அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. குறிப்பாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் ரெட்ரோ டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது.

மிக பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்பீல்டும் ஒன்று. ராயல் என்பீல்டு நிறுவனம் பல தனித்துவமான மோட்டார்சைக்கிள்களை தயாரித்துள்ளது. இதில், கிளாசிக் முக்கியமானது. ராயல் என்பீல்டு கிளாசிக் முதல் முறையாக கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த மோட்டார்சைக்கிளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

ஆரம்பத்தில் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களை கவர்ந்து இழுத்த ராயல் என்பீல்டு கிளாசிக், சமீப காலமாக இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் மோட்டார்சைக்கிளை மற்ற மாடர்ன் மோட்டார்சைக்கிள்களை போல் மாற்றியுள்ளது. முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய இன்ஜின் உடன் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டு வந்தது. உடனடியாக புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளிலும் இதே இன்ஜின் வழங்கப்படும் என யூகங்கள் கிளம்பின.

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் கடந்த சில மாதங்களில் அதிக அளவு வெளிவந்தன. இதன் மூலம் நமக்கு ஒரு சில தகவல்களும் தெரியவந்தது. இந்த சூழலில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள், செப்டம்பர் 1ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, அதனை நாங்கள் சில நூறு கிலோ மீட்டர்கள் ஓட்டி பார்த்தோம். 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

டிசைன்

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் டிசைன் அதனை தனித்துவமான ஒன்றாக மாற்றுகிறது. முந்தைய தலைமுறை மாடலின் ஆன்மாவை பாதிக்காமல், டிசைன் மாற்றங்களை செய்திருப்பது உண்மையிலேயே கடினமான பணி என்பதில் சந்தேகமில்லை. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் டிசைன் குழுவிற்கு நாம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 இன்னும் அதிக ரெட்ரோ லுக்கில் உள்ளது. அதேபோல் ஒரு சில டிசைன் அம்சங்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. தற்போதும் இந்த மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஹெட்லேம்ப் சற்று தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்பை சுற்றி க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த காலங்களில் வெளிவந்த மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை போல், Upper Hood-ம் இடம்பெற்றுள்ளது.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிளின் டேஷ்போர்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த ட்ரிப்பர் நேவிகேஷன் திரையையும் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பெற்றுள்ளது. கலர் டிஎஃப்டி திரையில், நேவிகேஷன் வழிகாட்டுதல்களை பெறுவது, இளைய தலைமுறையினரை கவரும் விஷயமாக இருக்கும்.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

டெஸ்ட் ரைடு செய்வதற்காக எங்களிடம் வழங்கப்பட்டது க்ரோம் ரெட் வண்ண மோட்டார்சைக்கிள் ஆகும். எனவே அதிக க்ரோம் வேலைப்பாடுகளை காண முடிந்தது. முன் பக்க மட்கார்டில் க்ரோம் பூசப்பட்டுள்ளது. இதன் நடுவே சிகப்பு நிற பட்டையும், குறுகிய தங்க நிற பட்டையும் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க்கிலும் இதே தீம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தையை விட்டு வெளியேறும் மாடலில் இருந்து எரிபொருள் டேங்க்கின் டிசைனை ராயல் என்பீல்டு நிறுவனம் தக்க வைத்துள்ளது. எரிபொருள் டேங்க்கில் உள்ள க்ரோமை பாதுகாப்பதற்காக டேங்க் பேடு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள ராயல் என்பீல்டு எம்பலம் சிறப்பாக உள்ளது.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

அதே சமயம் புத்தம் புதிய சைடு பேனல்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. இதில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனி கவனம் செலுத்தியுள்ளது. அதே சமயம் வயரிங் மற்றும் ஃப்யூயல் இன்ஜெக்ஸன் மெக்கானிசம் ஆகிய அனைத்தும் ஓவல் வடிவ கருப்பு நிற பிளாஸ்டிக்கால் கவர் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் மெட்டல் சைடு பேனல்களும் கருப்பு நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், புதிய கிளாசிக் 350 லோகோ வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் டிசைனை மேம்படுத்துவதில் இன்ஜின் முக்கிய பங்காற்றுகிறது. இரு பக்க கவரிலும் க்ரோம் பூச்சுக்களை காண முடிகிறது. இதுதவிர பின் பக்க ஃபெண்டர், ரியர் வியூ மிரர்கள், எரிபொருள் டேங்க் மூடி ஆகிய இடங்களிலும் க்ரோம் வேலைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் இன்டிகேட்டர்களை சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடுகளை நம்மால் காண முடிகிறது.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

பின் பகுதியை பொறுத்தவரை வட்ட வடிவ டெயில் லேம்ப்பும், அதன் பக்கவாட்டில் இருபுறமும் வட்ட வடிவ இன்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. டெயில்லேம்ப்பிற்கு கீழே நம்பர் பிளேட் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கைகளும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் டிஸ்க் பிரேக்குகளும் பெரிதாக உள்ளன.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

