2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

Written By:

கார்களை கஸ்டமைஸ் செய்வதில் புகழ்பெற்ற டிசி டிசைன் நிறுவனம் தற்போது இருசக்கர வாகனங்களிலும் தங்களது கைவண்ணத்தை காட்டத் துவங்கியிருக்கிறது. முதலாவதாக, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிளுக்கான கஸ்டமைஸ் பாடி கிட்டை அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

டிசி2 கார்பன் ஷாட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த புல்லட் மோட்டார்சைக்கிள் அதன் வாடிக்கையாளர்களையும், ரசிகர்களையும் கவர்ந்தது. இதனை விசேஷ பாடி கிட்டாக விற்பனை செய்ய இருப்பதாக டிசி டிசைன் நிறுவனம் தெரிவித்தது.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

ஆனால், அந்த கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள் கறுப்பு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த விசேஷ பாடி கிட்டை மேலும் 2 புதிய வண்ணங்களில் தற்போது டிசி டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

கார்டினல் ரெட் மற்றும் அட்மிரல் புளூ என்ற இரண்டு வண்ணங்களில் இந்த புதிய பாடி கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கறுப்பு வண்ணத்தில் வந்த நிலையில், இந்த புதிய வண்ணங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக அமைந்துள்ளது.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிள்களுக்கு இந்த விசேஷ பாடி கிட் அளிக்கப்படுகிறது. இந்த பாடி கிட் மூலமாக புல்லட் மோட்டார்சைக்கிளின் தோற்றம் முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு மாறிவிடும்.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

எல்இடி விளக்குகளுடன் கூடிய கார்பன் ஃபைபர் ஹெட்லைட், வட்ட வடிவிலான இன்டிகேட்டர்கள், கண்ணீர் துளியை உருவமாக வைத்து வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், கோள வடிவிலான பேட்டரி பெட்டி என பல டிசைன் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை இருக்கையுடன் மிக வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பின்புற மட்கார்டும் துண்டிக்கப்பட்டு சிறிய மட்கார்டு அமைப்புடன் பாரம்பரிய மோட்டார்சைக்கிள் போன்று மாறி இருக்கிறது. பல கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகளுடன் புல்லட் மோட்டார்சைக்கிளின் தோற்றம் புதிய கோணத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

புல்லட் மோட்டார்சைக்கிளின் சேஸீ, சஸ்பென்ஷன், ஹேண்டில்பார், சக்கரங்கள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எஞ்சின், பிரேக் சிஸ்டம், டயர்களில் எந்த மாற்றமும் இல்லை. டிசைன் மாறுதல்களை மட்டுமே செய்து கொள்வதற்கான இந்த விசேஷ பாடி கிட்டிற்கு ரூ.76,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 புதிய வண்ணங்களில் கஸ்டமைஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்: டிசி அறிமுகம்!

மொத்தம் 5,000 டிசி2 கார்பன் ஷாட் பாடி கிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று டிசி டிசைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 25ந் தேதி முதல் இந்த பாடி கிட்டை பெறுவதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ரூ.25,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் ஜூன் மாதத்தில் இந்த பாடி கிட்டை டிசி டிசைன் நிறுவனம் டெலிவிரி கொடுக்க உள்ளது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

English summary
DC Design has revealed two new colours for the Royal Enfield which include several carbon fibre body and parts. The DC Design Royal Enfield DC2 Carbon-Shot is priced at Rs 76,000 for the custom kit.
Story first published: Wednesday, February 1, 2017, 9:56 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark