சோர்ந்து போன டாடாவுக்கு சுளுக்கெடுக்க வரும் போல்ட்: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் என்ற பெருமை கொண்ட பாரம்பரிய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கார் மார்க்கெட்டில் சொதப்பி வருவது தெரிந்ததே. முகம் சுளிக்க வைக்கும் டிசைன், மோசமான ஃபிட் அண்ட் ஃபினிஷ், பிராண்டு மதிப்பு இல்லாத மாடல்கள் என பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும், டாடா கார்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை.

இந்த அதிருப்தி முத்திரையை வாடிக்கையாளர்கள் மனதில் இருந்து அகற்றுவதற்கு உறுதி பூண்டிருக்கும் அந்த நிறுவனம், தீவிரமான முயற்சிகள், புதிய டிசைன் கொள்கையில் களமிறக்கிய மாடல்தான் டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார். டாடா கார்கள் என்றால் என்னென்ன குறைகள் இருக்குமோ, அவற்றை முடிந்தவரை களைந்து ஒரு ப்ரெஷ் டிசைனில் வந்த ஸெஸ்ட் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனால், நிம்மதி பெருமூச்சு விட்ட டாடா மோட்டார்ஸ், தனது அடுத்த அஸ்திரமாக கருதி கையில் வைத்திருக்கும் போல்ட் காரை இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய போல்ட் காரை சமீபத்தில் உதய்பூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது, இந்த காரை ஓட்டியபோது கிடைத்த அனுபவம் மற்றும் ஒரு சில சாதக, பாதகங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


1. மாடல் விபரம்

1. மாடல் விபரம்

டாடா போல்ட்[XT டாப் வேரியண்ட்]

எரிபொருள்: பெட்ரோல்

இடம்: உதய்பூர், ராஜஸ்தான்

2.எஞ்சின் விபரம்

2.எஞ்சின் விபரம்

எஞ்சின்: 1.2 லிட்டர் ரெவோட்ரான், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு எம்பிஎஃப்ஐ

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல்

அதிகபட்ச சக்தி: 90 பிஎஸ்@5,000ஆர்பிஎம்

அதிகபட்ச டார்க்: 140என்எம்@1,500- 4,000ஆர்பிஎம்

டிரைவ்சிஸ்டம்: ஃப்ரண்ட் வீல் டிரைவ்

 3.முன்புற டிசைன்

3.முன்புற டிசைன்

பழைய டாடா கார்களிலிருந்து டிசைன் பன்மடங்கு மேம்பட்டிருக்கிறது. நடுநாயகமாக வீற்றிருக்கும் அந்த லோகோவை மட்டும் எடுத்துவிட்டு பார்த்தால் நிச்சயம் வேறு பிராண்டு மாடல் என்று கூறிவிடலாம். அழகாக செதுக்கப்பட்ட பானட், கவர்ச்சியையும், பாதுகாப்பையும் தரும் புரொஜெக்டர் ஹெட்லைட், தேன்கூடு வடிவ முகப்பு கிரில், அகலமான ஏர்இன்டேக், அத்துடன் பகல் நேர விளக்குகள் கொண்டது போன்ற தோற்றத்தை தரும் குரோம் பட்டையுடன் கூடிய பனி விளக்குகள் ஆகியவை முகப்பை கவர்ச்சியாக்கியுள்ள அம்சங்கள். அதேநேரத்தில், விஸ்டா அடிப்படையிலான கார் என்பதை காட்டும் விதத்தில், ஆங்காங்கே சில டிசைன் அம்சங்கள் இடம்பெற்றிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

 4. பக்கவாட்டு டிசைன்

4. பக்கவாட்டு டிசைன்

ஹூண்டாய் எலைட் ஐ10 போன்றே இந்த புதிய போல்ட் காரின் சி பில்லர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருப்பது கண்ணை கவர்கிறது. நேர்த்தியான கூரை அமைப்பு, கம்பீரத்தை தரும் பாடி லைன்கள் ஆகியவை பக்கவாட்டு தோற்றத்தை சிறப்பாக எடுத்தியம்புகின்றன. கூரையின் பின்புறத்தில் இருக்கும் ஸ்பாய்லர் காருக்கு கூடுதல் அழகை தருகிறது. காருக்கு அலாய் வீல்களும் அழகு சேர்க்கின்றன. பக்கவாட்டு தோற்றம் அழகாக இருப்பதோடு மட்டுமின்றி, சிறப்பான ஏரோடைனமிக் கொண்டதாக பக்கவாட்டுப் பகுதிகள் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன.

