ஒத்த மாடல வச்சுகிட்டு எல்லாரு கண்ணுலையும் விரலவிட்டு ஆட்டிட்டு இருக்காங்க... நின்னு பேசும் டிவிஎஸ் ஐக்யூப்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் (iQube)-ம் ஒன்று. இந்த ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கே இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி உள்ளது.

விற்பனை பிச்சிட்டு போயிருக்கு

2022 டிசம்பரில் 11,071 யூனிட்டுகள் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. 2021 டிசம்பரைக் காட்டிலும் இது மிக அதிகம் ஆகும். வெறும் 1,212 யூனிட்டுகள் மட்டுமே அப்போது விற்பனையாகி இருந்தன. மின் வேகத்தில் 2022 ஆம் ஆண்டில் டிவிஎஸ் ஸ்கூட்டருக்கான வரவேற்பு நாட்டில் அதிகரித்திருப்பதை 2022 டிசம்பர் விற்பனை புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த உயர்வு இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு, குறிப்பாக, டிவிஎஸ்-இன் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2020 ஜனவரியில்தான் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இப்போதே மிக அதிக எண்ணிக்கையில் ஐக்யூப் விற்பனையாகி இருக்கின்றது. ஆமாங்க, நீங்க யூகிப்பது சரிதான். இதற்கு முன்னதாக ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியது இல்லை. நிறுவனத்தின் பிற இருசக்கர வாகன மாடல்கள் லேசான விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக் கணிசமாக உயர்வை சந்தித்திருக்கின்றது. இது நிறுவனத்திற்கு ஆறுதலாக அமைந்துள்ளது. மேலும், நிறுவனத்தை மின் வாகன உற்பத்தியை நோக்கி நகர்த்துவதற்கு உந்துகோளாகவும் இது அமைந்துள்ளது. நிறுவனத்தின் பிற இருசக்கர வாகன மாடல்களின் விற்பனை லேசாக சரிவைச் சந்தித்துள்ளது. 2021 டிசம்பரில் 2,35,392 யூனிட்டுகளாக இருந்த விற்பனை எண்ணிக்கை, சென்ற ஆண்டின் டிசம்பரில் 2,27,666 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

டிவிஎஸ்

உள்நாட்டுல வரவேற்பு அமோகம்

சராசரியாக 8 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனைக் குறைந்துள்ளது. ஏற்றுமதி குறைந்த காரணத்தினாலேயே இந்த அளவு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது டிவிஎஸ் நிறுவனம். அதேவேளையில், உள்நாட்டில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சற்று மவுசு கூடி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டிசம்பர் 2021 இல் 1,46,763 யூனிட்டுகளாக மட்டுமே இருந்த விற்பனை எண்ணிக்கை 2022 டிசம்பரில் 1,61,369 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு நாட்டில் வரவேற்பு நல்ல அளவில் அதிகரித்திருப்பதை நம்மால் தெளிவாக உணர முடிகின்றது.

நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 14 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் கடந்த ஆண்டை நிறைவு செய்திருக்கின்றன. இதுபோலவே எந்த மாதத்திலும் இல்லாத அளவு அதிக விற்பனையை நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் பெற்றிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால், இதில் இப்போது முதல் இரு தேர்வுகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

டிவிஎஸ்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முழு விபரம்:

ஐக்யூப் எஸ்டி தேர்விற்கான விற்பனை தொடங்கப்படவில்லை. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஐக்யூப் வேரியண்டில் 5 அங்குல திரையும் மற்ற இரு வேரியண்டுகளில் 7 அங்குல திரையும் வழங்கப்பட்டிருக்கும். இந்த திரையில் டிவிஎஸ்-இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் இணைப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கும். இதன் வாயிலாகவே நேவிகேஷன், மொபைல் இணைப்பு உள்ளிட்ட முக்கிய வசதிகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். பேட்டரி பேக்கை பொருத்தவரை டாப் வேரியண்டில் ஐக்யூப் எக்ஸ்டி-இல் 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப மற்றும் நடுநிலை வேரியண்டுகளில் (ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப்) 3.04 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 100 கிமீ ஆகும். அதேவேளையில், 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் ஓர் ஃபுல் சார்ஜில் 145 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இத்தகைய அதிக ரேஞ்ஜ் தரும் வேரியண்டிற்கான புக்கிங்கையே இன்னும் டிவிஎஸ் நாட்டில் தொடங்காமல் இருக்கின்றது.

தமிழ்நாட்டுல எங்கே எல்லாம் இதை வாங்க முடியும்?

இதற்கான புக்கிங்குகள் நாட்டில் தொடங்கும்பட்சத்தில் டிவிஎஸ் ஐக்யூப்-இன் விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தமிழகத்தின் முக்கிய நகர்பகுதிகளில் மட்டுமே நம்மால் வாங்க முடியும். சென்னை, கோயம்பத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சென்னையில் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 936 என்கிற ஆன்-ரோடு விலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டான ஐக்யூப்-இன் விலை ஆகும். இதன் ஐக்யூப் எஸ் வேரியண்டிற்கு ரூ. 1 லட்சத்து 21 ஆயிரத்து 057 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கூறியதைப் போல் ஐக்யூப் எஸ்டி வேரியண்டின் விலை இப்போது வரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதன் விலை அறிவிக்கப்பட்டு, அது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs iqube records highest sales in 2022 december
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X