இன்ஜின் செயல்திறன்

செயல்திறனை பொறுத்தவரை, 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிக சிறப்பாக உள்ளது. புதிய இன்ஜின் மற்றும் சேஸிஸ் சிறப்பாக இருக்கின்றன. முதலில் இன்ஜின் பற்றி பார்த்து விடலாம்.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில், 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.3 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் கெபாசிட்டி 3 க்யூபிக் சென்டிமீட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. போர் அளவை 2 மிமீ அதிகரித்திருப்பதன் மூலமும், ஸ்ட்ரோக் நீளத்தை 4.2 மிமீ குறைத்திருப்பதன் மூலமும் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் அதிக Responsive-ஆக உள்ளது. இந்த இன்ஜினின் Refinement நன்றாக இருப்பதுடன், இன்ஜின் முதிர்ச்சியாகவும் தெரிகிறது.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை இந்த மோட்டார்சைக்கிளின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கூறலாம். பொதுவாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை பலரும் விரும்புவதற்கு அதன் சப்தமும் முக்கியமான காரணங்களில் ஒன்று. ஆனால் பழைய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவித்த புகார் என்னவென்றால், சப்தம் ஆத்மார்த்தமாக இல்லை என்பதுதான். ஆனால் புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் இந்த பிரச்னை நிவர்த்தி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

எனினும் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பு வந்த பழைய புல்லட் அளவிற்கு இந்த சப்தம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் பழைய மாடலில் இருந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். இந்த இன்ஜின் உண்மையிலேயே சிறப்பான ஒன்று. வாடிக்கையாளர்களின் பாராட்டையும் இந்த இன்ஜின் பெற்றுள்ளது. குறிப்பாக ஆஃப் ரோடுகளில் சவாரி செய்யும்போது, டார்க் திறன் சிறப்பாக இருக்கிறது. ஆம், இந்த மோட்டார்சைக்கிளை நாங்கள் ஆஃப் ரோட்டிற்கும் எடுத்து சென்றோம். அதற்கு காரணம் உள்ளது.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

கையாளுமை

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் Open Road-க்கு ஏற்றது. ஆனால் அட்வென்சர் பயணங்களை மேற்கொள்வதற்கும் ஏராளமானோருக்கு வாய்ப்பை வழங்கியது இந்த மோட்டார்சைக்கிள்தான் என்பதையும் மறந்து விட வேண்டாம். இந்தியாவில் அட்வென்ஜர் ரக பைக்குகள் பிரபலமடைவதற்கு முன்பாக, லே-லடாக் உள்ளிட்ட அட்வென்ஜர் பயணங்களுக்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கைதான் பலரும் பயன்படுத்தி வந்தனர்.

எனவே புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை கரடுமுரடான ஆஃப் ரோட்டிற்கும் நாங்கள் எடுத்து சென்றோம். அங்கும் இந்த மோட்டார்சைக்கிள் நன்றாகவே செயல்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளில் சியட் ஜூம் ப்ளஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. உலர்ந்த சாலைகளில் இந்த டயர்கள் நல்ல க்ரிப்பை வழங்குகின்றன. ஆனால் ஈரமான மேற்பரப்புகளில் இன்னும் நம்பிக்கையை அளிக்க கூடிய வகையில் டயர்கள் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அதேபோல் சேறும், சகதியுமான சாலைகளில் டயர்கள் க்ரிப்பை முற்றிலுமாக இழந்து விடுகின்றன.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

நகர்ப்புற சூழல்களில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை ஓட்டுவது தற்போது மிகவும் எளிமையாக உள்ளது. இந்த பைக்கின் ஆக்ஸலரேஷனும் நன்றாக இருக்கிறது. பழைய Single Downtube சேஸிஸிற்கு பதிலாக தற்போது Twin-downtube Spine சேஸிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் புதிய இன்ஜினும் சேர்ந்திருப்பதால், அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம் கிடைக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூர் சாலைகளில், இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டுவது சுலபமான வேலையாக உள்ளது.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி கிளாசிக் 350 Open Road மற்றும் தொலைதூர பயணங்களுக்குதான் மிகவும் உகந்தது. ஆனால் பழைய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் நீண்ட நேரம் ஓட்டுவது சவாலானது. இதற்கு அதிர்வுகள்தான் காரணம். ஆனால் புதிய மாடலில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது அதிர்வுகள் இல்லை. அதே சமயம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்படுகிறது. ஆனால் அதுவும் குறை சொல்லும் அளவிற்கு எல்லாம் இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்பதால், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் நீண்ட நேரம் ஓட்டினாலும், ரைடருக்கோ அல்லது பின்னால் அமர்ந்திருப்பவருக்கோ சௌகரியம் தொடர்பாக எந்த பிரச்னைகளும் ஏற்படாது.

