எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு...

அண்மையில் புதுப்பிக்கப்பட்ட மாடலாக இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் களமிறக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை நமது டிரைவ்ஸ்பார்க் குழு முதல் டிரைவ் செய்து பரிசோதித்தது. இதில் பைக் எப்படி இருந்தது? இதன் சிறப்பு மற்றும் குறை என்ன? என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அட்வென்சர் மற்றும் டூரர் ரக இருசக்கர வாகனச் சந்தையில் களமிறங்கும் விதமாக ஹிமாலயன் மாடலை கடந்த 2016ம் ஆண்டே முதல் முறையாக இந்தியாவில் களமிறக்கியது. இந்த பைக்கின் புதிய பிஎஸ்-6 மாடல்தான் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த புதிய மாடலை நமது டிரைவ்ஸ்பார்க் குழு அண்மையில் முதல் டிரைவ் பரிசோதனையை செய்தது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இதன் மூலம் இந்த பைக் என்ன தேர்ச்சியைப் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதற்கு முன்னதாக ஹிமாலயன் பற்றிய சிறிய முன்னுரையைப் பார்த்துவிடலாம் வாருங்கள்.

ஹிமாலயன், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதற்கு முன்னர் வரை இந்தியாவில் களமிறக்கி வந்த பிற மாடல் பைக்குகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட உருவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பைக்காகும். இதற்கு முன்னர் வரை 350 சிசி முதல் 500 சிசி வரையிலான க்ரூஸர் ரக பைக்குகளை மட்டுமே இது களமிறக்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

எனவேதான் ஹிமாலயன் பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான தற்போதும் கிடைத்து வருகின்றது. இதற்கு போட்டியாக குறைந்த விலையில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் மாடலைக் களமிறக்கிய பின்னரும் ஹிமாலயன் பைக்கிற்குக் கிடைத்து வரும் வரவேற்பு சற்றும் பொலிவிழக்காமல் விற்பனையைப் பெற்று வருகின்றது. இருப்பினும், தற்போதைய சந்தை சூழ்நிலை இதன் விற்பனையில் தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இந்த பைக் பிற அட்வென்சர் மற்றும் டூரர் பைக்குகளைக் காட்டிலும் அதிக திறன் மற்றும் சிறப்பான தோற்றத்தை அடக்கிய பைக்காக இருக்கின்றது. அதேசமயம், விலையும் அனைவரும் நுகரும் வகையில் இருக்கின்றது. மேலும், இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணத்தினாலேயே அவ்வப்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதனை புதுப்பித்து வருகின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அந்தவகையிலேயே புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப பிஎஸ்-6 தரத்தில் இது உருவாகியிருக்கின்றது. இந்த மாற்றத்தை மட்டுமின்றி கூடுதலாக புதுப்பித்தலை இந்த பைக் சந்தித்து இருக்கின்றது. இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட மாடலையே நாங்கள் அனைத்துவிதமான சாலைகளிலும் வைத்து பயன்படுத்தினோம். இதன்மூலம் கிடைத்திருக்கும் ரேட்டிங்ஸ் மற்றும் பதிலையே கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அவ்வளவு சோகமான விஷயமில்லை. ஏனெனில் பலர் இப்பைக்கின் தோற்றத்திற்குதான் அடிமையாக இருக்கின்றனர். ஆகையால், தோற்றம் விவகாரத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எந்தவொரு விபரீதமான முடிவையும் எடுக்க தயாராக இல்லை. எனவேதான் அப்பைக்கின் வடிவமைப்பு அப்படியே தற்போதும் காட்சியளிக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இதேபோன்று மின் விளக்கு விவகாரத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. இதுவும், அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிறப்பு விஷயமாக அதிக மற்றும் படர்ந்த அளவில் வெளிச்சத்தை தரக்கூடிய ஹாலோஜன் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த பைக்கின் போட்டியாளர்கள் எல்இடி மின் விளக்கு தேர்வை வழங்கி வருகின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

