லாங் டிரைவ் போறதுக்கு ராயல் என்ஃபீல்டுல செம பைக் வந்துடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக ரைடர் மேனியாகவில் காட்சிப்படுத்திய சூப்பர் மீட்டியோர் 650 என்ற பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள அம்சங்கள் என்னென்ன விலை எவ்வளவு? எப்பொழுது டெலிவரி உள்ளிட்ட விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் என்றால் மார்கெட்டில் அதற்கென தனி மரியாதையே இருக்கிறது. பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனக்கென ஒரு அசைக்க முடியாத மார்கெட்டை தன் வசம் வைத்திருக்கிறது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது தனது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

லாங் டிரைவ் போறதுக்கு ராயல் என்ஃபீல்டுல செம பைக் வந்துடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த நவம்பர் மாதமே EICMA-வில் தனது ராயல் என்ஃபீல்ஐடு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை காட்சிப்படுத்தியது. பின்னர் கோவாவில் அந்நிறுவனம் நடத்திய ரைடர் மேனியாவின் போது இந்தியாவில் அந்த பைக்கை காட்சிப்படுத்தி ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் அந்த பைக்கை இன்று அந்நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை பொருத்தவரை இது முழுவதுமாக புதிய சேசிஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜினை பொருத்தவரை 648 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 46.7 பிஎச்பி பவரை 7250 ஆர்பிஎம்மிலும், 52.3 என்எம் டார்க் திறனை 5650 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

லாங் டிரைவ் போறதுக்கு ராயல் என்ஃபீல்டுல செம பைக் வந்துடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?

இந்த பைக் பிரிமியம் அம்சங்கள் நிறைந்த பைக்காக வெளியாகியுள்ளது. இதில் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது போக டிரிப்பர் நேவிகேஷன் பாட், டிஜிட்டல் டிஸ்பிளே உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல், முன் பக்கம் யூஎஸ்டி ஃபோர்க், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்பர்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள், அலாய் வீல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது. இந்த பைக்கின் பிரேக்கிங்கை பொருத்தவரை இரண்டு வீலிலும் டிஸ்க் பிரேக் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சூப்பர் மீட்டியோர் 650 என்ற பெயர் 1950களில் சூப்பர் மீட்டியோ 700 என்ற பெயரில் வெளியான பைக்கின் தழுவல் காரணமாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை அந்த பைக்கிலிருந்து இந்த பைக்கில் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பிராண்டில் டிரெடிஷனல் லைன் மட்டும் அப்படியே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லாங் டிரைவ் போறதுக்கு ராயல் என்ஃபீல்டுல செம பைக் வந்துடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?

இந்த பைக்கை பொருத்தவரை மொத்தம் 3 வேரியன்ட்களில் வெளியாகியாகிறது.
அஸ்டிரல், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் செலிஸ்டியல் ஆகிய வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது.ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற பைக்குகளை போல இதிலும் ஏகப்பட்ட கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த பைக் செலஸ்டியல் ரெட், செலஸ்டியல் ப்ளூ, இன்டர்ஸ்டெல்லர் கிரீன், இன்டர்ஸ்டெல்லர் க்ரே, அஸ்டிரல் பிளாக், அஸ்டிரல் ப்ளூ மற்றும் ஆஸ்டிரல் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலையைப் பொருத்தவரை அஸ்டிரல் வேரியன்ட் ரூ3.49 லட்சம் என்ற விலையிலும், இன்டர்ஸ்டெல்லர் வேரியன்ட் ரூ3.64 லட்சம் என்ற விலையிலும், செலிஸ்டியல் என்ற வேரியன்ட் ரூ3.79 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களில் துவங்கியுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி இன்னும் ஒரு சில வாரங்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Royal Enfield Super Meteor 650 launch price features variants color and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X