ராயல் என்பீல்டு மீட்டியோரே தோத்திடும்போல... இந்தியர்களுக்கு பிடிச்ச ஸ்டைலில் புதிய க்ரூஸரை தயாரிக்கும் ஒகினவா!

இத்தாலியைச் சேர்ந்த டேசிடா நிறுவனத்தோடு ஒகினாவா ஆட்டோடெக் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணியின் வாயிலாக நிறுவனம் புதிய க்ரூஸர் ரக பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினவா ஆட்டோடெக் (Okinawa Autotech) இந்தியாவில் மிக சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு உள்ளது. நிறுவனம் இதற்காக இத்தாலியைச் சேர்ந்த ஓர் மின் வாகன உற்பத்தியாளருடன் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டேசிடா (Tacita) எனும் இத்தாலி நாட்டு நிறுவனத்துடனேயே ஒகினவா தனது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

எலெக்ட்ரிக்

ஒகினாவா நிறுவனம் பெரும் முதலீட்டு திட்டத்துடன் இந்தியாவில் செயல்படத் தொடங்கியிருக்கின்றது. இது ஓர் புதிய முதலீட்டு திட்டம் ஆகும். புதுமுக இருசக்கர வாகனங்களை உருவாக்குவதே இந்த பெரும் முதலீட்டின் நோக்கமாக உள்ளது. தற்போது இந்திய மின் வாகன சந்தையில் பலமடங்கு போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. ஓலா போன்ற முன்னணி நிறுவனங்களின் வருகை இந்த நிறுவனத்திற்கு பெருத்த சவால்களை ஏற்படுத்தி இருக்கின்றது என்றே கூறலாம்.

இந்த சூழல் காரணமாகவே ஒகினவா புதிய முதலீட்டு திட்டம் மற்றும் வேற்று நிறுவனங்களுடன் கூட்டணி என்கிற அடுத்தகட்ட முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய கூட்டணியின்கீழ் ஒகினாவா நிறுவனம் சூப்பரான க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் க்ரூஸர் இரசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் க்ரூஸர் ரக டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

எலெக்ட்ரிக்

ஆகையால், ஒகினவாவின் இந்த பைக், தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் மோட்டார் கொண்ட க்ரூஸர் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப மிகவும் அழகான எலெக்ட்ரிக் க்ரூஸராகவே இது உருவாக்கப்பட்டு வருகின்றது. நிறுவனத்தின் புதிய முயற்சிக்காக டேக்டியா நிறுவனத்தின் டெக்னிக்கல் குழு இந்தியா வந்திறங்கி உள்ளனர். இதுதவிர இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை இந்த பணிக்காக களமிறக்க நிறுவனம் திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பணியாளர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பயிற்சி அளிக்கும் நிறுவனம் திட்டம் தீட்டி இருக்கின்றது. ஆகையால், வரும் காலத்தில் வேற லெவல் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக டேசிடா நிறுவனத்துடன் இணைந்து டி க்ரூஸ் டூரிஸ்மோ மற்றும் டி க்ரூஸ் அர்பன் ஆகிய இரு க்ரூஸர் ரக பைக்குகளையே நிறுவனம் முதலில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலெக்ட்ரிக்

இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் ஆகிய வசதிகள் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக ஐ-பிரைஸ் பிளஸ், பிரைஸ் ப்ரோ, ரிட்ஜ் பிளஸ், ஆர்30 மற்றும் லைட் ஆகியவையே உள்ளன. இதுதவிர இன்னும் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மேலும், நிறுவனம் தனது மின்சார இருசக்கர வாகனங்களை லோ ஸ்பீடு (குறைவான வேகம்) மற்றும் ஹை ஸ்பீடு (அதிக வேகம்) என இரு விதமான பிரிவுகளின்கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனங்களின் வரிசையிலேயே நிறுவனம் வெகு விரைவில் புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில் விரைவில் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இது என்ன மாதிரியான சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும், இணைப்பு அம்சம், அதிக ரேஞ்ஜ் திறன், தீ விபத்தைத் தவிர்க்கும் தொழில்நுட்ப வசதிக் கொண்ட பேட்டரி பேக் என எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் இந்த க்ரூஸர் பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது.ஆகையால், இதன் வருகை இப்போதே இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்ட செய்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Okinawa to be launch electric cruiser bike soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X