ரூ.37 லட்சத்தில் இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

Posted By:

ரூ.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில், புதிய இந்தியன் ரோட்மாஸ்டர் டூரர் வகை மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமல், தனது இந்திய இணைய தள பக்கத்தில் இந்த புதிய மாடலின் விபரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

டொயோட்டா கார்களின் ஆன்ரோடு விலை விபரம்!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் அதிக விலை கொண்ட இந்தியன் பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடலும் இதுதான். ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாளராக வந்திருக்கும இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரம்மாண்டமான டிசைன்

பிரம்மாண்டமான டிசைன்

டூரர் வகையில் மிகவும் பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிளாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு இணையாக பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்பட்டுள்ளது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சூரிய ஒளி மற்றும் விளக்குகள் ஒளியால் ஏற்படும் எதிரொலிப்பை கருத்தில்கொண்டு எளிதாக விண்ட்ஷீல்டை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட புஷ் பட்டன் விண்ட்ஷீல்டு கொடுக்கப்பட்டுள்ளது. 200 வாட் மியூசிக் சிஸ்டம் உள்ளது.

ஃபுட்போர்டு

ஃபுட்போர்டு

வசதிகேற்ப மாற்றிக் கொள்ளும் ஃபுட்போர்டு இருப்பதால் நீண்ட தூர பயணங்களின்போது கால்களை சாவகாசமாக வைத்து செல்ல முடியும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ரிமோட் லாக்கிங் ஹார்டு சேடில் பேக்ஸ், வெப்பப்படுத்தும் வசதியுடன் இருக்கைகள், கீலெஸ் ஸ்டார்ட் என பல்வேறு வசதிகள் உள்ளன.

 ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக 142 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

எடை

எடை

இந்த மோட்டார்சைக்கிள் 403 கிலோ எடை கொண்டது. 20.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இதர இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் செயல்புரியும் அதே 1811சிசி தண்டர்ஸ்ட்ரோக் 3 வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 2600 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 139என்எம் டார்க்கை அளிக்கும்.

மோட்டார்சைக்கிள் டெலிவிரி டைம்?

மோட்டார்சைக்கிள் டெலிவிரி டைம்?

ரூ.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதங்களில் இந்த மோட்டார்சைக்கிள் டெலிவிரி கொடுக்கும் பணிகல் துவங்கும் என்று தெரிகிறது.

 
English summary
Indian Motorcycles has launched its flagship model, the Indian Roadmaster. This motorcycle is a very good example where future technology meets true retro styling.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark