ஹஸ்க்வர்னாவை கையகப்படுத்திய பஜாஜின் கேடிஎம் பிராண்டு

By Saravana

பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து ஹஸ்க்வர்னா சாகச பைக் தயாரிப்பு நிறுவனத்தை பஜாஜ் ஆட்டோவின் அங்கமாக செயல்பட்டு வரும் கேடிஎம் நிறுவனம் கையகப்படுத்தியிருக்கிறது.

ஸ்வீடனை சேர்ந்த ஹஸ்க்வர்னா ஆஃப்ரோடு மற்றும் சாகசங்களுக்கு ஏற்ற பைக்குகள் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனம். கடந்த 2008ல் எம்வி அகஸ்ட்டா சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பிஎம்டபிள்யூவின் மோட்டாராட் நிறுவனம் கையகப்படுத்தியது.

BMW Husqvarna

5 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில், ஹஸ்க்வர்னாவை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ முடிவு செய்தது. இதையடுத்து, பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்படும் ஐரோப்பிய நிறுவனமான கேடிஎம் நிறுவனம் நேரடி போட்டியாளராக இருந்து வந்த ஹஸ்க்வர்னாவை கையகப்படுத்த முயற்சி எடுத்தது.

இதற்கு பலன் கிட்டியிருக்கிறது. ஹஸ்க்வர்னாவை தற்போது கேடிஎம் கையகப்படுத்திவிட்டது. இதையடுத்து, ஹஸ்க்வர்னா பைக்குகளை பஜாஜ்-கேடிஎம் கூட்டணி இந்தியாவில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா பைக் மாடல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Most Read Articles
English summary
Bajaj auto's European subsidiary KTM has acquired rival brand Husqvarna from Germany's BMW motorrad recently.
Story first published: Wednesday, February 20, 2013, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X