ஸ்விப்ட் போட்டியாளர் செவர்லே செயில் யுவா: படங்களுடன் டிரெய்லர்!

வரும் 2ந் தேதி புதிய செயில் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மிகுந்த நம்பிக்கையுடன் களமிறக்க இருக்கிறது செவர்லே. ஏவியோ யுவா காருக்கு மாற்றாக வரும் புதிய செயில் மாருதி ஸ்விப்ட்டுக்கு போட்டியை கொடுக்கும் என கார் மார்க்கெட் பரபரக்கிறது.

தாராள இடவசதி, புதிய தொழில்நுட்ப வசதிகள், சிறந்த டிசைன், பெஸ்ட் எஞ்சின்களுடன் வரும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், புதிய செயில் காரின் அம்சங்கள் குறித்து சிறப்பு கண்ணோட்டத்தை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஃபோர்டு ஃபிகோவை போன்று தாழ்வான தோற்றத்தை கொண்டிருக்கிறது. ஸ்விப்ட் போட்டியாளர் என்றாலும் வடிவமைப்பில் ஸ்விப்ட் அளவுக்கு அங்கீகாரம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்புறம் ஓகே என்றாலும் பின்புறம் குறி்ப்பிட்டு கூறும் அளவுக்கு அம்சங்கள் இல்லை. 14 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது.

முகப்பு

முகப்பு

ஹனிகோம்ப் கிரில்லுக்கு மத்தியில் செல்லும் சட்டத்தில் 'போ டை' போன்ற செவர்லே லோகோ பொருத்தப்பட்டிருக்கிறது. கிரில்லுக்கு சரியாக பக்கவாட்டில் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருப்பது முக வசீகரத்தை கூட்டுவதாக இருக்கிறது.

இடவசதி

இடவசதி

வெளிப்புற வடிவமைப்பில் குறிப்பிட்டு கூற முடியாவிட்டாலும், உட்புறத்தில் தாராள இடவசதியை கொண்டிருப்பதே இதன் முக்கிய சிறப்பு. மேலும், பின்புற இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி விரிக்கும் வசதியை கொண்டிருப்பதால் 1184 லிட்டர் பூட் ரூமை விரவுப்படுத்தி அதிக பொருட்களை வைக்கும் வசதி இருக்கிறது.

உட்புற அம்சங்கள்

உட்புற அம்சங்கள்

3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், குரோம் பூச்சுடன் சென்ட்ரல் கன்சோல், 2 டின் மியூசிக் சிஸ்டம் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். டூயல் டோன் இன்டிரியரும் செயிலின் மதிப்பை உயர்த்துவதோடு கண்களுக்கும் பிரிமியம் ஃபீலை கொடுக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இதன் முன்பக்கம் 3 பாயிண்ட் தடுப்பு கொண்டிருப்பதால் ஒருவேளை விபத்து நடந்தால் 80 சதவீத விசை தடுக்கப்பட்டு கேபினுக்குள் அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. எரிபொருள் டேங்க் நடுவில் பொருத்தப்பட்டிருப்பதால் தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. வேகமெடுக்கும்போது கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி, டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்.

எஞ்சின் & மைலேஜ்

எஞ்சின் & மைலேஜ்

பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் வருகிறது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 80 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இதில், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜ் செல்லும் என்று செவர்லே தெரிவித்துள்ளது.

விலை & வாரண்டி

விலை & வாரண்டி

பெட்ரோல் ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ.,க்கு வாரண்டி வழங்கப்படும் என செவர்லே தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 26, 2012, 13:52 [IST]
English summary
American car brand Chevrolet is all set to launch Sail UVA on 2nd November. Here are given some features and specifications of Chevy Sail.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+