பஜாஜ் பிளாட்டினா, ஹீரோ ஸ்பிளெண்டரை இது மென்னு முழுங்கிடும்! தினமும் பயன்படுத்துறதுக்கு உகந்த இ-பைக் அறிமுகம்!

ப்யூர் இவி நிறுவனம் அதன் புதுமுக இ-பைக் மாடலான ஈகோ ட்ரிஃப்ட் (PURE EV ecoDryft)-ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த இன்னும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ப்யூர் இவி நிறுவனம் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக்கை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஈகோ ட்ரிஃப்ட் (PURE EV ecoDryft) எனும் புதுமுக மாடலையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மின்சார பைக்

இந்த குறைவான விலை காரணமாக இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக்குகளின் வரிசையில் ஈகோ ட்ரிஃப்டும் ஒன்றாக இணைந்துள்ளது. மேலே பார்த்த விலையில் டெல்லி வாசிகளால் மட்டுமே ப்யூர் இவி-யின் ஈகோ ட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் பைக்கை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டின் பிற மாநிலங்களில் இதே எலெக்ட்ரிக் பைக் 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன் ரோடு விலை சற்று கூடுதலா இருக்கும்

ஆன்-ரோடில் கூடுதல் விலைக் கொண்டதாக இது இருக்கும். இந்த மின்சார பைக்கை முன்னதாக கூறியதைப் போல் தினசரி பயன்பாட்டிற்கு உகந்ததாக ப்யூர் இவி உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை பெட்ரோல் கம்யூட்டர் பைக்குகளான ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதை அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாகவும் ப்யூர் இவி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

மின்சார பைக்

தொழில்நுட்ப வசதிகள் ஏராளம்

அந்தவகையில், ஸ்மார்ட் பிஎம்எஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஈகோ ட்ரிஃப்டில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஓர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து ஈகோ ட்ரிஃப்டை நவீன எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி இருக்கின்றது. இவை ரைடை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாகவே ஈகோ ட்ரிஃப்டில் ப்யூர் இவி வழங்கி இருக்கின்றது.

டாப் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?

இந்த மின்சார பைக் மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக 3 kW மின் மோட்டார் ஈகோ ட்ரிஃப்டில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், ஏஐஎஸ் 156 (AIS 156) சான்று பெற்ற 3.0 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் சுமார் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மின்சார பைக்

ரேஞ்ஜை அதிகரிக்க முடியும்

மின்சார சேமிப்பு யுக்தியைப் பயன்படுத்தி டூ-வீலரை இயக்கினால் இதைவிட அதிக ரேஞ்ஜை பெறவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதேவேளையில், பைக்கை அடிஅடி என அடித்து வெளுத்து வாங்கினால் சொன்னதைவிட குறைவான ரேஞ்ஜையே ஈகோ ட்ரிஃப்ட் வழங்கும். மூன்று விதமான ரைடிங் மோட்கள் இ-பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் நான்கு விதமான நிற தேர்வுகளில் இந்த மின்சார பைக்கை விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் ப்யூர் இவி அறிவித்துள்ளது.

நிற தேர்வு

கருப்பு, கிரே, ப்ளூ மற்றும் ரெட் ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். ப்யூர் இவி நிறுவனம் ஈகோ ட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் பைக்கை ஹைதராபாத்தில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்கின்றது. இங்கிருந்தே நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிற்கும் இங்கிருந்தே மின்சார பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்கான பணிகளையும் நிறுவனம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே ஏற்றுமதி செஞ்சிட்டு இருக்காங்க

நிறுவனம் ஏற்கனவே தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த நாடுகளிலேயே புதிய ஈகோ ட்ரிஃப்ட் பைக்கையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, ப்யூர் இவி. இந்தியாவில் ஏற்கனவே ஈகோ ட்ரிஃப்டிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த மின்சார பைக்கின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக ப்யூர் இவி சமீப சில காலமாக அதன் விற்பனையாளர்கள் ஷோரூம் வாயிலாகக் காட்சிப்படுத்தியும், டெஸ்ட் ரைடு வாய்ப்பையும் வழங்கியது.

ரெஸ்பான்ஸ் அமோகம்

அப்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ப்யூர் இவி. இதற்கு தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் டெலிவரி வழங்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மார்ச் மாத முதல் வாரத்தில் டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டீலர் மற்றும் ஆன்லைன் வாயிலாக புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன.

Most Read Articles
English summary
Pure ev ecodryft launched with range 130 km
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X