ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு (Two Wheelers) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இன்ஜின் தரமாக இருப்பதும், சௌகரியமான பயணம் கிடைப்பதும்தான், ஹோண்டா நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் கண்ணை மூடி கொண்டு நம்பி வருவதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

ஆனால் இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனத்திடம் அத்தகைய தயாரிப்புகள் எதுவும் இல்லை. எனினும் இந்த குறையை போக்குவதற்கு ஹோண்டா நிறுவனம் தற்போது தயாராகி விட்டது. ஆம், இந்திய சந்தையில் வெகு விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளை ஹோண்டா நிறுவனம் தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

இந்திய சந்தைக்கான ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வரவிருப்பது, ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Honda Activa Electric Scooter) ஆகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது. அனேகமாக 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்ளோ பேருக்கும் செக்!

ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X), ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் (Hero Vida V1) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

எனினும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், ஓட்டுபவர்களுக்கு முழுமையான சௌகரியத்தை வழங்க கூடியதாகவும் இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது விற்பனை செய்யப்படும் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அதே சஸ்பென்ஸன் மற்றும் பிரேக்குகள்தான், ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

விலை எவ்வளவு இருக்கும்?

பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.58 லட்ச ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.40 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பிறகு, ஹோண்டா நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் கச்சிதமாகவும், குறைவான எடையிலும் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இவை இருக்கலாம். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், கழட்டி மாற்ற கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிரடி திட்டம்!

ஹோண்டா நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிரடி திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி 6 ஆயிரம் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சார்ஜ் தீர்ந்த பேட்டரிகளுக்கு பதிலாக, சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை இங்கு பெற்று கொள்ள முடியும். எனவே சார்ஜ் போடுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமத்தை இந்த பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் தீர்க்கும்.

ஹீரோ ஸ்பிளெண்டருக்கு செக்!

இதற்கெல்லாம் முன்னதாக மிகவும் குறைவான விலையில் புதிய 100 சிசி பைக் ஒன்றை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை களத்தில் இறக்கவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய பைக் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles
English summary
Honda activa electric scooter 100cc bike 6000 battery swapping stations details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X