நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் நேற்றைய தினம் இந்திய சந்தையில் ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ எடிசன் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

தற்போது விற்பனையில் இருக்கும் வேரியண்டுகளைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக இதனை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. எச்-ஸ்மார்ட் எனும் பெயரில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய டாப் ஐந்து முக்கிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆக்டிவா 6ஜி

எச் ஸ்மார்ட் வோரியண்டின் சிறப்பம்சங்கள்:

முன்னதாக கார்களுக்கே உரித்தான அம்சங்களுடன் புதிய ஆக்டிவா விற்பனைக்கு வந்திருப்பதாக தெரிவித்து இருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஆக்டிவா 6ஜி மாடலின் உயர் நிலை வேரியண்டில் ஸ்மார்ட் கீ எனும் புதிய வசதியை வழங்கி இருக்கின்றது. இந்த வசதியை ஓர் இருசக்கர வாகன இந்தியாவில் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஸ்மார்ட் கீ, சாவியே இல்லாமல் வாகனத்தை பயன்படுத்த உதவும்.

அதேவேளையில், இந்த ஸ்மார்ட் கீ-யை வழக்கமான சாவி போல் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, வாகனத்தை லாக் மற்றும் அன்-லாக் ஆகியவற்றையும், இருக்கையை திறத்தல், ஃப்யூவல் லிட்டை திறத்தல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும். அதாவது வழக்கமான சாவியைப்போல் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர இந்த கீ-யைக் கொண்டு வாகனம் இருக்கும் இடத்தையும் அறிந்துக் கொள்ள முடியும். ஆன்ஸர் பேக் பட்டனை கிளிக் செய்வதன் வாயிலாக, இருசக்கர வாகனத்தில் உள்ள லைட்டுகள் நான்கும் இரண்டு முறை வரை ஒளிர செய்யும்.

இதன் வாயிலாக வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியும். இதுதவிர செக்யூரிட்டி சிஸ்டமும் இந்த வேரியண்டில் அதிகம். குறிப்பாக, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் ஹோண்டா ஆக்டிவா 6 ஜி எச்-ஸ்மார்ட் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, புதிய ஆக்டிவா 6 ஜியின் அனைத்து வேரியண்டுகளிலும் சைலண்டாக ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் ஹோண்டா ஆக்டிவாவில் வழங்கப்பட்டு உள்ளன. அனைத்தும் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்டைல்

ஹோண்டா ஆக்டிவா 6 ஜியின் அனைத்து வேரியண்டுகளும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் கீ தேர்வில்கூட சிங்கிள் பாட் ஹெட்லைட்டே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், இருசக்கர வாகனத்தின் முன் பக்க ஏப்ரானில் குரோம் அணிகலன், உடல் நிறத்திலான ஃப்ரண்ட் பம்பர், சிங்கிள் பீஸ் பில்லியன் கிராப் ரெயில், புதிய அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. வழக்கமான வேரியண்ட் ஸ்டீல் வீல்களே வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வண்ண தேர்வு

புதிய ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டரை ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க ஹோண்டா திட்டம் போட்டு உள்ளது. நிறுவனம் டீசண்ட் ப்ளூ மெட்டாலிக், பியர்ல், சைரன் ப்ளூ, பிளாக், பியர்ல் ப்ரீசியஸ் ஒயிட், ரிபெல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய நிற தேர்வுகளிலேயே ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க திட்டம் போட்டு இருக்கின்றது.

எஞ்ஜின் மற்றும் ஹார்டுவேர்

ஸ்கூட்டரின் ஸ்டைலைப் போலவே எஞ்ஜின் விஷயத்திலும் எந்த மாற்றத்தையும் ஹோண்டா மேற்கொள்ளவில்லை. அந்தவகையில், இந்த ஸ்கூட்டர் மாடலில் பிஎஸ் 6 தர 109.51 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜினுடன் சேர்த்து சிறந்த இயக்க அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் சிங்கிள் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், இரு வீல்களிலும் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிரம் பிரேக்குடன் சேர்த்து சிபிஎஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

வேரியண்டுகளும் விலை விபரமும்

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் எச்-ஸ்மார்ட் ஆகியவையே அவை ஆகும். இதில் எச்-ஸ்மார்ட் என்பதே ஸ்மார்ட் கீ வசதி உடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இவற்றின் விலை விபரம் இதோ:

  • ஸ்டாண்டர்டு (Standard): ரூ. 74,536
  • டீலக்ஸ் (Deluxe): ரூ. 77,036
  • ஸ்மார்ட் கீ (Smart Key): ரூ. 80,537.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். வெகு விரைவில் இந்த புதிய ஆக்டிவாவை ஷோரூம்களுக்கு விற்பனைக்காக ஹோண்டா அனுப்ப இருக்கின்றது. இந்த பணிகள் நடப்பு ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Top five important details honda activa 6g
Story first published: Tuesday, January 24, 2023, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X