5. பின்புறத் தோற்றம்

5. பின்புறத் தோற்றம்

பல கார்களின் டிசைன் பின்புறத்தில் தோற்றுவிடுவதுண்டு. ஆனால், இந்த காரின் பின்புறத் தோற்றம் எளிமையாகவும், நச்சென்றும் இருக்கிறது. குரோம் பூட் லிட், கச்சிதமான டெயில் லைட் கிளஸ்ட்டர், கருப்பு நிற சி பில்லரின் தாக்கம், பெரிதான பம்பருடன், கருப்பு நிற பிளாஸ்டிக் இணைக்கப்பட்டிருக்கிறது. சில சமயம் சிம்பிள் கூட சிறப்பாக இருக்குமல்லவா, அந்த ரகத்தில்தான் போல்ட் பின்புறத் தோற்றம் இருக்கிறது.

சுவாரஸ்யத் தகவல்: இங்கிலாந்து, இத்தாலி மற்றும் புனே நகரிலுள்ள மூன்று டிசைன் ஸ்டூடியோக்களின் எண்ணத்திலும், ஆக்கத்திலும் இந்த புதிய கார் உருவாகியிருக்கிறது.

வடிவம்:

நீளம்: 3,825மிமீ, அகலம்: 1,695, உயரம்: 1,562மிமீ

போட்டியாளர்

மாருதி ஸ்விஃப்ட்

நீளம்: 3,850மிமீ, அகலம்: 1,695, உயரம்: 1,530மிமீ

6. கேபின்

6. கேபின்

கேபின் உயர்தரமான மற்றும் நாகரீமான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா கார்களில் பார்க்காத அல்லது இடம்பெறாத அளவுக்கு தரமான பாகங்கள் இன்டிரியரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, அவை மென்மையான உணர்வை தரவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். மிக எளிமையாகவும், வெகு நேர்த்தியாகவும் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டில் தேவையற்ற பொருட்களை கொடுக்கவில்லை என்பதும் வரவேற்கத்தக்க விஷயம். மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சாதனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

7.டிரைவிங் பொசிஷன்

7.டிரைவிங் பொசிஷன்

வாடிக்கையாளர்களை கவர்வதற்கு டிரைவிங் பொசிஷன் மிக இன்றியமையாத விஷயம். எனவே, மிகுந்த கவனத்துடன் மிகச்சிறப்பான டிரைவிங் பொசிஷன் கொண்டதாக வடிவமைத்துள்ளனர். சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட முடிகிறது. ஸ்டீயரிங் வீலின் உயரம் மற்றும் இரு்ககையின் உயரத்தையும், சாய்மான வசதியும் இருப்பதால், உங்களுக்கு சவுகரியமாக மாற்றிக் கொண்டு காரை பாதுகாப்பாகவும், சோர்வில்லாமலும் ஓட்ட முடியும்.

8. பின் இருக்கை

8. பின் இருக்கை

டாடா கார்களின் உட்புற இடவசதி பற்றி சொல்லத் தேவையில்லை. உயரமானவர்களுக்கும் போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் வசதியை கொடுப்பது மட்டுமின்றி, 3 பெரியவர்கள் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். மேலும், இதன் அமைப்பு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. பின்புறத்தில், மூன்று பயணிகளுக்கும் சீட்பெல்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அட்ஜெஸ்டபிள் ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், பின்புறத்திலிருந்து விபத்து நிகழும் சமயங்கலில் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் அதிக அளவில் ஏற்படுவதை தவிர்க்கும்.

