லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

இவீ ஸூனியா மின்சார ஸ்கூட்டரை, நீண்ட காலம் வைத்திருந்து பரிசோதிக்கும் வாய்ப்பு, எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் சாலையில் ஓட்டி சென்றபோது, பலரையும் இந்த மின்சார ஸ்கூட்டர் திரும்பி பார்க்க வைத்தது. சிக்னலுக்காக காத்திருந்தபோது மற்ற வாகன ஓட்டிகள் பலருடைய ஆர்வத்தை இந்த ஸ்கூட்டர் தூண்டியது. இதில், பலர் இவீ ஸூனியாவின் டிசைன் நன்றாக இருப்பதாக பாராட்டு பத்திரம் வாசித்தனர். ஆனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும்? ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என இந்த ஸ்கூட்டர் பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை பலர் எங்களிடம் கேட்டனர். அந்த கேள்விகள் அனைத்திற்கும் இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம்.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

பவர்டிரெயின் மற்றும் ஓட்டுதல் அனுபவம்:

இவீ ஸெனியா மின்சார ஸ்கூட்டரில் 250 வாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டாரும், 60V 20Ah லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 60-70 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும். இந்த மின்சார ஸ்கூட்டர் எங்களிடம் இருந்த சமயங்களில், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 60 கிலோ மீட்டர்கள் பயணம் செய்தது. இது உண்மையில் நல்ல ரேஞ்ச்தான்.

இந்த ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் இருக்காது என்பது முக்கியமான ஒரு அம்சம். ஏனெனில் குறைந்த வேகத்தில் இயங்க கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் இது வருகிறது. எனவே பதிவு செய்யாமலேயே இந்த ஸ்கூட்டரை சட்டப்பூர்வமாக பயன்படுத்த முடியும். அத்துடன் இந்த ஸ்கூட்டரை இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு. எனவே மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி, வீடு மற்றும் டியூசன் ஆகிய இடங்களுக்கு இடையே பயணிக்க ஏற்ற ஸ்கூட்டராக இது திகழ்கிறது.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

செயல்திறனை பொறுத்தவரை, ஆரம்ப நிலையில் இந்த ஸ்கூட்டர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற டாப் ஸ்பீடை இந்த ஸ்கூட்டர் விரைவாகவே எட்டி விடுகிறது. அதற்கு பிறகு அதே வேகத்தை தொடர்ந்து பராமரிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.

இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச பேலோடு 140 கிலோ. செங்குத்தான பகுதிகளில் கூட இந்த ஸ்கூட்டர் நன்றாக பாரம் சுமப்பதுடன், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. பில்லியன் ரைடருடன் நடத்திய சோதனையில் இதனை நாங்கள் உணர்ந்தோம். மேடான பகுதிகளில் பயணிக்க சிரமப்படுகிறது என்ற எண்ணத்தை, இந்த ஸ்கூட்டர் எங்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தவில்லை. மேடான பகுதிகள் என்றாலும், இந்த ஸ்கூட்டர் சீராக மேலே ஏறுகிறது. அனைத்து விதமான நிலப்பரப்புகளிலும் ஓட்டுவதற்கு சிறந்த ஸ்கூட்டராகவே இது உள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி சார்ஜ் சதவீதம், ரைடிங் மோடுகள், டிரிப் மற்றும் வேகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. மொத்தம் மூன்று ரைடிங் மோடுகளை இன்ஸ்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் காட்டுகிறது. வலது பக்க ஹேண்டில்பாரில் உள்ள ஸ்விட்ச்கள் மூலமாக இதனை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த மூன்று ரைடிங் மோடுகளுக்கு இடையே செயல்திறன் அல்லது ரேஞ்ஜில் பெரிதாக எந்த ஒரு வித்தியாசத்தையும் நாங்கள் உணரவில்லை.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

இந்த ஸ்கூட்டரின் எடை சுமார் 80 கிலோ மட்டுமே. எனவே மிகவும் இலகுவாக உள்ளது. குறைவான எடை மற்றும் காம்பேக்ட் டைமன்சன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் எளிதாக பயணிக்க முடிகிறது. இந்த ஸ்கூட்டரின் 10 இன்ச் வீல்கள், ஈரமான மற்றும் உலர்ந்த என அனைத்து சூழ்நிலைகளிலும், நல்ல க்ரிப் மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகின்றன.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

சௌகரியம்:

இந்த ஸ்கூட்டரில் அகலமான சிங்கிள் பீஸ் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ரைடர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இரண்டு பேரின் சௌகரியத்தையும் இது உறுதி செய்கிறது. அதே சமயம் பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள கிராப் ரெயில், பின்னால் அமர்ந்து செல்பவருக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

