முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!

ஹோண்டா நிறுவனம் கடந்த 2023 ஜனவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இந்நிறுவனம் 16 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. பலரும் எதிர்பாராத இந்த சந்திப்புக்கு என்ன காரணம்? இதனால் நடக்கப்போவது என்ன? காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் டூவீலர்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் பல வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. இந்நிறுவனத்தின் வாகனத்தின் தரம் மக்கள் மத்தியில் பெயர் பெற்றது. தரமான வாகனங்களை விற்பனை செய்வதால் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத விற்பனை அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!

அதன்படி கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 2,96,363 வாகனங்களை அந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது. இது கடந்தாண்டு ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 16.32 சதவீதம் குறைவாகும். கடந்தாண்டு ஜனவரி மாதம் மொத்தம் 3,54,209 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கடந்த மாத விற்பனை ஹீரோ நிறுவனத்தின் விற்பனையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகும். ஹீரோ நிறுவனம் கடந்த மாதம் 3.57 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் கடந்த மாத விற்பனையைப் பிரித்துப் பார்க்கும் போது உள்நாட்டு விற்பனையில் 2,78,143 வாகனங்கள் வறி்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிட்டால் 11.76 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது கடந்தாண்டு 3,15,196 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

ஏற்றுமதியைப் பொருத்தவரை மொத்தம் 18,220 வாகனங்கள் கடந்த ஜனவரி மாதம் ஏற்றுமதியாகியுள்ளது. இதைக் கடந்தாண்டு ஜனவரி மாத ஏற்றுமதியோடு ஒப்பிட்டால் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மொத்தம் 53.30 சதவீதம் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் மொத்தம்
39,013 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது.

இது குறித்து ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் ஆட்சுஸி ஒகாடா கூறும்போது : " நாங்கள் நிறுவனத்திற்குள் பல மாற்றங்களைச் செய்துள்ளோம். அரசு நியமித்துள்ள கட்டுப்பாடுகளை அமல் படுத்த திட்டமிட்டுள்ளோம். ஹேண்டா தனது ஓபிடி2 மாடலை ஆக்டிவா ஸ்கூட்டரில் ஸ்மார்ட் கீ உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து அனைத்து மாடல்களிலும் கொண்டு வரவுள்ளோம். வரிசையாக அடுத்தடுத்த மாடல்கள் வெளியாகவுள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் ஆட்டோமொபைல் துறைக்குச் சாதகமாக இருக்கிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையை வளர்ப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறது. வாகன ஸ்கிராப்பிங் பாலிசி, கிரீன் மொபிலிட்டி, நெட்-ஜீரோ கார்பன் எமிஷன் கோல்ஸ் ஆகியன அரசின் முக்கிய கொள்கையாக இருக்கிறது" என கூறினார்.

ஹேண்டா நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாத விற்பனையைக் கடந்த டிசம்பர் விற்பனையுடன் ஒப்பிடும் போது 18.46 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெறும் 2,50,171 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. பண்டிகை காலத்திற்குப் பிறகு ஆட்டோமொபைல் விற்பனையில் மந்தம் ஏற்படுவது சாதாரண விஷயம் தான் ஆனால் ஹோண்டா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இந்த வீழ்ச்சி மிகவும் பெரியது. இதற்கு புதிய தயாரிப்புகள் இல்லை என்பது ஒரு காரணம்.

இதற்காகத் தான் ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் ஸ்மார்ட் கீ உடன் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் புதிதாக சில தயாரிப்புகளைக் களம் இறக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக 350 சிசி செக்மெண்டில் புதிய பைக்கை உருவாக்க முயன்று வருகிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Honda two wheeler sales drop 16 percent in Jan 2023
Story first published: Thursday, February 2, 2023, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X