ஹோண்டா இந்த அளவுக்கு மோசமா போயிருச்சா! இப்படி ஆகும்னு யாரும் கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டாங்க!

சேல்ஸ் ரிப்போர்ட்:

2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,50,171 டூவீலர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இதன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஹோண்டா நிறுவனம் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில், 2,33,151 டூவீலர்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அதே நேரத்தில் எஞ்சிய 17,020 டூவீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். ஒட்டுமொத்தமாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 2,50,171 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா இந்த அளவுக்கு மோசமா போயிருச்சா! இப்படி ஆகும்னு யாரும் கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டாங்க!

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 2,23,621 டூவீலர்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட டூவீலர்களின் எண்ணிக்கை 2,10,612 ஆகும். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டூவீலர்களின் எண்ணிக்கை 13,009 ஆகும். இதன் மூலம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 2,23,621 டூவீலர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை, 2,50,171 டூவீலர்களை விற்பனை செய்து, சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இவ்ளோ பெரிய வீழ்ச்சியா!

வருடாந்திர ஒப்பீட்டில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பது ஹோண்டா நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் மாதாந்திர ஒப்பீட்டில் ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,73,221 டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த டூவீலர்களின் எண்ணிக்கை வெறும் 2,50,171 மட்டுமே. அதாவது 1.23 லட்சம் டூவீலர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா இந்த அளவுக்கு மோசமா போயிருச்சா! இப்படி ஆகும்னு யாரும் கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டாங்க!

இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். ஆனால் ஹோண்டா நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த வீழ்ச்சியில் இருந்து ஹோண்டா நிறுவனம் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாம். ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், எஸ்பி125, ஷைன், யுனிகார்ன், லிவோ, எக்ஸ் பிளேடு, ஹார்னெட் 2.0, சிபி 200 எக்ஸ், சிடி 110 ஆகிய தயாரிப்புகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அதே நேரத்தில் ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், டியோ, ஆக்டிவா, க்ரேஸியா போன்ற மாடல்களையும், பிக் பைக் என்ற பெரிய பைக் செக்மெண்ட்டில் ஹைனெஸ் சிபி 350, சிபி 350 ஆர்எஸ், சிபி 500 எக்ஸ், சிபி 650 ஆர், சிபி 300 எஃப், சிபிஆர் 1000 ஆர்ஆர்-ஆர், ஆப்ரிக்கா ட்வின், சிபி 300 ஆர் மற்றும் சிபிஆர் 650 ஆர் ஆகிய தயாரிப்புகளையும் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

வருகிறது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதில், ஆக்டிவா ஸ்கூட்டருக்குதான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருந்து வருகிறது. எனவே ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால், தற்போது விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரீமியம் மாடல்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், பிரீமியம் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்காக இந்திய வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles
English summary
Honda motorcycle scooter india sales report december 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X