எவ்ளோ பெரிய களவானியா இருந்தாலும் ஆக்டிவா ஸ்கூட்டரை இனி திருட முடியாது... சூப்பரான அப்டேட்டோட வர போகுது!

ஆக்டிவா ஸ்கூட்டரின் அப்டேட்டட் வெர்ஷனில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய விபரம் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக ஆக்டிவா ஸ்கூட்டர் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் இருசக்கர வாகனமாகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலும் இதுவே ஆகும். இந்த டூ-வீலரின் புதிய வெர்சனையே ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய வெர்ஷனில் என்ன சிறப்புகள் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆக்டிவா

திருடுவது ரொம்ப கஷ்டம்

ஆக்டிவா 6ஜி இல் பல்வேறு சிறப்பு அம்சங்களை அப்டேட் வாயிலாக ஹோண்டா நிறுவனம் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா இக்னிசன் செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் எச்-ஸ்மார்ட் எனும் பெயரின்கீழே நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆம், ஹோண்டா நிறுவனம் இந்த அப்டேட்டட் வெர்ஷனை ஆக்டிவா 6ஜி எச்-ஸ்மார்ட் எனும் பெயரிலேயே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ஆர்டிஓ-வுக்கான ஆவணம் கசிவு

ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதேவேளையில், தற்போது இணையத்தில் கசிந்திருக்கும் சில முக்கிய தகவல்கள் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆர்டிஓ-விற்காக ஆக்டிவா 6ஜி குறித்து ஹோண்டா தயாரித்து வைத்திருந்த சில முக்கிய ஆவணங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்து உள்ளன. இந்த தகவல் கசிவின் வாயிலாகவே ஆக்டிவா 6ஜி பற்றிய பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

ஆக்டிவா

வரவேற்பை இரட்டிப்பாக்க முயற்சி

இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரு மடங்காக்கும் நோக்கிலேயே ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6 ஜியில் பல்வேறு சிறப்பம்சங்களைச் சேர்க்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த அப்டேட்டட் வெர்ஷன் ஆக்டிவா இன்னும் ஒரு சில தினங்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பது உறுதியாகி உள்ளது. வரும் 23 ஆம் தேதி இதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனை ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மேலும், இருசக்கர வாகன அறிமுகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் தயார் செய்துவிட்டது. ஹோண்டா நிறுவனம் தற்போது தனது விலையுயர்ந்த பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களில் மட்டுமே ஆன்டி தெஃப்ட் அலாரம் மற்றும் ஹோண்டா இக்னிசன் செக்யூரிட்டி சிஸ்டம் போன்ற அம்சங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அம்சங்களையே தனது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவாவிலும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆக்டிவா

விலை அதிகமாக வரலாம்

சிறப்பு வசதிகள் சேர்ப்பின் காரணமாக இருசக்கர வாகனத்தின் எடை லேசாக உயர்ந்திருப்பதை தற்போது வெளியாகியிருக்கும் ஆவணங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி 73 ஆயிரம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட சற்று அதிக விலையிலேயே புதிய ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃப்ளெக்ஸி ஃப்யூவல் எக்ஸ்ஆர்இ 300 ரேலி

ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் இருசக்கர வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஓர் சம்பவத்தை நிகழ்த்தியது. 2023 ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாம் நாளில் நிறுவனம் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கக் கூடிய எக்ஆர்இ 300 ரேலி எனும் புதிய இருசக்கர வாகன மாடலை காட்சிப்படுத்தியது. நிறுவனம் அடுத்தடுத்ததாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இருசக்கர வாகன மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வாகனத்தின் ஸ்பெஷலே இ20 (E20) - இ85 (E85) ரக எரிபொருளில் இயங்கும் என்பதுதான். அதாவது, குறைவான பெட்ரோல் அதிகம் எத்தனால் சேர்க்கப்பட்ட மலிவு விலை எரிபொருளில் இது இயங்கும். இத்தகைய ஓர் மோட்டார்சைக்கிளையே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்தியாவில் வெளியீடு செய்தது. எக்ஸ்ஆர்இ 300 ரேலி மோட்டார்சைக்கிளை சற்று முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட டூ-வீலராக நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. அதிக பேனல்கள் கொண்ட ஃப்யூவல் டேங்க், ஸ்வெப்ட் பேக் ரக எக்சாஸ்ட், சற்று உயரமான பின் பக்க இருக்கை அமைப்பு, ஒற்றை துண்டு பிரீமியம் தர இருக்கை உள்ளிட்டவை பைக்கின் முரட்டுத் தனமான தோற்றத்திற்காக சேர்க்கப்பட்டு உள்ளன.

Most Read Articles
English summary
Honda activa 6g document leaked
Story first published: Tuesday, January 17, 2023, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X