9. பொருட்கள் வைப்பதற்கான இடவசதி

9. பொருட்கள் வைப்பதற்கான இடவசதி

பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்காக 210 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி உள்ளது. பின்புறத்தில் பயணிகளுக்கு சிறப்பான இடவசதி இருப்பதால், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியில் சிறிது சமரசம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, பின்புற இருக்கையை மடக்கிக் கொண்டால் பொருட்களுக்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

பூட் ரூம் - ஒப்பீடு

மாருதி ஸ்விஃப்ட் - 205 லிட்டர்

டாடா போல்ட் : 210 லிட்டர்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 - 256 லிட்டர்

10. எஞ்சின் செயல்திறன்

10. எஞ்சின் செயல்திறன்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய தலைமுறை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆரம்ப நிலை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. அதிகபட்சமாக 88.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டுவதற்கு ஏதுவாக, இதன் எஞ்சின் ஆர்பிஎம் சற்று அதிகமாக வைத்து ட்யூனிங் செய்துள்ளனர். இதனால், ஆக்சிலரேட்டரை மிதிக்கும் அவசியம் இல்லாமல், கிளட்ச் கன்ட்ரோலில் போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்ட முடிகிறது.

நரேன் கார்த்திகேயன் பங்கு:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய தலைமுறை ரெவோட்ரான் பெட்ரோல் கார் எஞ்சின் வடிவமைப்பில் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் வீரரான நரேன் கார்த்திகேயன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்த எஞ்சின் டாடா இண்டிகாவின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதரத் தகவல்:

டாடா போல்ட் கார் புதிய 1,193சிசி டர்போசார்ஜ்டு எம்பிஎஃப்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1,248சிசி மல்டிஜெட் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

11. கையாளுமை

11. கையாளுமை

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களுக்கு ஏற்ற ஒரு சிறிய காராகவும், நெடுஞ்சாலையில் அதிருப்தியை தராத ஓர் சிறந்த ஓட்டுதல் சுகத்தையும், கையாளுமையையும் வழங்குகிறது போல்ட். மோசமான சாலைகளில் கூட வெகு லாவகமாக செல்கிறது. எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், சாலை நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளக்கூடிய, மூன்றுவிதமான டிரைவ் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவை எந்தவொரு சாலையிலும் நம்பிக்கையுடன் ஓட்டிச் செல்ல உதவுகிறது. அதேநேரத்தில், தடிமனான ஏ பில்லர் பார்வை திறனை பாதிப்பதையும் கூற வேண்டும். மேலும், நகர்ப்புறத்தில் பயன்படும் முதல் மற்றும் இரண்டாவது கியரை மாற்றும்போது சற்று கடினமான உணர்வை தருகிறது. 3, 4 மற்றும் 5வது கியர்களை மாற்றும்போது வெண்ணை தடவியது போன்று மாறுகிறது.

12. மல்டி டிரைவ் சிஸ்டம்

12. மல்டி டிரைவ் சிஸ்டம்

சாலை நிலைக்கு தகுந்தவாறு கார் எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக சிட்டி, ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்றுவிதமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருப்பது முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.

Eco Mode: இந்த ஆப்ஷனில் வைத்து காரை ஓட்டும்போது அதிக எரிபொருள் சிக்கனம் இருக்கும், பெர்ஃபார்மென்ஸ் குறைவாக இருக்கும்.

Sport Mode: சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இருக்கும், ஆனால், எரிபொருள் சிக்கனத்தில் சிறிய மாறுபாடு ஏற்படும்.

City Mode: எக்கானமி, ஸ்பார்ட் டிரைவிங் ஆப்ஷன்களுக்கு இடையில் எரிபொருள் சிக்கனம், பெர்ஃபார்மென்ஸ் இரண்டையும் சமமாக தரும். இதனை வழக்கமான டிரைவிங் ஆப்ஷனாக வைத்து பயன்படுத்த முடியும்.

*படத்தில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் டிரைவிங் ஆப்ஷன் பட்டன்களை கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும். இரண்டையும் ஆஃப் செய்துவிட்டால் சிட்டி டிரைவிங் ஆப்ஷனில் கார் செல்லும்.

