எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?

நம் நாட்டில் பலருக்கு தெரிந்த பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஜாவா-வும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சமயத்தில் கொடிக்கட்டி பறந்த இந்த நிறுவனம் பின்னர் சில காரணங்களால் எந்தவொரு வாகனத்தையும் உற்பத்தி செய்யாமல் இருந்த நிலையில் கடந்த 2018இல் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மூலமாக மீண்டும் புத்துயிர் பெற்றது.

அந்த சமயத்தில் மொத்தம் 3 மோட்டார்சைக்கிள்கள் ஜாவா பிராண்டில் களமிறக்கப்பட்டன. அதில் ஒன்றான '42' பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் 'தவாங்' என்ற பெயரில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவாங் என்பது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொன்பா சமூகத்தினரால் அவர்களது புதிய வருடத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இதனாலேயே புதிய ஜாவா 42 தவாங் எடிசன் பைக் அருணாச்சல பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய ஜாவா 42 தவாங் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

அதாவது, நமது தமிழ்நாட்டில் இந்த பிரத்யேக 42 பைக் பதிப்பை விற்பனைக்கு பெற முடியாது. இருப்பினும் இந்த பைக்கை வாங்க நினைப்போர் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜாவா டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளலாம். அப்போதும் கூட இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கை வாங்குவது சற்று கடினம் தான். ஏனெனில் புதிய ஜாவா 42 தவாங் பைக்கை மொத்தமாகவே வெறும் 100 யூனிட்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜாவா 42 பைக்கின் வழக்கமான ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரிப் ஆல்ஸ்டார் ப்ளாக் வேரியண்ட்டின் அடிப்படையில் தவாங் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த வேரியண்ட்டில் கிடைக்கப்பெறும் அத்தனை அம்சங்களும் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கிலும் கிடைக்கும். அத்துடன் கூடுதலாக, திபெத்திய கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரமான லுங்க்டா எனப்படும் காற்று குதிரையை பிரதிப்பலிக்கும் அம்சங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, பைக்கின் முன்பக்க மட்கார்ட்டிலும், பெட்ரோல் டேங்கிலும் லுங்க்டா குதிரையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரத்தை சுட்டிக்காட்டும் அம்சங்களும் பைக்கை சுற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படவுள்ள ஜாவா 42 தவாங் பைக்குகள் ஒவ்வொன்றிலும் 1இல் 100 வரையிலான எண்கள் அலுமினியத்திலான தகட்டில் குறிப்பிடப்பட உள்ளன. மற்றப்படி என்ஜின் உள்பட பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஜாவா 42 பைக்கில் 294.72சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 26.84 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய 42 தவாங் ஸ்பெஷல் எடிசன் பைக்கை அறிமுகம் செய்து பேசிய ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சிஇஒ அஷிஷ் சிங் ஜோஷி, "இருசக்கர வாகன ஆர்வலர்களாக நாங்கள் அருணாச்சலத்தின் கண்ணை கவரக்கூடிய காட்சிகள் மற்றும் அற்புதமான சாலைகளை மிகவும் விரும்புகிறோம்.

புதிய ஜாவா 42 தவாங் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

செழுமையான கலாச்சாரம் மற்றும் அவற்றை தொடர்புடைய புனையப்பட்ட கதைகள் மோட்டார்சைக்கிள் பயணங்களை செழுமையாக்குகின்றன. அதை புதிய ஜாவா 42 தவாங் பதிப்பின் மூலம் நாங்கள் பாராட்டுகிறோம். ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருக்கும் பயண அனுபவங்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜாவா மற்றும் யெஸ்டி ரைடர்களுக்கும் இதை சொர்க்கமாக மாற்றுகின்றன" என்றார். அஷிஷ் சிங் ஜோஷி ஜாவா மட்டுமின்றி யெஸ்டி பிராண்டிற்கும் தலைமை நிர்வாக இயக்குனராக உள்ளார்.

பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்த ஜாவா பிராண்டிற்கு சந்தையில் கிடைத்துவரும் வரவேற்பை கண்டு, கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மற்றொரு பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்டான யெஸ்டிக்கும் கடந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் மறுபிறப்பு அளித்தது. ஜாவா பிராண்டை போல் முதற்கட்டமாக யெஸ்டி பிராண்டில் இருந்தும் 3 மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் களமிறக்கப்பட்டன. யெஸ்டி ரோட்ஸ்டர், அட்வென்ச்சர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் என்பன அந்த 3 மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa
English summary
New jawa 42 tawang edition bike launched in arunachal pradesh
Story first published: Monday, January 23, 2023, 21:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X