பார்க்க பழசு மாதிரி இருந்தாலும், இதுல புதுசா ஒரு விஷயம் இருக்கு! ஹீரோ கிளாமர் ஃபிளக்ஸி ஃப்யூயல் பைக் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பாளரான ஹீரோமோட்டாகார்ப் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஹீரோ கிளாமர் எக்ஸ் டெக் ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

ஹீரோ நிறுவனம் இந்தியாவில் அதிகமான டூவீலர்களை விற்பனை செய்யும் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் பல டூவீலர்கள் மக்கள் மனதைக் கவர்ந்தது. இந்நிறுவனம் தனது ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக்காக கிளாமர் எக்ஸ்டெக் பைக்கை நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

பார்க்க பழசு மாதிரி இருந்தாலும், இதுல புதுசா ஒரு விஷயம் இருக்கு! ஹீரோ கிளாமர் ஃபிளக்ஸி ஃப்யூயல் பைக் அறிமுகம்

இந்தியாவில் தற்போது ஃபிளக்ஸி ஃப்யூயல் பைக் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்திய அரசு பெட்ரோல் பயன்பாட்டில் தனது கொள்கையை மாற்றி எத்தனால் உடன் கலந்த பெட்ரோலை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 20 முதல் 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோல் தான் ஃபிளக்ஸ் ஃப்யூயல் என அழைக்கப்படுகிறது. இப்படியான கலப்பட பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்ட இன்ஜினை தான் ஃபிளக்ஸி ஃப்யூயல் இன்ஜின் என அழைக்கிறார்.

ஹீரோ நிறுவனம் தனது கிளாமர் எக்ஸ்டெக் பைக்கில் ஃபிளக்ஸி ஃப்யூயல் இன்ஜினை பொருத்தி இந்த பைக்கை காட்சிப்படுத்தியுள்ளனர். இது 20 முதல் 85 சதவீதமான எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜினை போலவே 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினை கொண்டது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்மில் 10.7 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்மபில் 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் பெட்ரோல் இன்ஜினை போலவே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

பார்க்க பழசு மாதிரி இருந்தாலும், இதுல புதுசா ஒரு விஷயம் இருக்கு! ஹீரோ கிளாமர் ஃபிளக்ஸி ஃப்யூயல் பைக் அறிமுகம்

இந்த ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் ஃபிளக்ஸ் ஃப்யூயல் பைக்கின் அளவுகளை பொருத்தவரை 2051 மிமீ நீளம், 743 மிமீ அலகம் 1074 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல் பேஸ் 1273 மிமீ நீளம் கொண்டது. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரஸை பொருத்தவரை 180 மிமீ உயரம் இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் இந்த பைக் மெக்கானிக்கல் ரீதியில் சாதாரண பெட்ரோல் பைக்கை போலதான் இருக்கிறது. இன்ஜின் மட்டும் மாற்றம் பெறுகிறது. ஹீரோ நிறுவனம் இந்த ஃபிளக்ஸ் ஃப்யூயல் பைக்கின் மைலேஜ் குறித்த விபரங்களை வெளியிடவில்லை.

பார்க்க பழசு மாதிரி இருந்தாலும், இதுல புதுசா ஒரு விஷயம் இருக்கு! ஹீரோ கிளாமர் ஃபிளக்ஸி ஃப்யூயல் பைக் அறிமுகம்

இந்த ஃபிளக்ஸ் ஃப்யூயல் தொழிற்நுட்பத்தால் சாதாரண பெட்ரோல் பைக்கை விடக் குறைவான புகையையே வெளியேற்றும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதிகமாக ஃபிளக்ஸி ஃப்யூயல் பைக் விற்பனையாகும் நிலையில் ஒட்டு மொத்தமாக வெளியேறும் மாசு அளவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero showcased glamour xtec flex fuel bike in auto expo 2023
Story first published: Saturday, January 14, 2023, 12:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X