ஹிமாலயன் பைக்கின் முன் பக்கத்தில் அதிக உயரத்தில் ஃபெண்டர் (மட்குவார்ட்) நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படுவதற்கு முன்னரும் இதேநிலையில்தான் அது இருந்து வந்தது. ஆகையால், எனவே தற்போதும் அதே ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. அதேசமயம், மண் மற்றும் பிறவற்றில் இருந்து கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் அது இருக்கின்றது. மேலும், முன்பக்க சஸ்பென்ஷன்கள் மிகவும் சுலபமாக இயங்கும் வகையில் வடிவமைப்பை அது பெற்றிருக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷனை பொருத்த வரையிலும் அதே வழக்கமான 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பைக்கின் ஒட்டுமொத்த உயரத்துடன் சேர்ந்து 200 மிமீ உயரத்தில் பயணிக்க அது உதவும். இதற்கேற்ப 21 இன்ச் அளவிலான வீல் இணைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் ஆகிய இரு வீல்களும் ஒரே இன்சிலானது ஆகும். இவற்றில் 300 மிமீ டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளன.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இது சிறப்பான பிரேக்கிங் வசதியை நமக்கு வழங்கும். உருவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத காரணத்தால் பக்காவட்டு மற்றும் பின்பக்க தோற்றமும் அப்படியே காட்சியளிக்கின்றது. 15 லிட்டர் எரிபொருளை சேமிக்கும் தொட்டி, ஸ்கூப்பட்-அவுட் இருக்கைகள், உயரமான ஹேண்டில்பார்கள் மற்றும் நியூட்ரல் ஃபூட் ஃபெக்குகள் மற்றும் மிகவும் வசதியான பணிச்சூழலியல் அமைப்பு உள்ளிட்ட அனைத்தும் அப்படியே காட்சியளிக்கின்றன.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

ஆகையால், இப்பைக்கில் நெடுந்தூர பயணம் என்பது மிகவும் அலாதியான ஒன்றாகவே இருக்கும். அப்படிதான் டெஸ்ட் டிரைவிங்கில் நாங்களும் உணர்ந்தோம். ஏனெனில், இதன் நேரான பெட்ரோல் டேங்க், நடுநிலையான ஃபெட் - ஃபெக்குகள் இந்த வசதியை வழங்கும் வகையில் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இது ரைடருக்கு மட்டுமின்றி பின்னால் அமர்ந்து வருபவருக்கும் சொகுசான அனுபவத்தையே வழங்கும்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இருக்கை அமைப்பும் கூடுதல் சொகுசு அனுபவத்தை வழங்கும் வகையிலேயே இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் பின் பக்க தோற்றத்தைப் பொறுத்தவரை அதே மெல்லிய ரகத்திலான எல்இடி மின் விளக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், பின்னிருக்கையாளருக்கு அதிக பிடிமானம் மற்றும் லக்கேஜ்களை தாங்கிக் கொள்கின்ற வகையில் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இந்த மோட்டார் சைக்கிளின் வெளியேற்றக் குழாய்கள் (எக்சாஸ்ட் சிஸ்டம்) மேம்பட்டதாக காட்சியளிக்கின்றது. இதைத்தொடர்ந்து இந்த பைக்கில் கவனிக்க வேண்டிய விஷயமாக பழைய மாடலில் இருந்தே இருப்பது பின் பக்க வீலுக்க இணைக்கப்பட்டிருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. இது ஆஃப்-ரோடுகளில் மிகவும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்க உதவும்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

பின்பக்க வீல் 17 இன்ச் அளவுடையதாகும். இதில், 120/90 அளவில் புரொஃபைலைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், இந்த வீலில் சிறப்பான பிரேக்கிங் அம்சத்திற்காக 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாம் பார்த்த தகவலின் அடிப்படையில் பெரியளவில் 2020 ராயல் என்ஃபீல்டு பைக் மாற்றத்தைப் பெறவில்லை என்பது உங்களுக்கு தெரிய வந்திருக்கும்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அதேசமயம், நிறம் மற்றும் பிற ஒரு சில விஷயங்களில் மட்டுமே இது மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், முன்பைக் காட்டிலும் தற்போதைய ஹிமாலயன் பைக்கில் புதிதாக ஆறு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, ராக் ரெட், லேக் நீளம் மற்றும் கிராவல் கிரே உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஸ்னோ ஒயிட், கிரானைட் பிளாக் மற்றும் ஸ்லீட் கிரே உள்ளிட்ட நிறங்கள் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போதும் இந்த நிறங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அம்சங்கள்

