மீண்டும் விற்பனைக்கு வந்தது பஜாஜ் சிடி 100 - முழு விபரம்!

Posted By:

ஊரக மார்க்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பதிவு செய்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிடி 100 பைக் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது அடுத்து ஒரு பட்ஜெட் மாடலாக இந்த புதிய ஜிடி 100 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் காணலாம்.

அலாய் வீல் சேர்ப்பு

அலாய் வீல் சேர்ப்பு

வெளிப்புறத் தோற்றத்தில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, புதிய டிசைனிலான ஸ்டிக்கருடன் வந்துள்ளது. மேலும், ஸ்போக்ஸ் வீல் மற்றும் அலாய் வீல் மாடல்களில் கிடைக்கும்.

எலக்ட்ரிக் ஸ்டார்ட்

எலக்ட்ரிக் ஸ்டார்ட்

பஜாஜ் பிளாட்டினா போன்றே இந்த பட்ஜெட் மாடலும் தற்போது எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 8.1 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வழங்கும் 99.27சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பின்புறத்தில் டியூவல் ஸ்பிரிங்குகள் கொண்ட எஸ்என்எஸ் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்க் பிரேக் இல்லை

டிஸ்க் பிரேக் இல்லை

பஜாஜ் பிளாட்டினா இஎஸ் போன்றே இந்த புதிய சிடி 100 பைக்கிலும் 110மிமீ டிரம் பிரேக்குகளே பொருத்தப்பட்டிருக்கின்றன. டிஸ்க் பிரேக் ஆப்ஷனஅ இல்லை.

மைலேஜ்

மைலேஜ்

இந்த புதிய 100சிசி பைக் 89.5 கிமீ மைலேஜ் தரும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

 தமிழக விலை

தமிழக விலை

ஸ்போக்ஸ் வீல் மாடல் ரூ.36,122 எக்ஸ்ஷோரூம் விலையிலும், அலாய் வீல் மாடல் ரூ.39,175 எக்ஸ்ஷோரூம் விலையிலும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும். இந்த பைக்கிற்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
Bajaj has re-introducesd new CT 100 bike in Indian market. The CT 100 is equipped with electric start, alloy wheels and new graphic colour schemes.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark