பெங்களூரில் மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

Posted By:

பெங்களூரில், புதிய மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தென் இந்திய மார்க்கெட்டில் முதலாவதாக கர்நாடாகவில் இந்த புதிய ஸ்கூட்டரை மஹிந்திரா 2 வீலர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

எண்ணற்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகள், புதிய எஞ்சின் மற்றும் ஸ்டைலான டிசைனுடன் இந்த புதிய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கலக்க வந்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

/strong>.

புதிய வசதிகள்

புதிய வசதிகள்

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதல்முறையாக ஃபிளிப் கீ, ஃபைன்ட் மீ லேம்ப்ஸ், கெய்டு லேம்ப், ஹாலஜன் ஹெட்லைட், எல்இடி பைலட் விளக்குகளுடன் வந்திருக்கும் முதல் மாடல் இது.

இருக்கை உயரம்

இருக்கை உயரம்

இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களில் ஒன்று இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்க முடியும். இதன்மூலம், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்ற மாடலாகவும் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டரில் 110சிசி எம்-டெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. உறுதியான கிராங்க்சாஃப்ட் மற்றும் பேரிங்குகள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறனையும், நீடித்த உழைப்பையும் வழங்கும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

 ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 12 இஞ்ச் வீல்கள், ஏர் ஸ்பிரிங்குடன் கூடிய முன்புற டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், ஹைட்ராலிக் ரியர் சஸ்பென்ஷன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அதிக வீல்பேஸ், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவற்றின் மூலம் சிறப்பான ஓட்டுதல் தரத்தை உணர முடியும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

விலை

விலை

எச்எக்ஸ் மற்றும் விஎக்ஸ் என இரு வேரியண்ட்டுகளில் பெங்களூரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கஸ்டோ எச்எக்ஸ் வேரியண்ட் ரூ.48,400 எக்ஸ்ஷோரூம் விலையிலும், கஸ்டோ விஎக்ஸ் வேரியண்ட் ரூ.50,400 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இது அறிமுகச் சலுகை விலை எனவும், இன்று முதல் 30 நாட்கள் அல்லது இருப்பு உள்ளவரை மட்டுமே இந்த விலையில் கஸ்டோ விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
English summary
Mahindra Two Wheelers has launched new Gusto automatic scooter in Karnatak market at INR.48,400.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark