கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!

2023 ஹோண்டா ஆக்டிவா 6ஜி (2023 Honda Activa 6G) ஸ்கூட்டர், இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா ஸ்மார்ட் கீ தொழில்நுட்பம் (Honda Smart Key Technology) வழங்கப்பட்டிருப்பதுதான், இந்த புதிய மாடலின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இந்த தொழில்நுட்ப வசதியை ஹோண்டா நிறுவனம் முதல் முறையாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

2023 ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர், மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அவை ஸ்டாண்டர்டு (Standard), டீலக்ஸ் (Deluxe) மற்றும் (Smart) ஆகியவை ஆகும். இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 74,536 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீலக்ஸ் வேரியண்ட்டின் விலை 77,036 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை 80,537 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!

இதில் ஸ்மார்ட் வேரியண்ட்டில், ஹோண்டா ஸ்மார்ட் கீ வசதி வழங்கப்பட்டுள்ளது. 'பிஸிக்கல் கீ' இல்லாமலேயே, ஹேண்டில் பாரை லாக் மற்றும் அன்லாக் செய்வதற்கு இது உதவி செய்கிறது. அத்துடன் இருக்கையை திறந்து, மூடுவது மற்றும் எரிபொருள் டேங்க் மூடியை திறந்து, மூடுவது ஆகியவற்றையும் 'பிஸிக்கல் கீ' இல்லாமலேயே இதன் மூலமாக செய்ய முடியும். கார்களில் உள்ள 'கீலெஸ் எண்ட்ரி' வசதியை போன்று இது செயல்படும்.

பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும்!

இந்த வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், ஸ்மார்ட் கீ-யை பாக்கெட்டில் வைத்திருந்தால் மட்டும் போதுமானது. மேலும் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பார்க்கிங் ஏரியாவில், உங்கள் ஸ்கூட்டரை கண்டறிவதற்கும் இந்த ஸ்மார்ட் கீ உதவி செய்கிறது. பொதுவாக பார்க்கிங் பகுதியில் நமது வாகனம் எங்கே நிற்கிறது? என்பதை கண்டறிவது மிகவும் சிரமமான விஷயங்களில் ஒன்றாக மாறி விடுகிறது. ஆனால் இந்த பிரச்னை உங்களுக்கு ஏற்படுவதை, ஹோண்டா ஸ்மார்ட் கீ தடுக்கும்.

பட்டனை அழுத்தினால் நடக்கும் அதிசயம்!

ஸ்மார்ட் கீ-யில் உள்ள பட்டனை நீங்கள் அழுத்தினால், உங்கள் ஸ்கூட்டரின் 4 இன்டிகேட்டர்களும் 2 முறை 'பிளிங்க்' ஆகும். இதை வைத்து, பல்வேறு வாகனங்களுக்கு மத்தியிலும் கூட உங்கள் ஸ்கூட்டர் எங்கே நிற்கிறது? என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள அதே 110 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான், ஸ்மார்ட் கீ வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனை உயரும்!

அதேபோல் 2023 ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில், சஸ்பென்ஸன் மற்றும் பிரேக்குகளிலும் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஹோண்டா ஆக்டிவா இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இந்த சூழலில், கார்களை போன்ற ஸ்மார்ட் கீ வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என ஹோண்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

வருகிறது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஹோண்டா நிறுவனம் ஸ்மார்ட் கீ வசதியுடன், 2023 ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Honda Activa Electric Scooter) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இதற்கான பணிகளை ஹோண்டா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இத்தனை நிறுவனங்களுக்கும் செக்!

இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) ஆகிய பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அவற்றுக்கு நேரடி போட்டியாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூடிய விரைவில் களத்தில் இறங்கவுள்ளது.

Most Read Articles

English summary
Honda activa 6g with smart key launched in india all details here
Story first published: Monday, January 23, 2023, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X