இந்த மின்சார ஸ்கூட்டரின் சீட்டிங் பொஷிஷனும் சௌகரியமாக உள்ளது. ஆனால் இந்த ஸ்கூட்டரின் ஃபுட்போர்டு சற்றே உயரமாக இருப்பதால், உயரமான நபர்கள் கொஞ்சம் அசௌகரியமாக உணரலாம். குறிப்பாக நெருக்கமான வளைவுகளில் திரும்பும்போது, 6 அடிக்கு மேல் உயரம் கொண்டவர்களின் முழங்கால்களில், ஹேண்டில்பார் உரசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எப்போதாவது நடக்ககூடிய இந்த பிரச்னையை, உயரமான ரைடர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

இந்த மின்சார ஸ்கூட்டரில் இருக்கும் மற்றொரு பிரச்னை சஸ்பென்ஸன் செட்அப்தான். சிறிய குழிகளை கடக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை. அதேபோல் மோசமான சாலைகளையும் இந்த ஸ்கூட்டர் எளிதாக கடக்கிறது. ஆனால் பெரிய குழிகளாக இருந்தால், உங்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

ஆனால் இந்த ஸ்கூட்டரின் பிரேக் எங்களை வெகுவாக கவர்ந்தது. ட்யூயல் டிஸ்க் செட்அப் உடன் இந்த ஸ்கூட்டர் வருகிறது. இவை இரண்டுமே சிறப்பாக வேலை செய்கின்றன. முன் மற்றும் பின் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள டிஸ்க் பிரேக்குகள், ஸ்கூட்டரை உடனடியாக நிறுத்தி விடுகின்றன. சரிவான பகுதிகளில் இறங்கும்போது இது உதவிகரமாக இருக்கும்.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

பேட்டரி சார்ஜிங் மற்றும் நடைமுறை பயன்பாடு:

ஏற்கனவே கூறியதை போல், இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 60-65 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும். இந்த ஸ்கூட்டர் எங்களிடம் இருந்தபோது சராசரியாக 60 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கியது. எனவே ரேஞ்ச் பற்றி கவலைப்படாமல் நகர பகுதிகளில் தினசரி பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதும் மிகவும் எளிமையானதுதான். சார்ஜிங் சாக்கெட்டை பயன்படுத்தி இந்த ஸ்கூட்டரை நேரடியாக சார்ஜ் செய்யலாம். அத்துடன் இருக்கைக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை தனியாக கழற்றியும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் எந்த வழியை நீங்கள் பின்பற்றினாலும், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் என முழுமையாக சார்ஜ் ஆவதற்கு பேட்டரி சுமார் 4 மணி நேரம் எடுத்து கொள்கிறது.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

ஆனால் இருக்கைக்கு அடியில் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதால், பொருட்களை வைப்பதற்கான போதிய இட வசதி இல்லை. பேட்டரி தொகுப்பே பாதி இடத்தை அடைத்து கொள்வதால், நடைமுறையில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை தவிர்த்து விட்டு பார்த்தால், முன் பக்க அப்ரானுக்கு பின்னால், செல்போன் போன்ற சிறிய பொருட்களை வைத்து கொள்வதற்கு வசதியாக சிறிய இட வசதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

விலை:

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். ஆனால் அவற்றை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகும். எனவே விலை சற்று அதிகமாக கொடுத்து வாங்கியதை, இதனுடன் ஈடுகட்டி கொள்ளலாம். இங்கே இவீ ஸூனியாவை பொறுத்தவரை, இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை 73,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு இது சற்று அதிகமான விலையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் தொடர்ச்சியாக பெட்ரோல் ஊற்றி கொண்டே இருக்க வேண்டியதில்லை என்பதால், இந்த மின்சார ஸ்கூட்டர் உடனடியாக உங்கள் செலவை குறைத்து விடும். அத்துடன் இந்த மின்சார ஸ்கூட்டரை பராமரிப்பதும் எளிதுதான். இதற்காக நீங்கள் அதிகம் செலவிட வேண்டியதில்லை. எனவே ஸ்கூட்டரை வாங்குவதற்காக நீங்கள் செலவிட்ட கூடுதல் தொகையை முதல் ஆண்டிலேயே மீட்டு விடலாம்.

இது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மின்சார இரு சக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். 2018ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து இந்த நிறுவனம் இந்தியாவின் 50க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா, ஜார்கண்ட், ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் கிடைக்கிறது. அதே சமயம் இந்தியா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் போன்ற இளம் தலைமுறையினரை குறிவைத்து, இவீ ஸூனியா மின்சார ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் தேவையில்லை... பதிவு செய்யவும் வேண்டாம்... இவீ ஸூனியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு:

இந்த மின்சார ஸ்கூட்டரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், நகர பகுதிகளில் சௌகரியமாக ஓட்டுவதற்கு ஏற்றதாகவும் உள்ளது. அத்துடன் இந்த மின்சார ஸ்கூட்டர் சுற்றுசூழலுக்கு நட்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் குறையாக பார்க்கப்படுகிறது.

இவீ ஸூனியா மின்சார ஸ்கூட்டரின் டிசைன், வசதிகளை விளக்கும் எங்களின் முதல் ரிப்போர்ட்டை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

English summary
EeVe Xeniaa Electric Scooter Long-Term Review (Final Report): Performance and More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X