புது ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா! இந்த பேருக்காகவே ஷோரூம்களில் கூட்டம் அலை மோத போகுது பாருங்க!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. பழைமை, புதுமை என இரண்டும் கலந்த ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு, அந்தக்காலம் முதலே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக தொடர்ந்து பல்வேறு புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் களமிறக்கி வருகிறது.

இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கவனம், 650 சிசி செக்மெண்ட்டின் பக்கம் தற்போது தீவிரமாக திரும்பியுள்ளது. எனவே 650 சிசி இன்ஜின் திறனுடன் கூடிய பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஸ்க்ராம்ப்ளர் (Scrambler) ரகத்திலும், புதிய 650 சிசி பைக் ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

புது ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா! இந்த பேருக்காகவே ஷோரூம்களில் கூட்டம் அலை மோத போகுது பாருங்க!
Image used for representation purpose only

சோதனை ஓட்டம் தீவிரம்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக் ஏற்கனவே சாலைக்கு வந்து விட்டது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த புதிய பைக்கை தற்போது தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது, இந்த பைக் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக்கிற்கும், இந்த புதிய 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே இன்ஜின்!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே 649 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின்தான், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிலும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஸ்பென்ஸன்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் முன் பகுதியில், அப்சைடு-டவுன் ஃபோர்க் சஸ்பென்ஸனும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ட்யூயல் பர்பஸ் டயர்களும் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிசைனை பொறுத்தவரையில், வட்ட வடிவ ஹெட்லேம்ப், குறுகிய விண்டுஸ்க்ரீன், கண்ணீர் துளி வடிவிலான எரிபொருள் டேங்க் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தட்டையான இருக்கையை இந்த 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக் பெற்றிருக்கலாம். அத்துடன் மேல் நோக்கிய வகையிலான சைலென்சர் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்றாகும். இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்கின் பெயர் என்னவாக இருக்கும்? என்ற தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

இதுதான் பெயரா!

இதன்படி ஷெர்பா (Sherpa) என்ற பெயரில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து வெகு விரைவில் வெளியாகலாம். ஷெர்பா என்ற இந்த பெயர் வாடிக்கையாளர்களை கவர கூடிய வகையில் உள்ளதால், இந்த பெயரையே ராயல் என்பீல்டு நிறுவனம் இறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புது ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா! இந்த பேருக்காகவே ஷோரூம்களில் கூட்டம் அலை மோத போகுது பாருங்க!

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650

நாங்கள் ஏற்கனவே கூறியபடி, 650 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) என்ற புதிய பைக் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு பிறகுதான், ஷெர்பா என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வரும்.

Most Read Articles
English summary
Royal enfield 650 cc scrambler sherpa new details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X