எப்பா இந்த ஏத்தர், ஓலா.. நீங்க எல்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க! சூப்பர் ஸ்டார்போல வந்திறங்கியது டிவிஎஸ் ஐக்யூப்

டிவிஎஸ் நிறுவனம் அதன் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஐக்யூப் எஸ்டி வேரியண்டை இந்திய 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான இருசக்கர வாகன மாடல்களில் ஐக்யூப்-ம் ஒன்று. இது ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இப்போதைய நிலவரப்படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டபோது மூன்று விதமான வேரியண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்டது.

டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி

ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகிய வேரியண்டுகளே அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முதல் இரு வேரியண்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. கடைசி வேரியண்டான ஐக்யூப் எஸ்டி விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இந்த வேரியண்டையே டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் வெளியீடு செய்திருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே இந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வேரியண்ட் அறிமுகமாவது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக, 2022 ஆம் ஆண்டின் மே மாதத்திலேயே இந்த மூன்று வேரியண்டுகளின் அறிமுகத்தையும் டிவிஎஸ் செய்திருந்தது.

டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி

புதிய அம்சமாக ஐக்யூப் எஸ்டி வேரியண்டில் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களை ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகிய வேரியண்டுகளில் நம்மால் காண முடியாது. இதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த வேரியண்டில் டிவிஎஸ் செய்யவில்லை.

அதேவேளையில் ஐக்யூப் எஸ்டி மற்ற இரு வேரியண்டுகளைக் காட்டிலும் சற்று அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய தேர்வு என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இதில், சற்று பெரிய அளவிலான 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி

ஆனால், இதற்கு நாம் ஸ்லோவான வேகத்தில் பயணிக்க வேண்டும். அதாவது, நார்மல் மோடில் மட்டுமே ஐக்யூப் எஸ்டி வேரியண்டை இயக்க வேண்டும். வேறு மோடை பயன்படுத்தினால் இதன் ரேஞ்ஜ் மாறிவிடும். பவர் போன்ற மோடை பயன்படுத்தும்போது 110 கிமீ வரை மட்டுமே அது ரேஞ்ஜ் தரும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 82 கிமீ ஆகும்.

அதேவேளையில், வெறும் 4.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு கிமீ வேகத்தை எட்டிவிடும். இதுதவிர இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த வேரியண்டில் இடம் பெற்றிருக்கும். ஸ்மார்ட் எல்இடி ஹெட்லைட், டிஆர்எல் உடன் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சார்ஜரை கையோடு எடுத்துச் செல்லும் வசதி, எச்எம்ஐ கன்ட்ரோல்லர், 32 லிட்டர் ஸ்டோரேஜ், 17.78 செமீ மல்டி ஃபங்க்சனல் தொடுதிரை டேஷ்போர்டு உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கும்.

இதுதவிர, லைவ் டிராக்கிங், கிராஷ் அலர்டு, ஜியோ ஃபென்சிங், திருட்டை தவிர்க்கும் அலாரம், 45 இணைப்பு அம்சம் போன்ற அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. மோட்டாரை பொருத்தவரை பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 4.4 கிலோவாட் பவரை இது வெளியேற்றக் கூடியது. இது 3 கிலோவாட் பவரையும், 33 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மின் மோட்டார் ஐபி67 வாட்டர் மற்றும் டஸ்ட் சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tvs iqube st unveiled auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X