பிஎஸ்4 மாடலில் இருந்த பெரும்பாலான அம்சங்களை பதிய பிஎஸ்6 பைக்கில் தன்னுக்குள் அடக்கியிருப்பதைப் போல் தெரிந்தாலும் ஒரு சில அம்சங்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றாக நடுத்தர டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகும். இதில், அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டாக்கோ மீட்டர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

ஆனால், இவற்றிற்கு தலைவனைப் போல் டிஜிட்டல் திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் பைக்கின் வேகம், நேரம் மற்றும் கியரின் நிலை உள்ளிட்டவைக் காண்பிக்கப்படும். இதேபோன்று, இதில் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் வகையில் அனலாக் மீட்டரும் தனியாக இணைக்கப்பட்டிருக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இதைத்தொடர்ந்து, புதிதாக ஏபிஎஸ் பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்துவதன் மூலம் தேவைக்கேற்ப ஏபிஎஸ் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்துடன், புதிய மாற்றமாக மின் விளக்கு கட்டுப்பாட்டு பொத்தான் இடது பக்க கைப் பிடியில் இணைக்கப்பட்டிருக்கின்றது. இது முன்பைக் காட்டிலும் பயன்படுத்துவதற்கு சுலபமாக இருப்பதாக நமது குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இதுமட்டுமின்றி அதிக எடையை தாங்கக்கூடிய வகையில் அதன் பக்கவாட்டு தாங்கியை (சைட் ஸ்டாண்டு) மிக உறுதியானதாக மாற்றியிருக்கின்றது. இதனால், பைக்கின் எடையைக் காட்டிலும் கூடுதலாக 5 கிலோ எடையை வைத்து சைட் ஸ்டாண்டு போட்டாலும் அது மிக உறுதியுடன் நிற்கும். பைக்கின் ஒட்டுமொத்த எடை 199கிலோ என்பது குறிப்பிடத்தகுந்தது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

எஞ்ஜின் மற்றும் செயல்திறன்

இதன் உமிழ்வு தரம் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டிருந்தாலும் அதன் சிசி திறன் அப்படியேதான் இருக்கின்றது. அதாவது, 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்படுகின்றது. இது, ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் மற்றும் எஸ்ஓஎச்சி அம்சத்தைக் கொண்ட எஞ்ஜின் ஆகும்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இது அதிகபட்சமாக 24.3 பிஎச்பி மர்றும் 32 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது, பிஎஸ்4 தர எஞ்ஜினைக் காட்டிலும் 0.2 பிஎச்பி திறன் குறைவாகும். இந்த மாற்றம் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த மாசு வெளிப்பாட்டிற்கு உதவும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்குகின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

நாம் மேலே பார்த்த அம்சங்களே ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை சிறந்த அட்வென்சர் மற்றும் டூரர் பைக்காக நம்மிடையே தோற்றுவிக்கின்றது. மேலும், அதிக திறன் வெளிப்பாட்டில் மிகவும் ஹாயாக பயணிப்பதற்கும் இந்த அம்சங்களே உதவுகின்றன. இந்த வெளிப்பாட்டையே முதல் டிரைவ் அனுபவத்தில் எங்கள் குழுவினர் பெற்றிருக்கின்றனர். இதன் முறுக்கு-விசை வரம்பில் போதுமான சக்தி உள்ளது. இது மோட்டார் சைக்கிள் வேகத்தை அதிகரிக்கவும், அப்படியே பராமரிக்கவும் அனுமதிக்கிறது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இதன் முன்னோடியான பிஎஸ்-4 உடன் ஒப்பிடுகையில், குறைந்த ஆர்பிஎம்-இல் செல்லும் போது பைக் சற்று மெதுவாக புறப்படுவது போன்று தோன்றுகின்றது. ஆனால், அது மந்தமான செயலைப் போன்று உணர்த்தவில்லை. அதேசமயம், இந்த இடைவெளி வெகு விரைவில் சீரமைக்கப்பட்டு விடுகின்றது. அதாவது, முறுக்கை விசைக் கொடுக்கப்பட்ட சில விநாடிகளிலேயே சிறப்பான திறன் வெளிப்பாடக் கிடைக்க ஆரம்பித்துவிடுகின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

