இன்னும் 5-6 வருஷம் ஆகும்னு நினைச்சுட்டு இருந்தோம்... இவ்ளோ சீக்கிரமே ராயல் என்பீல்டுல இ-பைக் அறிமுகமாக போகுதா!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார பைக் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவும் இதை நோக்கி மிக வேகமாக நகரத் தொடங்கி இருக்கின்றது. இதன் விளைவாக வாகன உற்பத்தியாளர்கள் மிக தீவிரமாக மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். டிவிஎஸ் ஐ-க்யூப் மின்சார ஸ்கூட்டரையும், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஹீரோ மோட்டோகார்ப் விடா எனும் புதிய பிராண்டின்கீழ் வி1 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டிருக்கின்றன.

ராயல் என்பீல்டு

முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி சில புதுமுக நிறுவனங்களும் இந்தியாவில் அதிகளவில் எலெக்ட்ரிக் இருசக்க வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டும் இந்த பிரிவில் தனது முதல் எலெக்ட்ரிக் டூ-வீலரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிற நிறுவனங்களின் மின் வாகன உற்பத்தி செயல், ராயல் என்பீல்டை மிக தீவிரமாக எலெக்ட்ரிக் டூ-வலீரை உறபத்தி செய்யும் பணியில் களமிறங்கச் செய்திருக்கின்றது.

இதன் விளைவாக இன்னும் சில மாதங்களிலேயே ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் வெளியாகிவிடும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 2024 ஆம் ஆண்டிற்குள் ராயல் என்பீல்டின் மின்சார இருசக்கர வாகனம் வெளியீடு செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கின்றன. 18 இல் இருந்து 24 மாதங்களுக்குள் இந்திய மின் வாகன சந்தையில் தனது கால்தடத்தை பதிக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டிருப்பதாகவும் அந்த தவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான உமேஷ் கிருஷ்ணப்பாவை மின் வாகன உற்பத்திக்காக பணியமர்த்தியது. இவரே இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான ராயல் என்பீல்டு மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கி உள்ளார். மின்வாகன உற்பத்தி திட்டத்திற்காக 100 - 150 அமெரிக்க டாலர்களை நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரத்யேக பிளாட்பாரத்தையும் மின் வாகன உற்பத்திக்காக அது உருவாக்கி இருக்கின்றது.

இந்த பிளாட்பாரத்திற்கு இப்போதைக்கு நிறுவனம் எல் எனும் பெயரை சூட்டி இருக்கின்றது. இதிலேயே நிறுவனத்தின் வருங்கால மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. நிறுவனம் ஆண்டிற்கு 1.2 லட்சம் முதல் 1.8 லட்சம் யூனிட் வரையில் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் போட்டு இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ராயல் என்பீல்டு

குறிப்பாக, இருசக்கர வாகனம் எழுப்பும் ஒலிக்கு பல இளைஞர்கள் அடிமையாக இருக்கின்றனர். பைக்கின் கவர்ச்சியான ஸ்டைலுக்கு இருப்பதைவிட அதன் எக்சாஸ்ட் சவுண்டிற்கு ரசிகர்கள் அதிகம். ஆனால், நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தில் இந்த அம்சம் இருக்காது. ஆமாங்க, வழக்கமான மின்சார இருசக்கர வாகனங்களைப் போலவே இதுவும் சத்தமே இல்லாமல் இயங்கக் கூடியவை ஆகும். இது ராயல் என்பீல்டு இருசக்கர வாகன விரும்பிகளுக்கு வருத்தம் அளிக்கும் தகவலாக இருக்கும்.

அதேநேரத்தில், தொழில்நுட்ப விஷயத்தில் எலெக்ட்ரிக் பைக் பல மடங்கு சிறப்பானதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது போட்டியே எந்த நிறுவனம் அதிகம் ரேஞ்ஜ் மற்றும் அதிகம் தொழில்நுட்ப வசதிகளை வழங்குகின்றோம் என்பதில்தான் இருக்கின்றது. ஆகையால், ராயல் என்பீல்டு இந்தி விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் நவீன கால தொழில்நுட்ப கருவிகள் பல ராயல் என்பீல்டு மின்சார இருசக்கர வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக்கில் பிரிவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இ-பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. டார்க் க்ரடோஸ், ரிவோல்ட் ஆர்வி400, அல்ட்ராவைலட் எஃப்77, ஓபென் ரோர், ப்யூர் இவி ஈகோடிரிஃப்ட், ஒடைசி எலெக்ட்ரிக் எவோக்கிஸ், கோமகி ரேஞ்ஜர் மற்றும் அடம் ஆகிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் வரிசையில் மிகப் பெரிய போட்டியாளான பிற எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ராயல் என்பீல்டு மின்சார பைக் வர இருக்கின்றது.

Most Read Articles
English summary
Royal enfield e bike 2024
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X