இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வர போகுதா! பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் அதிரடி திட்டம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இருப்பினும் விலை அதிகமாக இருப்பதால், விருப்பம் இருந்தாலும் இன்னும் நிறைய பேரால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாற முடியவில்லை. ஒரு நல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டுமென்றால், நீங்கள் 1 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்ய வேண்டும்.

எனவே பஜாஜ் (Bajaj), டிவிஎஸ் (TVS) மற்றும் ஏத்தர் (Ather) போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. அடுத்த 12-18 மாதங்களில், இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்லாம், 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வர போகுதா! பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் அதிரடி திட்டம்!

பஜாஜ்!

பஜாஜ் நிறுவனம் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வரும் 2024-25ம் ஆண்டில், இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் 15 சதவீத பங்கை பெறுவதற்கு பஜாஜ் முயன்று வருகிறது. இதில், முதலாவதாக வரவுள்ள விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, ஹெச்107 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் பஜாஜ் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் யூனிட்கள் என்ற அளவில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த எண்ணிக்கையை ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்கள் என்ற அளவில் அதிகரிப்பதற்கும் பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் தற்போதைய நிலையில் சேத்தக் (Bajaj Chetak) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ்!

டிவிஎஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் ஐக்யூப் (TVS iQube) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 9 ஆயிரம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவான ஒரு வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போதைய நிலையில் யூ546 என்ற குறியீட்டு பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அழைக்கப்பட்டு வருகிறது. வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் பணிகளை டிவிஎஸ் நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் என்ற மிக பிரம்மாண்டமான எண்ணிக்கையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வர போகுதா! பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் அதிரடி திட்டம்!

ஏத்தர்!

ஏத்தர் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, 450யூ என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அனேகமாக வரும் 2024ம் ஆண்டில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் நிறுவனம் தற்போது 450 எக்ஸ் (Ather 450 X) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை குறைவான வேரியண்ட்டாக இந்த புதிய மாடல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏத்தர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு, சுமார் 30 ஆயிரம் என்ற பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஏத்தர் போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரவுள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles
English summary
Upcoming most affordable electric scooters
Story first published: Friday, January 20, 2023, 23:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X