லிட்டருக்கு 96.9 கிமீ மைலேஜ்... வந்துவிட்டது புதிய பஜாஜ் பிளாட்டினா!

Written By:

புதிய பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிளாட்டினா இஎஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த புதிய பைக்கில் புதிய எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதுடன், சிறப்பான மைலேஜை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பட்ஜெட் விலையில் பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

டிசைன்

டிசைன்

டிசைனில் சில மாற்றங்களை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வாடிக்கையாளர்களிடம் ஓர் நம்பகத்தன்மை வாய்ந்த மாடலாக இதனை நிலைநிறுத்தியிருக்கிறது பஜாஜ் ஆட்டோ. பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கவர்ச்சியை தருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பிளாட்டினா இஎஸ் பைக்கில் அதிகபட்சமாக 8.08 எச்பி பவரையும், 12.75 என்எம் டார்க்கையும் வழங்கும் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த புதிய பிளாட்டினா இஎஸ் பைக் லிட்டருக்கு 96.9 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. இந்த பைக்கில் 11.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒரு முறை முழுமையாக பெட்ரோல் நிரப்பினால் 1,114 கிமீ செல்ல முடியும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவிக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

எஸ்என்எஸ் சஸ்பென்ஷன், சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ், எலக்ட்ரிக் ஸ்டார்ட், இந்த செக்மென்ட்டில் அகலமாக டயர் கொண்ட மாடல், நீளமான இருக்கை அமைப்பு, அலாய் வீல்கள், ஸீரோ மெயின்டெனன்ஸ் பேட்டரி, கவர்ச்சியான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவை குறிப்பிட்டு கூறத்தக்க அம்சங்கள்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

எபோனி பிளாக், எலக்ட்ரான் புளூ, கேண்டி ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். ஸ்லைடரில் புதிய பிளாட்டினா பைக்கின் மூன்று வண்ண படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

 விலை

விலை

பஜாஜ் பிளாட்டினா இஎஸ் பைக் ரூ.44,507 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
English summary
Bajaj Auto has launched its all new Platina ES in India . The Indian manufacturer had a strong hold over the commuter segment of motorcycles with its predecessor models. The motorcycle gets an all new engine and design elements to make it more appealing to today's buyers.
Story first published: Wednesday, January 28, 2015, 12:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark