டிவிஎஸ் ஜுபிடர் முதலாமாண்டு கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

Posted By:

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவுபெறுவதை கொண்டாடும் விதமாக, டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல் ஸ்டாலியன் பிரவுன் என்ற பிரத்யேக பழுப்பு வண்ணத்திலும், உட்புற பேனல்கள் பீயேஜ் வண்ணக் கலவையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிசனுக்கான பேட்ஜ்  கொடுக்கப்பட்டுள்ளது.

TVS Jupiter
 

சூரிய ஒளியில் நிறுத்தும்போது அதிக வெப்பமடையாத விசேஷ அம்சம் கொண்ட, டியூரா கூல் என்ற புதிய இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய ஜுபிடர் மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்வை கொடுக்கும் விதத்தில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In celebration of TVS Jupiter’s completion of one year as India’s most awarded scooter ever, TVS Motor Company is bringing out a Special Edition TVS Jupiter. The special status will be distinguished by way of exterior detail with a unique, never before colour and additional features. Only a limited number of this special edition TVS Jupiter will be made.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark