புதிய ட்ரையம்ஃப் பைக்குகள் விற்பனைக்கு வந்தன - விபரம்!

Written By:

அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் இரண்டு புதிய மாடல்களை ட்ரையம்ஃப் நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

டைகர் வரிசையில் ட்ரையம்ஃப் எக்ஸ்ஆர்எக்ஸ் மற்றும் எக்ஸ்சிஎக்ஸ் ஆகிய இரு புதிய மாடல்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எக்ஸ்சிஎக்ஸ் சிறப்பம்சங்கள்

எக்ஸ்சிஎக்ஸ் சிறப்பம்சங்கள்

அப்சைடு டவுன் முன்பக்க ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், சிங்கிள் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்போக் வீல்கள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்டதாக வந்திருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை தேவையான போது மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதி உண்டு. ஹேண்டில்பாரையும் விருப்பம்போல் மாற்றிக் கொள்ள முடியும்.

 ட்ரையம்ஃப் டைகர் எக்ஆர்எக்ஸ்

ட்ரையம்ஃப் டைகர் எக்ஆர்எக்ஸ்

எக்ஸ்சிஎக்ஸ் பைக்கில் இருக்கும் சில சிறப்பம்சங்கள் மாற்றம் கண்டிருக்கின்றன. அட்ஜெஸ்ட்டபிள் சஸ்பென்ஷன் அமைப்பு இல்லை. அதேவேளை, அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருக்கை அமைப்பும் சற்று தாழ்த்தப்பட்டுள்ளன.

நிரந்த அம்சங்கள்

நிரந்த அம்சங்கள்

  • ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம்
  • டிராக்ஷன் கன்ட்ரோல்
  • த்ராட்டில் மேப்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ரைடிங் மேப்ஸ்
  • ட்ரிப் கம்ப்யூட்டர்
  • ஆக்ஸ் சாக்கெட்
  • ஆட்டோ கேன்சல் இன்டிகேட்டர்
  • அட்ஜெஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன்
  • ஹேண்ட் கார்டுகள்
 எஞ்சின்

எஞ்சின்

இரண்டு மாடல்களிலும் ஒரே எஞ்சின்தான் செயலாற்றுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 3 சிலிண்டர் 800சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 93.66 எச்பி பவரையும், 79 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

இரு மாடல்களும் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த பைக்குகளில் 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்குகள் உள்ளன.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டைகர் எக்ஸ்ஆர்எக்ஸ் - ரூ.11.60 லட்சம்

டைகர் எக்ஸ்சிஎக்ஸ் - ரூ.12.70 லட்சம்

டைகர் எக்ஸ்ஆர் - ரூ.10.50 லட்சம்

 
English summary

 Triumph Motorcycles has today launched their two new adventure models in India. The British based manufacturer has introduced XRx and XCx models for Indian markets. These two motorcycles have been debuted last year at the 2014 EICMA motor show.
Story first published: Thursday, March 12, 2015, 17:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark