குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). இங்கு புத்தம் புதிய 100 சிசி பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய 100 சிசி பைக்கை ஹோண்டா நிறுவனம் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கிற்கு நேரடி போட்டியாக, ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை களத்தில் இறக்கவுள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான அட்சுஷி ஒகாட்டா இந்த தகவலை ஏற்கனவே கூறியிருந்தார்.

குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!

அப்பவே சொல்லீட்டாங்க!

கடந்த 2021ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், ஹோண்டா நிறுவனம் புதிய 100 சிசி பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதன்படி இந்த புதிய பைக்கை ஹோண்டா நிறுவனம் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் (Shine), எஸ்பி 125 (SP 125) மற்றும் யூனிகார்ன் (Unicorn) ஆகிய பைக்குகளின் விற்பனை சிறப்பாக உள்ளது.

சிடி 110, லிவோ பைக்குகளை விட குறைவான விலை!

இதுதவிர ஹோண்டா சிடி 110 (Honda CD 110) பைக்கின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 71 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 110 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8.7 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஹோண்டா லிவோ (Honda Livo) பைக்கிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!

தற்போதைய நிலையில் ஹோண்டா லிவோ பைக், சுமார் 78 ஆயிரம் ரூபாய் முதல் 82 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக்கானது, இந்த 2 பைக்குகளுக்கும் கீழாக நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹோண்டா சிடி 110 மற்றும் ஹோண்டா லிவோ ஆகியவற்றை விட மிகவும் குறைவான விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக் விற்பனையில் சாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் பைக்குகளில் ஒன்றாக இது உருவெடுக்கலாம்.

மைலேஜையும் வாரி வழங்கும்!

இதற்கிடையே ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய 100 சிசி பைக், சிறப்பான மைலேஜை வழங்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான மைலேஜ் உடன், விலையும் குறைவாக இருக்கும் என கூறப்படுவதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மைலேஜ், விலை ஆகிய விஷயங்களின் மூலம், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு, ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா!

இந்திய சந்தையில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இன்னும் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இதில், ஹோண்டா நிறுவனமும் ஒன்று. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தைக்கான தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) உள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் முதலில் அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Honda affordable 100cc bike hero splendor rival india launch details
Story first published: Tuesday, January 24, 2023, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X