பாதகம்:

சென்டர் கன்சோலில் டிரைவிங் ஆப்ஷனை தேர்வு செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீலின் வலது பக்கத்தில் இதற்கான பட்டன்களை கொடுத்திருந்தால் ஓட்டும்போது டிரைவிங் ஆப்ஷனை மாற்றிக் கொள்ள இன்னும் எளிதாக இருந்திருக்கும்.

13.அதிகபட்ச வேகம்

13.அதிகபட்ச வேகம்

டாப் ஸ்பீடு எனப்படும் காரின் அதிகபட்ச வேகத்தை மட்டும் வைத்து எஞ்சின் பெர்ஃபார்மென்ஸை எடை போட முடியாது. இந்த புதிய தலைமுறை எஞ்சின் ஆரம்ப நிலையில் சிறப்பான செயல்திறனை வழங்கினாலும், நடுத்தர நிலையில் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை கொடுக்கவில்லை. டெஸ்ட் டிரைவின்போது அதிகபட்சமாக 140 கிமீ வரை தொட முடிந்தது. இருப்பினும், 160 கிமீ வேகம் வரை தொடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

14. மைலேஜ்

14. மைலேஜ்

எரிபொருள் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாததும், தொடர் விலையேற்றங்களும், மைலேஜ் விஷயத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. டெஸ்ட் டிரைவின்போது இந்த கார் லிட்டருக்கு 10.7 கிமீ மைலேஜ் கொடுத்தது. அவ்வப்போது ஏசி பயன்படுத்தியதுடன், மணிக்கு 100 கிமீ முதல் 140கிமீ வேகத்தில் காரை இயக்கிய நிலையில் இந்த மைலேஜ் கிடைத்தது. ஒருவேளை, மென்மையாக கையாள்பவர்களுக்கு லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் வரை தரும் என்று கூறலாம்.

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 44 லிட்டர்கள்

ரேஞ்ச்: ஒரு முறை முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 550 கிமீ தூரம் பயணிக்கலாம்.

போட்டியாளர்கள்

மாருதி ஸ்விஃப்ட்: 42 லிட்டர்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10: 43 லிட்டர்கள்

15. கவர்ந்த விஷயங்கள் - 1

15. கவர்ந்த விஷயங்கள் - 1

1. ஸ்டீயரிங் வீல்

குறைந்த விட்டம் கொண்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டிருக்கிறது. இது கைகளுக்கு சிறந்த கிரிப்பை தருவதோடு, வெகு எளிதாக வளைத்து ஓட்ட வசதியாக உள்ளது. நெடுஞ்சாலையில் சிறப்பான ஃபீட்பேக் கிடைப்பதால் ஓட்டும்போது நிச்சயம் அலாதியான அனுபவத்தை தருகிறது. ஸ்டீயரிங் வீலில் வாய்ஸ் கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டிருப்பதால் கவனச்சிதறல் இல்லாமல் மியூசிக் சிஸ்டத்தை இயக்க முடியும்.

ஹாரன் பேடு

ஹாரன் அடிப்பதற்கு சற்று கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இதரத் தகவல்

- 14.17 இஞ்ச் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

- டர்னிங் ரேடியஸ் 5.1 மீட்டர்கள்

கவர்ந்த விஷயம் - 2

கவர்ந்த விஷயம் - 2

அலாய் வீல்கள்

தடிமன் அதிகம் கொண்டதாக தெரியும் 8 ஸ்போக்குகள் கொண்ட 15 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுவும் எளிமையாக தெரிகிறது. ஆனால், எல்லோரையும் கவரும் என்று சொல்ல முடியாது.

