மிடில்-க்ளாஸ் மக்களின் ரோல்ஸ் ராய்ஸ்! போட்டியாளர்களை வெடவெடத்து போக வைத்த ஹூண்டாய் கார்! கப்பல் மாதிரி இருக்கு
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2026 ஹூண்டாய் வெர்னா (2026 Hyundai Verna) கார், இன்று (மார்ச் 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம் செடான் (Premium Sedan) ரகத்தை சேர்ந்த இந்த காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன.
இதில், 1.5 லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. 2026 ஹூண்டாய் வெர்னா காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 2026 ஹூண்டாய் வெர்னா காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஸ்மார்ட் கீ, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 70க்கும் மேற்பட்ட வசதிகள் உடன் கூடிய ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 8 ஸ்பீக்கர் பாஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும், 2026 ஹூண்டாய் வெர்னா கொண்டுள்ளது. மேலும் இந்த காரில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 20 வசதிகள் உடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் 7 ஏர்பேக்குகள், டேஷ்கேம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும், 2026 ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற பாதுகாப்பு வசதிகளையும், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2026 ஹூண்டாய் வெர்னா கார் கொண்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2026 ஹூண்டாய் வெர்னா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10.98 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.25 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2026 ஹூண்டாய் வெர்னா காரின் வருகை, இந்திய சந்தையில், ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) ஆகிய கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
2026 ஹூண்டாய் வெர்னா காரின் நீளம் 4,565 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் அகலம் 1,765 மிமீ ஆக இருக்கிறது. மறுபக்கம் இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,670 மிமீ ஆக உள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு தாராளமான இடவசதி கொண்ட மற்றும் சௌகரியமான கேபின் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டிலேயே அதிகமான வீல்பேஸ் நீளம் கொண்ட மற்றும் அகலமான செடான் கார் இதுதான் என ஹூண்டாய் நிறுவனம் கூறியுள்ளது. எனவே பயணிகள் சொகுசாக பயணம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








