விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 - முழு விபரம்!

Written By:

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டிசைனிலும், எஞ்சினிலும் மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய யூனிகார்ன் 160 பைக் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். முழுமையான தகவல்களை ஸ்லைடரில் படங்களுடன் காணலாம்.

டிசைன்

டிசைன்

சிபி டிரிக்கர் மாடலிலிருந்து சில டிசைன் தாத்பரியங்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், ஃபென்டர் ஆகியவை புதிதாக தெரிகின்றன.

அப்பாடா...

அப்பாடா...

யூனிகார்ன் ரசிகர்களுக்கு பெரும் குறையாக பட்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் முழுமையாக மாற்றப்பட்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே இடம்பிடித்திருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய கார்ப்புரேட்டர் பொருத்தப்பட்ட 163 சிசி எஞ்சின் கொண்ட புதிய யூனிகார்ன் 14.5 பிஎஸ் பவரையும், 14.61 என்எம் டார்க்கையும் வழங்கும். இது ஹோண்டாவின் எச்இடி தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 240மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. ஹோண்டாவின் கோம்பி பிரேக்கிங் சிஸ்டமும் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டாவின் புதிய எச்இடி தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய பைக் மாடல் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, வெள்ளை, சிவப்பு, சாம்பல் என 4 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

ஸ்டான்டர்டு மாடல் ரூ.69,350 விலையிலும், கோம்பி பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.74,414 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது. அடுத்த மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து இந்த பைக்கின் டெலிவிரி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
English summary
Honda Motorcycle and Scooters India (HMSI) has launched the much-awaited Unicorn 160 in two variants. The CB Unicorn 160 standard is priced at Rs 69,350 and the CB Unicorn 160 CBS (Combi-Brake system) is priced at Rs 74,414 (all prices ex-showroom, Delhi). 
Story first published: Thursday, December 18, 2014, 15:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark