ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...

ஹீரோ மோட்டோகார்ப் அண்மையில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் அதன் ஸும் எனும் புதுமுக ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது இதன் வருகையால் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில ஸ்கூட்டர்களின் விற்பனை பாதிப்படையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாகவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹும் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதன் விளைவாக முன்னதாக டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா அல்லது டியோவை வாங்க திட்டம் போட்டிருந்தவர்களின் கவனம் ஹீரோ ஸும்-இன் பக்கம் திரும்பி இருக்கின்றது. இதன் தாக்கம் அடுத்து வரும் நாட்களில் தெரியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, ஹீரோ ஸும் ஸ்கூட்டரின் வருகையால் ஆக்டிவா, டியோ மற்றும் ஜுபிடர் ஆகியவற்றின் விற்பனையில் லேசான ஏற்றம் - இறக்கம் தென்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவாவின் இடத்தை இது காலி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ ஸும்

மிகக் குறைவான விலையில் பற்பல அம்சங்களைத் தாங்கிய 110 சிசி ஸ்கூட்டராக ஸும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் குறைந்தபட்ச விலை ரூ. 68.5 ஆயிரம் ஆகும். அதேவேளையில் இதன் உச்சபட்ச விலையே ரூ. 76.6 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான விலை ஆகும். இதனால்தான் ஹோண்டா, டியோ மற்றும் ஜுபிடருக்கு இதன் வருகை மிகவும் டஃப் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. விலையில் மட்டுமில்லைங்க ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த ஸ்கூட்டருக்கு கடுமையான போட்டியளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது.

ஹீரோ ஸும்

ஸும் ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் 1,881 மிமீ நீளம், 717 மிமீ அகலம், 1,118 உயரம் 108-108 கிலோ எடையில் உருவாக்கி இருக்கின்றது. இதன் பூட் ஸ்பேஸ் அளவு பற்றிய விபரம் தெரியவில்லை. சீட் உயரம் 770 மிமீ ஆகும். முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் மோனோ சஷ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மட்டும் அதன் போட்டியாளர்களுடன் ஸும் ஒத்துப் போகின்றது. ஆமாங்க, ஹோண்டா ஆக்டிவா, டியோ மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகிய அனைத்திலும் சஸ்பென்ஷனுக்காக இந்த அம்சத்தையே அந்தந்த நிறுவனங்கள் பயன்படுத்தி இருக்கின்றன.

ஹீரோ ஸும்

பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்தவரை முன்பக்க வீலில் டிரம் அல்லது டிஸ்க் ஆப்ஷனையும், பின் பக்க வீலில் டிரம் ஆப்ஷனை மட்டுமே ஹீரோ வழங்குகின்றது. வீலை பொருத்தவரை முன் மற்றும் பின் பக்கத்தில் 90/90-12 அளவுள்ள டயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டமாக ஐபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் 8.05 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. கியர்பாக்ஸாக சிவிடியே வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி ஹெட்லைட், ஹாலோஜன் ரக டெயில்லைட், எக்ஸ்டெக் இணைப்பு அம்சம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் இதில் வழங்கப்படவில்லை. ஆனால், ஹோண்டா ஆக்டிவாவில் இது வழங்கப்பட்டு உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ

ஹோண்டா ஆக்டிவாவின் நீளம் 1,833 மிமீட்டராக இருக்கின்றது. இது ஸுமை விட சற்று குறைவாகும். இதேபோல் டியோவும் சற்று குறைவான நீளத்தைக் கொண்டதாகவே இருக்கின்றது. 1,808 மிமீ அதன் நீளம் ஆகும். ஆக்டிவாவின் அகலம் 697 ஆக இருக்கின்றது. இந்த விஷயத்தில் ஆக்டிவா மற்றும் ஸுமை டியோ வீழ்த்திவிட்டது. இதன் அகலம் 723 மிமீட்டராக உள்ளது. உயரத்தை பொருத்தவரையில் ஸுமை, ஆக்டிவா மற்றும் டியோ ஆகிய இரண்டும் வீழ்த்திவிட்டது. ஆக்டிவாவின் உயரம் 1156 மிமீ, டியோவின் உயரம் 1150 மிமீட்டராக இருக்கின்றது.

ஹீரோ ஸும்

வீல் பேஸில் ஆக்டிவா மற்றும் டியோ இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. 1260 மிமீ வீல்பேஸைக் கொண்டவை இவை ஆகும். இந்த விஷயத்தில் ஸுமே வெற்றியாளராக இருக்கின்றது. இதேபோல், எடை விஷயத்திலும் இந்த இரு ஸ்கூட்டர்களும் ஸுமை காட்டிலும் பின் தங்கியே இருக்கின்றது. 106 கிலோ மற்றும் 105 கிலோ எடைக் கொண்டதாக இவை இருக்கின்றன. பிரேக்கிங் சிஸ்டமாக இரண்டிலும் டிரம் பிரேக் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸுமில் வழங்கியதைப் போல் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 7.68 பிஎச்பி பவரையும், 8.84 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இது ஸுமைக் காட்டிலும் குறைவான திறன் வெளிப்பாடும். டியோ 7.65 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். என்எம் டார்க்கில் மட்டுமே டியோவும் ஸுமை வீழ்த்தியிருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவாவில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்டேஷனையும், டியோவில் டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்டேஷனையும் வழங்குகின்றது. இரண்டில் ஆக்டிவாவே அதிக விலைக் கொண்டதாக உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 74.5 ஆயிரம் ஆகும். அதேவேளையில், டியோ 68.6 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது ஸுமிற்கு இணையான விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் ஜுபிடர் 1,834 மிமீ நீளம், அகலம் 650 மிமீ, உயரம் 1115 மிமீ, வீல் 1275 மிமீட்டராக உள்ளது. இது அனைத்தும் ஸுமைக் காட்டிலும் குறைவே ஆகும். இதேபோல் எடை விஷயத்திலும் ஜுபிடர் குறைவானதாகவே இருக்கின்றது. இதன் எடை 107 கிலோ ஆகும். இது ஆக்டிவா மற்றும் டியோவைக் காட்டிலும் சற்று அதிகம் ஆகும். இதில் ஸுமை போல் டிஸ்க் பிரேக் தேர்வு வழங்கப்படுகின்றது. பிரேக்கிங் சிஸ்டமாக எஸ்பிடி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல் கூடுதல் சிறப்பு வசதிகளாக ஸ்மார்ட் எக்ஸோன்னெக்ட் இணைப்பு அம்சம், அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் வசதி உள்ளிட்டவை ஜுபிடரில் வழங்கப்படுகின்றது. இதன் விலை சற்று ஸுமைவிட அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றது. ரூ. 69.9 ஆயிரம் இதன் ஆரம்ப விலை ஆகும்.

இந்த விலை உட்பட இந்த பதிவில் பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Hero xoom vs rivals
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X