மாணிக்கமாக இருந்து பாட்ஷாவாக மாறிய ஓலா! இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல! நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மிகவும் குறுகிய காலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த சூழலில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2022ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட்டில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தை பங்கு 30 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கமாக இருந்து பாட்ஷாவாக மாறிய ஓலா! இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல! நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!

இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சிகளில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனுபவ மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 100க்கும் மேற்பட்ட அனுபவ மையங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக மேலும் 100 அனுபவ மையங்களை திறப்பதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அவை ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகியவை ஆகும். இதுதவிர ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் களத்தில் இறக்கியது.

ஆனால் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில்தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கப்பட்ட பிறகு, இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் கிடுகிடுவென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மிகவும் குறைவு என்பதுதான் இதற்கு காரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஓலா எஸ்1 ஏர் தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாயாக இருக்கிறது.

ஆனால் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெறும் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதன் காரணமாக ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது என்பதை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். டெலிவரியில் தாமதம், தீ விபத்து சம்பவங்கள் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடக்கத்தில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டது.

இதன் காரணமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சந்தையில் தாக்குபிடிக்காது என்று கூட பலர் நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறாக உள்ளது. ஒரே மாதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் அளவிற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது முன்னேறியுள்ளது. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் என பல்வேறு தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய அவதாரத்தை எடுக்கவுள்ளது.

Most Read Articles
English summary
Ola sells over 25000 electric scooters in december 2022
Story first published: Monday, January 2, 2023, 23:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X