ஏன் காலையில் செல்ஃப் ஸ்டார்ட் கூடாதுனு சொல்றாங்க தெரியுமா?.. சோம்பேறி தனத்தால வீண் செலவ தேடி வாங்கிக்காதீங்க!

நம்மல்ல ஒரு சிலர் காலைல முதல் முறையா வண்டிய ஸ்டார்ட் பண்ணும் போது 'கிக் ஸ்டார்ட்' செய்கின்றனர். இவ்வாறு செய்ய வேண்டும் என்பதே ஆட்டோமொபைல்ஸ் துறையைச் சார்ந்த வல்லுநர்களின் பரிந்துரையும் ஆகும். ஏன் இவ்வாறு செய்ய வேண்டும், இவ்வாறு செய்வதனால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என உங்களுக்கு கிடைக்குமா?, நிறைய பலன்கள் இதன் வாயிலாக கிடைக்கும். இது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இரவு நிறுத்துவிட்டு மறு நாள் காலையில் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதை 'கோல்ட் ஸ்டார்ட்' என வாகனத்துறை வல்லுநர்களால் குறிப்பிடுகின்றனர். இரவு நேரத்தில் சுற்று சூழல் குளிர்ச்சியாக இருக்கும். இதன் விளைவாக வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்கும் குளிர்ச்சியானதாக மாறும். பைக்கின் அனைத்து பாகங்களும் குளிர்ந்த நிலைக்கு மாறும். அதில், பைக்கின் எஞ்ஜினும் ஒன்று. சுற்றி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இதுவும் உடனடியாக குளிர்ந்த நிலைக்கு மாறிவிடுகின்றது.

கிக் ஸ்டார்ட்

இத்தகைய சூழலில் ஸ்டார்ட் செய்யும்போது, அதாவது, செல்ஃப் ஸ்டார்ட் செய்யும்போது, செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் மிக பெரிய அளவில் உழைக்க வேண்டி இருக்கும். ஆகையால், அதிக மின்சாரம் செலவாகும். இது வழக்கமான நேரங்களில் எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவாக பேட்டரியும், செல்ஃப் ஸ்டார்ட் மோட்டாரும் விரைவில் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகின்றது.

இதுமட்டுமில்லைங்க, காலை நேரங்களில் ஒரே செல்ஃபில் வாகனங்கள் ஸ்டார்ட் ஆகிவிடாது. மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும் என்பதால் ஒன்றிற்கு பல முறை செல்ஃபை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகும். இதன் விளைவாக, செல்ஃப் மோட்டாரும், பேட்டரியும் அந்த நேரத்தில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நிலை உங்கள் வாகனத்தின் பேட்டரியின் ஆயுட் காலத்தையும், செல்ஃப் ஸ்டார்ட் மோட்டாரின் ஆயிட் காலத்தையும் மிக வேகமாக குறைக்கச் செய்யும்.

கிக் ஸ்டார்ட்

சில நேரங்களில் அதிகப்படியான முயற்சியின் காரணமாக செல்ஃப் மோட்டாரில் சேதம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் காலையில் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய கிக்கர் அவசியம் என கூறப்படுகின்றது. சூழல் இப்படியாக இருக்க உங்களில் ஒரு சிலருக்கு சந்தேகம் எழும்பி இருக்கலாம். இப்போது விற்பனைக்கு வரும் ஒரு சில இருசக்கர வாகன மாடல்களில் கிக்கரே கொடுப்பதில்லையே, அப்படினா அந்த வாகனங்களில் சீக்கிரமே பேட்டரியும், செல்ஃப் மோட்டாரும் காலியாகிவிடுமா என்கிற கேள்வி எழுந்திருக்கலாம்.

இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு இருக்கும் என்றால், இதற்கான எங்களின் பதில், எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதே ஆகும். எப்படி என கேட்டால், நவீன கால இருசக்கர வாகனங்களில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்திலானா பேட்டரியும், புதிய நவீன தொழில்நுட்பத்தினாலான செல்ஃப் ஸ்டார்ட் மோட்டாரும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அவ்வளவு எளிதில் பாதிப்பைச் சந்திக்காது. குறிப்பாக, காலை நேரங்களில் செல்ஃப் ஸ்டார்ட்கூட செய்து கொள்ளலாம். கிக்கர் அவசியம் என்பது இல்லை.

கிக் ஸ்டார்ட்

இப்போது விற்பனைக்கு வரும் பல பைக்குகளில் இந்த வசதிக் கொண்ட செல்ஃப் மோட்டாரும், பேட்டரியும்தான் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து பைக்குகளில் ஃப்யூவல் இன்ஜெக்டர் கருவி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது கிக்கர் அவசியம் என்கிற நிலையை போக்கி இருக்கின்றது. ஆகையால், எந்த மாதிரியான நேரமாக இருந்தாலும் தாராளமாக செல்ஃப் ஸ்டார்ட் செய்து வாகனத்தை எடுத்துச் செல்லலாம். இதற்கு முன்னதாக உங்கள் பைக்கின் மேனுவல் புக்கை ஒரு முறை படித்துக் கொள்வது நல்லது.

குறிப்பாக, உங்கள் பைக்கில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தினாலான செல்ஃப் மோட்டாரும், பேட்டரி பேக்கும் இடம் பெறவில்லை எனில் நீங்கள் கட்டாயம் காலையில் கிக் ஸ்டார்ட் செய்தே பைக்கை ஆன் செய்ய முயற்சிக்க வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே உங்கள் வாகனத்தில் செல்ஃப் சிஸ்டத்தை பாதுகாக்க முடியும். குறிப்பாக அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். உங்கள் மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் 2010 ஆம் ஆண்டிற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டு இருக்கும் எனில் கட்டாயம் அந்த டூ-வீலரை கிக் ஸ்டார்ட் செய்தே ஆக வேண்டும்.

2010 ஆம் ஆண்டிற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களில் அட்வான்ஸ்ட் செல்ஃப் ஸ்டார்ட் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. ஆகையால், உங்கள் பழைய டூ-வீலரை கிக் ஸ்டார்ட் செய்து இயக்க தொடங்குவதற்கு எந்த நேரத்திலும் தயங்காதீர்கள். இது பிற்காலத்தில் ஏற்படும் பெருட் செலவில் இருந்து தப்பிக்க உதவியாக இருக்கும். நீங்க பைக்கை அதிகம் நேசிப்பவராக இருப்பின் கட்டாயம் இதுபோன்ற யுக்திகளைக் கையாண்டு உங்கள் பைக்கின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்து கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Why kick start is important in morning
Story first published: Sunday, January 8, 2023, 7:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X