ஆகையால், ஒரு சில விநாடிகளியே நம்மால் ஹிமாலயன் பைக்கில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட முடியும். எங்களின் முயற்சியின் மூலமே இதை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம். மேலும், உச்சபட்ச வேகத்தில் சென்றாலும் இதன் அதிகபட்ச 199 கிலோ எடை நிலையான பயணத்தை வழங்க உதவுகின்றது. ஆகையால், காற்றில் அலாய்வதைப் போன்ற உணர்வை அது நமக்கு வழங்குவதில்லை.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

மணிக்கு 120கிமீ எனும் வேகம் வரை இந்த பைக்கை இயக்கி பார்த்தன் அடிப்படையிலேயே இந்த தகவலையும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இது நகரத்தின் உட்புறத்திற்கு சாத்தியமில்லா வேகம் ஆகும். ஆகவே, நிலைத் தன்மைக்கு பைக்கின் அதிகபட்ச எடை மிகச் சிறந்த பங்களிக்கும் வகையில் உள்ளது. அதேசமயம், இதன் அதிகபட்ச எடை சில நேரங்களில் இடையூறாக அமைகின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

குறிப்பாக, நகரத்தின் நெருக்கமான சாலைகளில் பயன்படுத்தும்போது அதிக எடை இடையூறை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக டிராஃபிக் மற்றும் சிக்னல்களில் அடிக்கடி நிறுத்திச் செல்வது கஷ்டமான விஷயமாக அமைகின்றது. பைக்கின் உருவம் சந்து மற்றும் பொந்துகளில் புகந்து செல்லும் வகையில் இருந்தாலும், அதன் அதிகபட்ச எடையை லேசான சிரமத்தை வழங்குகின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

மிக தெளிவாக கூற வேண்டுமானால், பைக்கின் அதிகபட்ட எடை மற்றும் 800 மிமீ உயரம் உள்ளிட்டவையே இந்த சிரமத்திற்கு காரணமாக உள்ளது. அதேசமயம், நம்ம ஊர் கிரேட் காலி போன்று மிகவும் பருமான தேகம் மற்றும் உயரத்தைக் கொண்டவர்களுக்கு இந்த பைக்கைக் கையாள்வது மிக சுலபமாக இருக்கும். ஆனால், மெல்லிய தேகமுடையவர்கள் இந்த பைக்கைக் கையாள்வார்களானால் அதிக கஷ்டத்தை அனுபவிப்பர்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அதேசமயம், இடைவிடாமல் செல்லக்கூடிய நெடுந்தூர சாலை பயணமாக இருந்தால், மிகுந்த அலாதியான பயண அனுபவத்தை இதே ஹிமாலயன் பைக் அனைவருக்கும் வழங்கும். இதற்கேற்ப சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் இருக்கை வசதியையே ஹிமாலயன் பைக் பெற்றிருக்கின்றது. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ உள்ளது. இது எம்மாதிரியான கரடு முரடான சாலையாக இருந்தாலும் மிகவும் சுலபமாக சமாளிக்கும்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இந்த பைக்கை எழுந்து நின்றவாறு இயக்க முடியும் என்பது மிகச் சிறந்த விஷயமாக உள்ளது. அமர்ந்து ஓட்டும்போது இருக்கக்கூடிய அதே சௌகரியமே நின்றவாரு ஓட்டும்போதும் கிடைக்கின்றது. இதற்கு உதவியளிக்கும் வகையிலேயே மிகவும் தட்டையான கால் வைப்பான்கள் பைக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பைக்கின் குறுகிய தோற்றம் மற்றும் உயரமான கைப்பிடிகளும் இதற்கு உதவியளிக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

ஆகையால் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இந்த பைக்கை மிக சுலபமாக இயக்க இடியும். இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல கடினமான சாலைகளில் வைத்து இந்த பைக்கை எங்கள் குழு கையாண்டது. இந்த பல பரீட்சையின் மூலம் ராயல் என்ஃபீல்டு பைக், அதிக இடையூறு உள்ள சாலையைக் கூட அசால்டாக கடக்கும் என்பது தெரியவந்தது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அதேசமயம், இதுமாதிரியான கரடு-முரடான பாதையில் வைத்து பைக்கை இயக்கும்போது பைக்கின் ஏதேனும் கூறுகள் சேதமடையாதா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். இதன் பாதுகாப்பிற்காக பாஷ் பிளேட் பைக்கின் அடிப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் அடிப்பகுதியில் இருக்கும் அனைத்து முக்கியமான பாகங்களையும் பாதுகாக்க உதவும்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