இதரத்தகவல்கள்

- 15 இஞ்ச் அலாய் ரிம்

-டயர் அளவு: 175/65 R15

- டயர் பிராண்டு: குட்இயர்

- டைப்: ட்யூப்லெஸ் டயர்

- முன்புறத்தில் டிஸ்க் பிரேக்

- பின்புறத்தில் டிரம் பிரேக்

கவர்ந்த விஷயம்- 3

கவர்ந்த விஷயம்- 3

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருப்பதையும் சொல்லலாம். அத்துடன் மேப் மை இந்தியா நேவிகேஷன் சிஸ்டமும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

* 5 இஞ்ச் டச்ஸ்கிரீன்

*வீடியோ ப்ளேபேக்

* ஸ்மார்ட்போன் மூலம் நேவிகேஷன் வசதி

* புளூடூத் வசதி

* வாய்மொழி உத்தரவு மூலம் இயக்கும் வசதி

* ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளும் வசதி

*எஸ்எம்எஸ் வருவதையும், அதனை திரையில் படிக்கும் வசதி

குறிப்பு: ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் மட்டுமே இணைக்க முடியும் என்பதோடு, புளுடூத் தொழில்நுட்பத்தையும் பொறுத்தது.

கவர்ந்த விஷயம் - 4

கவர்ந்த விஷயம் - 4

நேவிகேஷன் வசதியை பெறுவதற்கு மேப்மை இந்தியா ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்ட்டால் செய்த பின்னர் யுஎஸ்பி போர்ட் வழியாக ஸ்மார்ட்போனையும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் இணைக்க வேண்டும். இதன்பிறகு புறப்படும் இடத்தையும், செல்ல வேண்டிய இடத்தையும் ஸ்மார்ட்போனில் தேர்வு செய்து விட்டால், அதனை இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம் வழியாக பார்த்து ஓட்ட முடியும்.

பாதக அம்சம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் டச்ஸ்கிரீன் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், இயக்கமும் மெதுவாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியது.

19 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

19 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இரண்டு அனலாக் மீட்டர்களும், நடுவில் டிஜிட்டல் திரையில் தகவல்களை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அனலாக் டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவை பார்ப்பதற்கு தெளிவாக இருக்கிறது.தடிமனான எண்கள் மற்றும் வெள்ளை நிற முள் ஆகியவையும் பார்வை நேரத்தை குறைக்கின்றன. டிஜிட்டல் திரை பற்றிய கூடுதல் தகவல்களை 21வது ஸ்லைடில் காணலாம்.

கவர்ந்த விஷயம் - 5

கவர்ந்த விஷயம் - 5

முன் இருக்கைகள்

ஃபேப்ரிக் முன் இருக்கைகள் அமர்வதற்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. பார்க்கவும் ஸ்டைலாக இருக்கின்றன. வளைவுகளில் திரும்பும்போதும் ஓட்டுனரும், முன் இருக்கை பயணியும் சரியாமல் இருக்கும் வகையில் சிறப்பான உணர்வை தருகிறது.

21. மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே

21. மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே

பல்வேறு தகவல்களை தரும் மல்டி இன்பர்மேஷன் டிஜிட்டல் திரையில் என்னென்ன வசதிகளை பெற முடியும் என்பதை படத்தில் காணலாம். டிஜிட்டல் திரையில் டிரிப் மீட்டர், வெளிப்புற வெப்ப நிலை, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், மைலேஜ், எந்த டிரைவிங் ஆப்ஷனில் கார் செல்கிறது போன்ற தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள உதவுகிறது.

22. பிடிக்காத விஷயம் - 1

22. பிடிக்காத விஷயம் - 1

வெளிப்புறத்தில் இருக்கும் ரியர் வியூ கண்ணாடிகள் பார்க்க ஸ்டைலாக இருக்கின்றன. ஆனால், அவை போதிய அளவு தெளிவான பிம்பங்களை வழங்கவில்லை. மேலும், இந்த ரியர் வியூ கண்ணாடிகளில் பிளைன்ட் ஸ்பாட் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதால், ஒரு தடத்திலிருந்து மற்றொரு தடத்திற்கு மாறும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பிடிக்காத விஷயம் -2

பிடிக்காத விஷயம் -2

ஹேண்ட்பிரேக் மிகவும் மென்மையாகவும், வழக்கமான க்ரீச் சப்தம் தரவில்லை என்பதால் ஹேண்ட்பிரேக்கை முழுமையாக பிடித்து விட்டோம் என்ற உறுதியை எளிதாக பெற முடியவில்லை. ஒன்றிற்கு இரண்டு முறை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.

