ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் 50 ஆயிரம் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது.இந்த ஸ்கூட்டர்களுக்கு மார்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் டூவீலர்களை விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஏராளமான டூவீலர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்த நிலையில் எலெகட்ரிக் வாகனச் சந்தையிலும் தன் தடத்தை பதிவிறக்க டிவிஎஸ் நிறுவனம் டிவிஎஸ் ஐ-க்யூஎஸ் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இந்த ஸ்கூட்டரை இந்நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அப்டேட் செய்தது. இந்த அப்டேட்டில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபெர்பாமென்ஸ், அம்சங்கள், மற்றும் ரேஞ்ச் ஆகிய விஷயங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டன. தற்போது இந்த ஸ்கூட்டர் இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. எஸ் மற்றும் ஸ்டாண்டார்டு ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது. டாப் வேரியன்டான எஸ்டி வேரியன்ட் இதுவரை விற்பனைக்கு வரவில்லை.

இந்நிலையில் இந்த அப்டேட்டிற்கு பிறகு டிவிஎஸ் நிறுவனம் 50 ஆயிரம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் கூறுப்படுவதாகவது : "எங்கள் இவி பயணம் 3 விதமான கொள்கைகளைக் கொண்டது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரேஞ்ச் குறித்த தேர்வைவழங்க வேண்டும். கனெக்டெட்ட தொழிற்நுட்பம், சார்ஜர் மற்றும் கலர் தேர்வுகளில் எங்கள் வாகனங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை வழங்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில் இந்த வாகனத்தை வாங்கினால் வாடிக்கையாளர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் எங்கள் வானகத்தை இயக்க வேண்டும். " எனக் கூறினார்.

இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியன்ட் மற்றும் ஐ க்யூப் எஸ் வேரியன்ட்களில் 3.4 கிலோ வாட் ஹவர் பேட்டரிபொருத்தப்பட்டுள்ளது. இது 100 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. ஐக்யூப் எஸ்டி வேரியன்டை பொருத்தவரை 5.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது முழு சார்ஜில் 140 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டது. இந்த பேட்டரிகள் ஐபி-67 ரேட்டிங்கை கொண்டது. அதாவது தூசு மற்றும் தண்ணீர் ரெசிஸ்டென்ஸ் கொண்டது. இந்த பேட்டரியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஹப் மவுண்டட் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 4.4 கிலோ வாட் பவரை கொண்டது. இது 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ஸ்டாண்டர்டு மற்றும் எஸ் வேரியின்டில் 78 கி.மீ வேகம் வரை அதிகபட்சமாகப் பயணிக்கும் திறன் கொண்டது. எஸ்டி வேரியன்டை பொருத்தவரை 82 கி.மீ வேகம் வரை அதிகபட்சமாகப் பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த காரில் மற்ற அம்சங்களாக 11 புதிய கலர் ஆப்ஷன்கள், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஸ்டாண்டர்டு வேரியன்டில் 5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், எஸ் வேரியன்டில் 7 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் 5 வே ஜாய் ஸ்டிக் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேஷ்போர்டில் மியூசிக் கண்ட்ரோல், தீம் பெர்னலைசேஷன், ப்ரோ ஆக்டிவ் நோட்டிஃபிகேஷன், உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டச் கண்ட்ரோல், 4ஜி டெலிமேட்டிக்ஸ், ஓடிஏ அப்டேட் வாய்ஸ் அசிஸ்டென்ட், அலெக்ஸா ஸ்கில்செட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் 106 நகரங்களில் விற்பனையாகிறது.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை பிரிமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனையாகிறது. இதில் ஓலா எஸ்1,ஏத்தர் ஆகிய நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் இருக்கிறது. இதில் ஓலா ஒரு லட்சம் ஸ்கூட்டர்களையும் தாண்டி தயாரித்துவிட்டது. ஏத்தர் சமீபத்தில் 389 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த செக்மெண்டில் இந்தாண்டு சிம்பிள் என்ர்ஜி உள்ளிட்ட பல நிறுவனங்கள் களம் இறக்கவுள்ள நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் தனக்கென ஒரு இடத்தை இந்த செக்மெணட்டில் பிடித்துள்ளது மறுக்க முடியாத உண்மை

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs crosses 50 thousand sales milestone in iqube electric scooter
Story first published: Saturday, January 21, 2023, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X