மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்தது புதிய டாடா போல்ட் கார்!

ஆன்ரோடு விலைக்காக மொபைல் எண், இமெயில் கொடுத்து கொடுத்து அலுத்துவிட்டீர்களா? இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே வாருங்கள். பெங்களூர் ஆன்ரோடு விலை நொடியில் உங்கள் கையில்...!! நான் கோயம்புத்துருங்கணோவ்!! கவலையே வேண்டாம்... கோயபுத்தூர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் ஆன்ரோடு விலையை "தமிழில்" தெரிந்துகாெள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய டாடா போல்ட் காரின் ஆன்ரோடு விலை ஒரு சாம்பிளுக்காக...

டாடா போல்ட் ஆன்ரோடு விலை விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்!!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய டாடா போல்ட் கார் மும்பையில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரைத் தொடர்ந்து, புதிய டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டாவது கார் மாடலை 35 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களை இலக்காக வைத்து விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா 4 வேரியண்ட்டுகளில் இந்த புதிய கார் விற்பனைக்கு கிடைக்கும். விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

புதிய டாடா போல்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் XE, XM, XMS மற்றும் XT ஆகிய தலா 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

டிசைன்

டிசைன்

டாடா நானோ காரை டிசைன் செய்ததன் மூலம் பிரபலமடைந்த கிரீஷ் வாக் இந்த காரையும் டிசைன் செய்துள்ளார். டாடா விஸ்டா காரின் அடிப்படையிலான டாடா எக்ஸ்1 பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், முந்தைய டாடா கார்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தர நிலையில் இந்த கார் வர இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களும் இந்த காரை தங்களது பட்டியலில் வைத்திருக்கின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

டாடா போல்ட் காரில் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் மூன்று வித செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாற்றிக் கொள்ள முடியும் என்பது மிக முக்கியமான அம்சம். இதுதவிர, 74 பிஎச்பி பவரையும், 190என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

3. இடவசதி

3. இடவசதி

வழக்கம்போல் டாடா கார்கள் தாராள இடவசதிக்கு பெயர்போனது. அதேபோன்று, டாடா போல்ட் காரும் 5 பேர் செல்வதற்கு சிறப்பான இடவசதியை அளிக்கும் மாடலாக கூறலாம். முழுவதும் கருப்பு நிற இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது. பின் இருக்கை மிகவும் சவுகரியமான பயண அனுபவத்தை தரும்.

4. வசதிகள்

4. வசதிகள்

டாடா போல்ட் காரில் புளூடூத், ஆக்ஸ், யுஎஸ்பி போர்ட் வசதிகள் கொண்ட 2 டின் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியரில் குறை சொல்ல முடியாத அளவு தரமான பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.57 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.95 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

பெட்ரோல் மாடல்

போல்ட் XE: ரூ.4,44,993

போல்ட் XM: ரூ.5,15,991

போல்ட் XMS: ரூ.5,540,112

போல்ட் XT: ரூ.6,05,893

டீசல் வேரியண்ட்டுகள் விலை விபரம்

போல்ட் XE: ரூ.5,49,950

போல்ட் XM: ரூ.6,11,446

போல்ட் XMS:ரூ.6,34,792

போல்ட் XT:ரூ.6,99,839

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

6. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

6. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டாடா போல்ட் பெட்ரோல் மாடலின் எமது பிரத்யேக டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 
Most Read Articles

English summary
Tata Bolt India Launch: Price, Specs, Features Tata Motors India just launched its all new Tata Bolt hatchback. Check here the prices, variants, specifications, features and other details. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X