இந்த மோட்டார்சைக்கிளின் எடை 195 கிலோ. அதிவேகத்தில் பயணம் செய்தாலும், இந்த மோட்டார்சைக்கிள் ஸ்திரமாக உள்ளது. அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிளின் Footpegs, ரைடர் சௌகரியமாக காலை வைத்து கொள்ளும் வகையில் இருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து, தொலைதூர பயணங்களுக்கு மிகவும் உகந்த மோட்டார்சைக்கிளாக இதனை மாற்றுகின்றன.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

அதேபோல் பிரேக்கிங்கும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இரு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது பழைய மாடலை காட்டிலும் 20 மிமீ பெரியது. அதேபோல் பின் பகுதி டிஸ்க் பிரேக்கும் பழைய மாடலை காட்டிலும் 30 மிமீ பெரியது. தற்போது பின் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளது. வேரியண்ட்டை பொறுத்து சிங்கிள்-சேனல் அல்லது ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்ஸை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அதற்கேற்ப வேரியண்ட்களின் விலை மாறுபடும்.

இந்த மோட்டார்சைக்கிளில் 13 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் மைலேஜ் லிட்டருக்கு சுமாராக 36 கிலோ மீட்டர் எனும்போது, ஒரு முறை எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பினால், 450 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பயணம் செய்ய முடியும். ஒட்டுமொத்தத்தில் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடல் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே உற்சாக பயண அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

வசதிகள்

பழைய மாடலில் பெரிய அளவில் வசதிகள் இல்லை. ஆனால் புதிய மாடல் அதற்கு அப்படியே நேர்மாறாக உள்ளது. ஆம், புதிய மாடலில் நிறைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் மிகவும் முக்கியமானது. முதன் முதலில் மீட்டியோர் 350 பைக்கில்தான் டிரிப்பர் நேவிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தனது மற்ற மோட்டார்சைக்கிள்களிலும் டிரிப்பர் நேவிகேஷன் வசதியை ராயல் என்பீல்டு வழங்கி வருகிறது. இந்த வரிசையில் ஏற்கனவே எதிர்பார்த்தபடி, புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளும் டிரிப்பர் நேவிகேஷன் வசதியை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில வேரியண்ட்களில் மட்டுமே டிரிப்பர் நேவிகேஷன் வசதி கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற வேரியண்ட்களில் அந்த இடத்தில் ராயல் என்பீல்டு லோகோ வழங்கப்பட்டிருக்கும்.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதில், ஸ்பீடோமீட்டர் அனலாக் முறையில் இருக்கும். ஸ்பீடோமீட்டருக்கு கீழாக சிறிய எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய அடிப்படை தகவல்களை இது வழங்கும். இதில், ஓடோ மீட்டர், டிரிப் மீட்டர் போன்றவை அடங்கும். அத்துடன் ஈக்கோ இன்டிகேட்டரையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. எரிபொருள் சிக்கனத்திற்கு உகந்த வகையில் மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது, ‘ECO' என்ற வார்த்தையை எல்சிடி திரையில் இது ஒளிர செய்யும்.

ஆனால் இந்த மோட்டார்சைக்கிள் எல்இடி லைட்களை தவற விட்டுள்ளது. ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் மற்றும் இன்டிகேட்டர் என அனைத்திலும் ஹாலோஜன் பல்புகள்தான் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் எல்இடி விளக்குகளுக்குதான் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனினும் ஹாலோஜன் ஹெட்லேம்ப்பும் நன்றாகதான் உள்ளது என்பதையும் நாங்கள் குறிப்பிட வேண்டும். வீச்சு நன்றாக உள்ளதால், சிரமமின்றி ஓட்டலாம்.

அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

வண்ண தேர்வுகள்

கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வண்ணத்தை தேர்வு செய்து கொள்ள ராயல் என்பீல்டு எப்போதுமே அனுமதிக்கிறது. அந்த வகையில் புதிய மாடலிலும் நிறைய வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிக்னல்ஸ் எடிசன் வண்ண தேர்வையும் ராயல் என்பீல்டு நிறுவனம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

புத்தம் புதிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வண்ண தேர்வுகள்:

 • க்ரோம் ரெட்
 • க்ரோம் ப்ரோன்ஸ்
 • டார்க் ஸ்டீல்த் பிளாக்
 • டார்க் கன்மெட்டல் க்ரே
 • சிக்னல்ஸ் மார்ஷ் க்ரே
 • சிக்னல்ஸ் சேண்ட்ஸ்ட்ரோம்
 • ஹால்சியன் க்ரீன்
 • ஹால்சியன் பிளாக்
 • ஹால்சியன் க்ரே
 • ரெட்டிச் க்ரீன்
 • ரெட்டிச் க்ரே
 • இதில், ஹால்சியன் க்ரீன் வண்ண தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது. எனினும் வண்ண தேர்வு ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தும் மாறுபடும்.

  அதிர்வுகள் இல்லாத சுகமான பயணம்! சூப்பர் வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்

  போட்டியாளர்கள்

  இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் உடன் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போட்டியிடும்.

  டிரைவ்ஸ்பார்க் கருத்து

  விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு புதிய தலைமுறை அப்டேட் தேவையே இல்லை. அந்த அளவிற்கு அதன் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் வகையில், புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள அப்டேட்கள் மிகவும் சிறப்பாக உள்ளதால், பழைய மாடலை காட்டிலும் புதிய மாடல் மிகவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

English summary
New gen royal enfield classic 350 first ride review design features engine performance
Story first published: Wednesday, September 1, 2021, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X