ஹோண்டாவின் இந்த பைக் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்குமாம்... ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு!

ஹோண்டாவின் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் எக்ஸ்ஆர்இ 300 ரேலி மோட்டார்சைக்கிள் ஆட்டோ எக்ஸ்போ 2023இல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் மோட்டார்சைக்கிள் மாடலே இந்த ஹோண்டா எக்ஸ்ஆர்இ 300 ரேலி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கையே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. கூடிய விரைவில் இந்திய அரசாங்கம் நாட்டில் ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் வாகனங்களை கட்டாயமாக்க இருக்கின்றது.

ஹோண்டா எக்ஸ்ஆர்இ 300 ரேலி

வேகன்ஆர் ஃப்ளெக்ஸி ஃப்யூவல் கார்

ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் இப்போதே ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி அதன் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வேகன்ஆர் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த வெளியீட்டு நிகழ்வும் ஆட்டோ எக்ஸ்போ 2023லேயே அரங்கேறியது.

இந்த வாகனம் பொதுவெளியில் காட்சிப்டுத்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக சியாம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றிலேயே முதல் முறையாக ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வேகன்ஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஹோண்டா தனது முதல் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் இருசக்கர வாகனத்தை உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவைப் பயன்படுத்தி வெளியீடு செய்திருக்கின்றது.

ஹோண்டா எக்ஸ்ஆர்இ 300 ரேலி

இந்தியா சீக்கிரமே இ20 எரிபொருளுக்கு மாற போகுது

ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் இந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் இருசக்கர வாகனத்தை பிரேசிலில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதன் விற்பனையை இந்தியாவிலும் ஹோண்டா தொடங்க இருக்கின்றது. இந்த வாகனம் இ20 (E20) - இ85 (E85) ரக எரிபொருளில் இயங்கும். இந்தியா வெகு விரைவில் இ20 ரக எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற இருக்கின்றது.

ஆனால், இந்த வாகனமோ 85 சதவீதம் வரை எத்தனால் சேர்க்கப்பட்ட எரிபொருளில் இயங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஹோண்டாவின் இந்த பைக் ரேலி ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இதனால்தான் இருசக்கர வாகனத்தின் பெயரிலேயே ரேலி எனும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கின் தோற்றத்தை பிற பைக்குகளில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க செய்வதற்கு பல்வேறு சிறப்புகளை சேர்த்திருக்கின்றது.

ஹோண்டா எக்ஸ்ஆர்இ 300 ரேலி

அட்டகாசமான லுக்

குறிப்பாக உயர்த்தப்பட்ட கை பிடிகள் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இது பைக்கை முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட டூ-வீலராக காட்சியளிக்கச் செய்கின்றது. இத்துடன், இந்த தேற்றத்திற்கும் மேலும் பலம் சேர்க்கும் வகையில் அதிக பேனல்கள் கொண்ட ஃப்யூவல் டேங்க், ஸ்வெப்ட் பேக் ரக எக்சாஸ்ட், சற்று உயரமான பின் பக்க இருக்கை அமைப்பு, ஒற்றை துண்டு பிரீமியம் தர இருக்கை உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன.

சூப்பரான சஸ்பென்ஷன்

எக்ஸ்ஆர் ரேலி பைக்கில் ஒயர்டு ஸ்போக் வீலே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆஃப்-ரோடுகளை சமாளிப்பதற்கான டயர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, சிறந்த சஸ்பென்ஷனுக்காக அப்-ஃப்ரண்ட் டெலிஸ்கோபிக் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மோட்டார்

இவை இரண்டும் ஷார்ப்பான பிரேக்கிங்கை வழங்கும் திறன் கொண்டவை. மோட்டாரை பொருத்தவரை ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கக் கூடிய 291.7 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலண்டர் டிஓஎச்சி, ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 25.6 பிஎச்பி பவரையும், 27.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான பைக்கையே இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா வெளியீடு செய்திருக்கின்றது. இதன் வருகை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda xre 300 rally flex fuel unveiled auto expo
Story first published: Saturday, January 14, 2023, 9:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X