பிடிக்காத விஷயம் - 3

பிடிக்காத விஷயம் - 3

இந்த காரில் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. சென்டர் கன்சோலுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பாட்டில் ஹோல்டரும் அளவில் சிறியதாக இருப்பதால் அதுவும் வேஸ்ட்தான். டோர் பாக்கெட்டும் மிகவும் குறுகலாக இருக்கிறது. குடும்பத்தினருடன் செல்லும்போது பாட்டில் வைக்க போதிய இடவசதி இல்லாதது பெரும் குறையே.

25. போட்டியாளர்கள்

25. போட்டியாளர்கள்

சிறப்பான டிசைன், புதிய தலைமுறை பெட்ரோல் எஞ்சின், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் டாடா போல்ட் கார் ரூ.4.20 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என தெரிகிறது. எனவே, இந்த புதிய கார் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்களுக்கு நிச்சயம் போட்டியை கொடுக்கும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

ஒப்பீடு

ஹூண்டாய் ககிராண்ட் ஐ10 1.2 லிட்டர் பெட்ரோல்

விலை: ரூ.4.3 லட்சம் முதல் ரூ.5.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி.

மாருதி ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல்

விலை: ரூ.4.4 லட்சம் முதல் ரூ.5.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி.

26. சாதக, பாதகங்கள்

26. சாதக, பாதகங்கள்

சாதகங்கள்

- அதிக இடவசதி

- சிறந்த ஓட்டுதல் தரம்

- சொகுசான இருக்கை அமைப்பு

- எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்

- மல்டி டிரைவிங் ஆப்ஷன்

- ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

பாதகங்கள்:

- ஸ்டோரேஜ் வசதி குறைவு

- கூடுதல் விரல் அழுத்தம் தேவைப்படும் தொடுதிரை

- தடிமனான ஏ பில்லர் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகள்

- மிட்ரேஞ்சில் திணறுவதோடு, சீரான செயல்திறனை வெளிப்படுத்தாத எஞ்சின்

வெற்றி யார் கையில்?

இந்த காருக்கு சரியான விலை நிர்ணயித்து களமிறக்கினால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறலாம். போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வந்தால், கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க காராக இதனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

டாடா கவனிக்க வேண்டிய விஷயம்

விற்பனைக்கு பிந்தைய சேவையில் மாருதி, ஹூண்டாய் அளவுக்கு தரத்தையும், சேவையையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இருக்கிறது. இதில், சொதப்பினால் நிச்சயம் நல்ல கார்கள் இருந்தும் பழையபடி, சோகக்கதை பாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

 27.டாடா மோட்டார்ஸ் - தகவல்கள்

27.டாடா மோட்டார்ஸ் - தகவல்கள்

தலைமையகம்: பாம்பே ஹவுஸ் 24, ஹோமி மோடி ஸ்ட்ரீட் மும்பை, இந்தியா.

ஸ்தாபிதம் மற்றும் நிறுவனர்: 1868, ஜாம்செட்ஜி டாடா

முக்கிய பங்குதாரர்கள்: டாடா சன்ஸ் மற்றும் டாடா இன்டஸ்ட்ரீஸ்

இதர வர்த்தக துறைகள்: தகவல்தொழில்நுட்ப துறை, பொறியியல், சேவைகள் துறை, எரிசக்தி, ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.

குழும வருவாய் 2013 -14: ரூ.6,24,757 கோடி

நிறுவனங்கள் எண்ணிக்கை: 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்

பணியாளர்கள் எண்ணிக்கை: 5,81,470

சர்வதேச வர்த்தகம்: 80க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தகம்

சர்வதேச வருவாய்: 69.4 பில்லியன் டாலர்(குழுமத்தின் மொத்த வருவாயில் 67.2சதவீதம்)

Most Read Articles
English summary
Fast forward to today,Tata's Bolt hatchback, scheduled for launch this year-end, has everyone sitting up and taking notice.Several questions are already being raised, and the auto fraternity is keeping a close watch on the Bolt. Now, before we set out on our test run, we asked ourselves, does the Bolt tick all the boxes for a small and practical car? Does it have enough to beat the likes of Maruti Swift, Hyundai Grand i10? Here’s what we found out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X