ஸ்விப்ட் போட்டியாக புதிய காரை அறிமுகப்படுத்திய செவர்லே

ரூ.4.44 லட்சம் ஆரம்ப விலையில் ஸ்விப்ட்டுக்கு போட்டியாக கருதப்படும் புதிய செயில் யுவா பிரிமியம் ஹேட்ச்பேக் காரை செவர்லே சற்றுமுன் அறிமுகம் செய்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திருக்கும் புதிய செயில் யுவா ஹேட்ச்பேக் கார் மாருதி ஸ்விப்ட்டின் நேரடி போட்டியாளராக கருதப்படுகிறது.

ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபியட் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பிளாட்பார்மில் டியூனிங் செய்யப்பட்ட அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சி்ன்தான் இந்த புதிய காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று, பீட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்திருக்கிறது.

டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலைஜையும் தரும் என அராய் சான்றளித்திருப்பதாக செவர்லே தெரிவித்துள்ளது. சூப்பர் ரெட், சுவிட்சபிள் சில்வர், சம்மிட் ஒயிட், கேவியர் பிளாக், லினென் பீயேஜ், சான்டிரிஃப்ட் கிரே மற்றும் மிஸ்ட்ரி லேக் ஆகிய 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த புதிய காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ வாரண்டி சலுகையை வழங்குவதாக செவர்லே அறிவித்துள்ளது. சீனாவில் பெற்ற பெரும் வெற்றியை போன்று இந்திய மார்க்கெட்டிலும் புதிய செயில் யுவா பெரும் வெற்றியை பெறும் என செவர்லே மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்விப்ட்டைவிட ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை குறைவான விலையில் புதிய செயிலை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது செவர்லே.

புதிய செயில் யுவா டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பேஸ் வேரியண்ட் : ரூ.4,44,000

எல்எஸ் : ரூ.4,83,918

எல்எஸ் ஏபிஎஸ் : ரூ.5,18,418

எல்டி : ரூ.5,57,918

டீசல் மாடல் விலை விபரம்

எல்எஸ் : ரூ.5,87,289

எல்எஸ் ஏபிஎஸ் : ரூ.6,19,289

எல்டி ஏபிஎஸ் : ரூ.6,62,000

மாருதி ஸ்விப்ட் தவிர, ஹூண்டாய் ஐ20, டொயோட்டா லிவா, ஹோண்டா பிரியோ, போக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட முன்னணி கார் மாடல்களுக்கு புதிய செயில் நிச்சயம் பெரிய போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary

 American car maker General Motors India has launched its much awaited premium hatchback Sail U-VA at INR 4.44 lakh to INR 6.62 lakh ex-show room New Delhi. 
Story first published: Friday, November 2, 2012, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X