே கிடைக்கும். அதுவே மணிக்கு 80கிமீ வேகத்தில் பயணித்தால், முழு பேட்டரி சார்ஜில் 100கிமீ வரையில் செல்லலாம். 50kmph அல்லது அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் அதிகப்பட்சமாக 140கிமீ தொலைவிற்கு பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியிருக்காது.

இந்தியாவிற்கு வர தயாராகும் பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக்!!

பேட்டரியை சார்ஜ் செய்ய 220 வோல்ட் நார்மல் சார்ஜர் பைக்குடன் வழங்கப்படுகிறது. இதில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 9 மணிநேரங்கள் தேவைப்படும். அத்துடன் விரைவு சார்ஜிங்கிற்கு டைப்-2 சார்ஜர்களையும் இந்த பைக் ஏற்கக்கூடியது. யமஹா ஒய்.இசட்.எஃப் பைக்குகளை போன்று முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட இந்த பைக்கில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் பின் இருக்கை பயணி கால் வைத்துக்கொள்ள ஃபுட்பெக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பிரேக்கிங் பனியை இந்த பைக்கில் முன்பக்கத்தில் 300மிமீ-இல் டபுள் பிரேக் ரோடார்களும், பின்பக்கத்தில் 240மிமீ சிங்கிள் டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் பொருத்தப்படுகின்றன. ஐரோப்பாவில் ரைடர் எஸ்.ஆர்6 பைக்கின் விலை ஆனது 7190 யூரோக்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.6.4 லட்சமாகும். அதுவே அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கின் விலை ஆனது ரூ.3.8 லட்சத்தில் இருந்தே துவங்குகிறது.

Most Read Articles
English summary
French brand rider will launch its sr6 electric motorcycle in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X