மேலும், இக்கட்டான சூழ்நிலைகளை மிக நேர்த்தியாக கையாளும் விதமாக இருசக்கர வாகனத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை எளிய வழியில் பயன்படுத்தும் விதமாக அதற்கான ஸ்விட்சும் பைக்கின் கைப் பிடியில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இதன் எஞ்ஜினும் மிகவும் மென்மையான இயக்கத்தை வழங்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் குறைந்த மாசு மற்றும் கூடுதல் ஸ்மூத்தான இயக்க அனுபவத்தை வழங்குகின்றது. அதாவது பழைய பைக்குகளைப் போன்று அதிக அதிர்வுகளை வெளிப்படுத்தாமல் சீரான இயக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மாறியிருக்கின்றது.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அதிர்வு குறைவிற்காக இரு வித பயன்பாடு கொண்ட சியாட் டயர்கள் இதில் வழங்கப்படுகின்றன. இந்த டயர் அதிக பிடிமானத்தைக் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், மழை மற்றும் கற்கள் நிறைந்த சாலைகளில் கூட நல்ல பிடிமானத்துடன் பைக்கால் செல்ல முடியும். இந்த பைக்கிற்கு தற்போது இந்தியாவில் இரண்டே மாடல்கள் மட்டும்தான் போட்டியாக இருக்கின்றன.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

அதில், ஒன்று பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கும், மற்றொன்று ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஆகியவை மட்டுமே ஆகும். இதில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் மட்டுமே பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் ஜி310 ஜிஎஸ் பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. அதேசமயம், இந்த வரிசையில் அதிக விலையைக் கொண்ட பைக்காகும் இதுவே இருக்கின்றது. இதுகுறித்த முழு விபரத்தையும் பட்டியலில் கீழே காணலாம்.

மாடல்/விவரக்குறிப்புகள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (பிஎஸ்6) பிஎம்டபிள்யு ஜி 310 ஜிஎஸ் (பிஎஸ்4) ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (பிஎஸ்6)
எஞ்ஜின் சிசி திறன் 411 312 199
பிஎச்பி அளவு 24.3 32.5 17.8
டார்க் 32 28 16.45
விலை ரூ. 2.3 லட்சம் ரூ. 3.5 லட்சம் ரூ. 1.11 லட்சம்
எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

எங்களின் கருத்து

அட்வென்சர் மற்றும் டூரர் பயண அனுபவத்தை அதிகம் விரும்புபவர்களுக்கு ஏற்ற பைக்காக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் இந்திய இருசக்கர வாகன சந்தையில் கிடைக்கின்றது. இது மிகவும் திறமையான மற்றும் அனைவரும் எளிதில் நுகரக்கூடிய குறைந்த விலையைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதைத் தேர்வு செய்வது முதலீடு செய்யப்படும் பணத்திற்கும், எதிர்பார்த்த பயன்பாட்டையும் ஹிமாலயன் வழங்கும் என நாங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

எங்கள் ரேட்டிங்கில் இந்த பைக்கிற்கு 4 நட்சத்திரங்கள்... கூடுதல் சுவாரஷ்ய தகவல்களும் காத்திருக்கு... முதல் டிரைவ் அனுபவம்!

இந்த பைக் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 2.3 லட்சத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரு ஏபிஎஸ் சேனல், அனைத்து விதமான தரை வழிகளிலும் இயங்கக்கூடிய திறன் என அனைத்து விதமான சிறப்பம்சங்களுடன் இந்த பைக் அறிமுகமாகி இருக்கின்றது. ஆகையால், எங்களின் அனுபவத்தை வைத்து இந்த பைக்கிற்கு நாங்கள் ஐந்திற்கு 4 நட்சத்திரங்களைப் பெறுமையுடன் வழங்குகின்றோம்.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan BS6 Review: The Most Capable Off-Roader With An Affordable Price Tag!. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X