இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் விருது வென்ற ஹண்டர் 350! இதெல்லாம் நம்ம தமிழக தயாரிப்புக்கு ரொம்ப கம்மி

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் விருதை வென்ற ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை வென்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 இருக்கின்றது. இந்த பைக்கே இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் (2023 ஆம் ஆண்டிற்கான மிக சிறந்த இந்திய மோட்டார்சைக்கிள்) விருதை வென்றிருக்கின்றது. இந்த போட்டியில் பங்கு பெற்ற போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளான டிவிஎஸ் ரோனின் மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் ஆகிய மாடல்களை பின்னுக்கு தள்ளி இந்த விருதை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 வென்றது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

அதேவேளையில், இரண்டாவது இடத்தை டிவிஎஸ் ரோனின் பைக் மாடலும், ரன்னராக சுஸுகி வி-ஸ்ட்ராம் இடம் பிடித்திருக்கின்றன. 15 மூத்த மோட்டார் வாகனத்துறையைச் சேர்ந்தே ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு 2023 ஆம் ஆண்டிற்கான மிக சிறந்த இந்திய மோட்டார்சைக்கிள் விருதை வழங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லைங்க, பொதுமக்கள் அளித்த ஃபீட் பேக்கின் அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான மிக சிறந்த இந்திய மோட்டார்சைக்கிளுக்கான போட்டியில் டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660, சுஸுகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ், பஜாஜ் பல்சர் என்160, ராயல் என்பீல்டு ஹண்டர், யெஸ்டி ஸ்கிராம்ப்ளர், யெஸ்டி அட்வென்சர், ஹோண்டா சிபி300எஃப், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் மற்றும் கேடிஎம் ஆர்சி 390 உள்ளிட்ட பைக் மாடல்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

பைக்கின் டிசைன், கொடுக்கும் பணத்திற்கு உகந்ததா, எரிபொருள் சிக்கனம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஆராயப்பட்டே இருசக்கர வாகனத்திற்கு விருது வழங்கப்பட்டு இருக்கின்றது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கான விருதை அந்நிறுவனம் சார்பில் சித்தார்தா லால் பெற்றுக் கொண்டார். ஹண்டர் 350 ஒட்டுமொத்தமாக 3 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ரெட்ரோ ஃபேக்டரி, மெட்ரோ டேப்பர் மற்றும் மெட்ரோ ரிபெல் ஆகியவையே அவை ஆகும். 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டாரே ஹண்டர் 350 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க், ட்வின் கேஸ் சார்ஜ்ட் ஷாக் அப்சார்பர் பின்பக்கத்தில் சிறந்த சஸ்பென்ஷனுக்காக வழங்கப்பட்டிருக்கின்றது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

இதுதவிர இன்னும் பல அம்சங்களும் ஹண்டர் 350இல் சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, சிறப்பான பிரக்கிங் அனுபவத்திற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், 300 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 270 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஃப்ளோட்டிங் டைப் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், ஸ்பிளிட் கிராப் ரெயில்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Most Read Articles
English summary
Royal enfield hunter 350 wins imoty 2023
Story first published: Saturday, January 14, 2023, 22:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X