ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஐ-கோவைஸ் மொபைலிட்டி (iGowise Mobility) அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி மற்றும் ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

செல்ஃப்-பேலன்ஸிங் வசதி கொண்ட பெய்கோ எக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

பெய்கோ எக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நெருப்பால் பாதிப்படையாத லைஃப் பி.ஒ4 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 3 சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடவசதிக்கு எந்தவொரு குறையும் இல்லை. ஓட்டுனர் கால்களை வைத்து கொள்வதற்கு நன்கு விசாலமான இடம் வழங்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, இருக்கைகளுக்கு அடியில் சுமார் 60 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கை பயணி தனது கால்களை வைத்து கொள்வதற்காக ஸ்டாண்டர்டாக ஃபுட்ரெஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக ட்ரிபிள்-டிஸ்க் ஆண்டி-ஸ்கிட் பிரேக் சிஸ்டம் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டருக்கு பின்பக்கத்தில் இரு சக்கரங்களுக்கும் இயக்க ஆற்றலை வழங்க பவர்-ட்ரெயின் தொழிற்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பமே ஸ்கூட்டரை எந்தவொரு பிடிமானமும் இன்றி தன்னிச்சையாக நிற்கவும் வைக்கிறது.

செல்ஃப்-பேலன்ஸ் இருப்பதால், பெய்கோ எக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது நீங்கள் ஃபுட்போர்டில் இருந்து கால்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது எனவும், ஏறுமுகமான சாலையில் ஏறும்போதும், ரிவர்ஸில் வரும்போது கூட கால்களை சாலையில் வைக்காமல் பயணிக்கலாம் எனவும் ஐ-கோவைஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எளிமையாக சொந்தமாக்கி கொள்வதற்கு வசதியாக பூஜ்ஜிய-டவுன்-பேமண்ட் மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த ஐ-கோவைஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெய்கோ எக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் குறித்த எந்த விபரமும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் ரூ.1.1 லட்சத்தில் இதன் அறிமுக விலையினை எதிர்பார்க்கிறோம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்க்கு 5-வருட/1 லட்ச கிமீ பயணத்திற்கான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு ஐ-கோவைஸ் மொபைலிட்டி வழங்கவுள்ளது. பெய்கோ எக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூரில் தான் தயாரிக்கப்பட உள்ளது.

ஐ-கோவைஸ் மொபைலிட்டி நிறுவனத்திற்கு பெங்களூரில் வைட்ஃபீல்டு பகுதியில் தொழிற்சாலை உள்ளது. சற்று சிறிய தொழிற்சாலையான இதில் வருடத்திற்கு 30,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியுமாம். விரைவில் தானியங்கி கருவிகள் மற்றும் சோதனை கருவிகளுக்காக முதலீடு செய்யவுள்ளதாக ஐ-கோவைஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெய்கோ எக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு குறித்து ஐ-கோவைஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் முதன்மை அதிகாரி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "செல்ஃப்-பேலன்ஸிங் ஸ்கூட்டரை உருவாக்கும் முயற்சியில், ஐ-கோவைஸின் என்ஜினீயரிங் குழு செயல்படுதிறன் மற்றும் சுறுசுறுப்பு திறனில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாமல், விலையுயர்ந்த/அதிக ஆற்றல் தேவைப்படும் தொழிற்நுட்ப கருவிகளை பயன்படுத்தாமல் இத்தகைய தயாரிப்பை கொண்டு வருகிறது. ஸ்மார்ட் பி.எம்.எஸ், ADAS, மோதல் கண்டறியும் அலாரம் மற்றும் டேட்டாக்கள் மூலம் ரைடிங் ஸ்டைலை அடையாளம் காணுதல் உள்ளிட்டவற்றில் எங்களது பலம் அடங்கியுள்ளது" என்றார்.

Most Read Articles
English summary
Igowise mobility all set to unveil self balancing beigo x4 electric scooter
Story first published: Wednesday, January 25, 2023, 15:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X