120வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹார்லிடேவிட்சன்! 7 லிமிடெட் எடிசன் பைக்குகளை தயாரிக்க முடிவு!

ஹார்லிடேவிட்சன் நிறுவனம் துவங்கி 120 ஆண்டுகள் ஆகும் நிலையில் அந்நிறுவனம் 7 பைக்குகளை லிமிட்டெட் எடிசனாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் துவங்கி இந்த 2023ம் ஆண்டுடன் 120வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்நிறுவனம் கடந்த 1903ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டு 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்நிறுவனம் இதற்கான ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

120வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹார்லிடேவிட்சன்! 7 லிமிடெட் எடிசன் பைக்குகளை தயாரிக்க முடிவு!

ஹார்லி டேவிட்சன் தனது 120வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிலையில் 2023ம் ஆண்டு 7 லிமிட்டெட் எடிசன் பைக்குகளை களம் இறக்க முடிவு செய்துள்ளது. லிமிட்டட் எடிசன் என்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் இந்த பைக்குகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பைக்குகள் ஏற்கனவே மார்கெட்டில் உள்ள பைக்குகளின் கலர், டிசைன், ஆகியவற்றை 120ம் ஆண்டு விழா ஸ்பெஷல் எடிசன் தீமில் மாற்றி விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளனர்.

அதன்படி இந்நிறுவனம் புதிதாக சிவிஓ ரோடு கிளைடு அனிவர்சரி, ட்ரை கிளைடு அல்ட்ரா அனிவர்சரி, ஸ்டிரீட் கிளைடு ஸ்பெஷல் அனிவெர்சரி, ரோடு கிளைடு ஸ்பெல் அனிவெர்சரி, ஃபேட்பாய் 114 அனிவெர்சரி, மற்றும் ஹெரிட்டேஜ் கிளாசிக் 114 அனிவெர்சரி ஆகிய பைக்குகளை களம் இறக்க முடிவு செய்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 120 ம் ஆண்டை முன்னிட்டு அந்நிறுவனத்தின் சேர்மன் ஜோச்சன் ஸெய்ட்ஸ் கூறும் போது : "1903ம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் டிசைன், தொழிற்நுட்பம், மற்றும் ஃபெர்பாமென்ஸில் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு 120 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இந்த 2023ம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். ஹார்லிடேவிட்சனின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கம்யூனிட்டியை கொண்டாட லிமிட்டெட் எடிசன் பைக்ககளை களம் இறக்கவுள்ளோம்." எனக் கூறினார்.

120ம் ஆண்டு நிறைவு விழா தீமை பொருத்தவரை ஹார்லி டேவிட்சன் ஸ்பெஷல் பெயிண்ட் தீமில் உருவாக்கியுள்ளது. இதன் பேஸ் கருப்பு நிறத்தை பேனலில் கொடுத்துள்ளனர். ஹேர்லூம் வடிவில் சிவப்பு லைன் கொடுக்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஹார்லி டேவிட்சன் லோகாவும் சிவப்பு நிறத்திலும் எழுத்துக்களும், டேங்கில் அடர் சிவப்பு நிறத்தில் லோகோவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிமிட்டெட் எடிசன் பைக்குகளிலும் ஃப்யூயல் டேங்கில் லேசர் பேனல்கள் பொருத்தப்படுகிறது. இப்படியாகக் கீழ்க் கண்டவாறு பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

ஹார்லிடேவிட்சன் 120ம் ஆண்டு விழாவை முன்னிட்டு லிமிட்டட் எடிசனில் 7 பைக்குகள் தயாராகவுள்ளன. அதன் விபரங்கள் வருமாறு:

1. அட்ரா லிமிடெட் அனிவர்சரி - 1300 எண்ணம்

2. ட்ரை கிளைடு அல்ட்ரா அனிவர்சரி - 1100 எண்ணம்

3. ஸ்டிரீட் கிளைடு ஸ்பெஷல் அனிவர்சரி - 1600 எண்ணம்

4. ரோடு கிளைடு ஸ்பெஷல் அனிவர்சரி - 1600 எண்ணம்

5. ஃபேட் பாய் 114 அனிவர்சரி - 3000 எண்ணம்

6. ஹெரிடேஜ் கிளாசிக் 114 அனிவர்சரி- 1700 எண்ணம்

ஆகிய பைக்குகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பைக்குகள் அமெரிக்காவில் தான் பெரும்பாலும் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Harley Davidson 120th anniversary 7 limited edition bikes
Story first published: Saturday, January 21, 2023, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X