புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியர்களுக்காக புத்தம் புதிய ஸூம் எனும் ஸ்கூட்டரை தயாரித்து இருப்பதாகவும், அதை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக போற்றப்படும் ஹீரோ மோட்டோகார்ப், வெகு விரைவில் நாட்டில் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் புதிய டீசர் படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. ஸூம் எனும் பெயரிலேயே புதுமுக எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இது ஓர் 110 சிசி ஸ்கூட்டர் என கூடுதல் முக்கிய தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

ஹீரோ ஸூம்

வர 30ம் தேதி அறிமுகமாக போகுது

மேலும், இதன் அறிமுகம் வரும் 30 ஆம் தேதி அன்று அரங்கேற இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது இந்திய சந்தையில் 125 சிசி இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில் 110 சிசி இருசக்கர வாகனங்களுக்குமான வரவேற்பும் நல்ல அளவிலேயே உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் 110 சிசி இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஜூம் ஸ்கூட்டர் மாடலைக் களமிறக்க திட்டம் போட்டு இருக்கின்றது.

செல்போனை இணைச்சுக்கலாம்

இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகளை இந்த 110 சிசி ஸ்கூட்டரில் ஹீரோ மோட்டோகார்ப் வழங்க இருக்கின்றது. அந்தவகையில், செல்போன் இணைப்பு தொழில்நுட்பம், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் முற்றிலும் கவர்ச்சிகரமான தோற்றம் ஆகியவற்றுடனேயே இந்த புதுமுக ஸ்கூட்டரை அது தயாரித்து இருக்கின்றது. இதன் வருகை ஹோண்டா டியோவிற்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ ஸூம்

ஐ3எஸ் பட்டன் கொடுத்திருக்காங்க

110 சிசி பிரிவில் போட்டி பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே, இன்னும் பல அம்சங்கள் புதிய ஸூம் ஸ்கூட்டரில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, எல்இடி ஹெட்லைட், எக்ஸ் ஸ்டைலிலான முகப்பு பகுதி, பெரிய ஸ்டோரேஜ் வசதி, ஸ்விட்சபிள் ஐ3எஸ் பட்டன் போன்ற அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன. ஐ3எஸ் பட்டன் என்பது எரிபொருளை தேவைக்கேற்ப நிறுத்துதல் மற்றும் உட்செலுத்துலைச் செய்யக் கூடிய அமைப்பு ஆகும்.

ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்டூரமென்ட் க்ளஸ்டர் கொடுத்திருக்காங்க

இந்த நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரை தவிர மற்ற அனைத்திலும் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரே இந்த ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதிலேயே நிறுவனத்தின் அட்டகாசமான எக்ஸ்டெக் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கின்றது. கருவி ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், நேரம், எரிபொருளின் அளவு மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களைத் தாங்கியதாக இருக்கும். இதுமட்டுமின்றி, திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலையும் இந்த கருவி வழங்கும்.

டியோவிற்கு ஆப்பு ரெடி

இத்தகைய மிக சூப்பரான அம்சங்களுடனேயே ஹீரோ மோட்டோகார்ப்பின் புதிய ஸ்கூட்டர் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதிக்க இருக்கின்றது. எனவே இதன் வருகை ஹோண்டா டியாவிற்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக சமீபத்திலேயே விடா வி1 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனையைத் தொடர்ந்து சென்ற மாதத்தின் இறுதியிலேயே மின்சார ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கின.

விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதன் வருகையை இந்தியாவின் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்தது. இத்துடன், அந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் ஆகியவற்றிற்கும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இரு விதமான வேரியண்டுகளில் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ எனும் தேர்விலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் விடா வி1 ப்ளஸ் தேர்விற்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் விலையும், விடா வி1 ப்ரோ தேர்விற்கு 1 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலையைப் போலவே இவற்றின் ரேஞ்ஜ் திறனும் சற்று மாறுபட்டு இருக்கும். வி1 பிளஸ் ஓர் முழு சார்ஜில் 143 கிமீ ரேஞ்ஜையும், விடா வி1 ப்ரோ 165 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும்.

விடா வி1 இ-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களைப் பொருத்தவரை 7 அங்குல ஓடிஏ எனேபில்ட் டிஎஃப்டி திரை, முன் பக்கத்தில் டிஸ்க்கும் - பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் சிபிஎஸ் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பிஎல்இ, 4ஜி மற்றும் ஒய்ஃபை இணைப்பு வசதியும் இந்த இ-ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பு வசதிகளாக திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், டிராக் மை பைக், ஜியோ ஃபென்ஸ் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கும்.

Most Read Articles
English summary
Hero xoom 110cc scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X