நீச்சல் குளமாக மாற்றப்பட்ட பிஎம்டபிள்யூ கார்: போலீசார் பறிமுதல்

ஜெர்மனியில் நடமாடும் நீச்சல் குளமாக மாற்றப்பட்டு சாலையில் வலம் வந்த பிஎம்டபிள்யூ காரை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள ஐபன்ஸ்டாக் நகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் மோட்டார்சைக்கிளில் ரோந்து சென்றுள்ளார்.

அப்போது, நம்பர் பிளேட் இல்லாத கன்வெர்ட்டிபிள் பிஎம்டபிள்யூ கார் ஒன்று சாலையில் சென்றுள்ளது. அந்த காரிலிருந்து கீழே தண்ணீர் ஊற்றியபடி செல்வதை கவனித்த போலீஸ் அதிகாரி காரை விரட்டிச் சென்று பிடித்துள்ளார். அப்போது அந்த கார் நீச்சல் குளம் போல மாற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்.

உலகம் முழுவதும் வாடிக்கை வதைக்கும் போக்குவரத்து நெரிசல்

பறிமுதல்

பறிமுதல்

நீச்சல் குளம் மாற்றப்பட்ட அந்த பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை. மேலும், காருக்குள் நீச்சல் குளம் போல மாற்றப்பட்டு தண்ணீர் நிரப்பட்டு இருந்துள்ளது. எனவே, அந்த காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கும்மாளம்

கும்மாளம்

காரில் மூன்று இளைஞர்கள் நீச்சல் உடையில் இருந்துள்ளனர். இருவர் முன்புறத்தில் அமர்ந்துள்ளனர். ஒருவன் பின்புறத்தில் அமர்ந்து கொண்டு தண்ணீரில் காலை நனைத்தபடி விளையாடிக் கொண்டிருந்தாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசாரை கண்டதும் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு மூன்று பேரும் தப்பித்துவிட்டனர்.

மாட்டிய சிண்டு

மாட்டிய சிண்டு

போலீசாரை கண்டதும் தப்பித்த மூன்று இளைஞர்களில் 27 வயதுடைய ஒருவன் தனது பர்ஸ் மற்றும் காலணிகளை காருக்குள்ளே விட்டு விட்டுச் சென்றுள்ளான். எனவே, அவற்றை திரும்ப பெற மீண்டும் போலீசாரிடம் வந்தபோது பிடிபட்டுள்ளான். ஆனால், தான் காரை ஓட்டவில்லை என்று அவன் கூறியுள்ளான். அவன் குடிபோதையில் இருந்ததாக போலீசார் சந்தேகமடைந்து, ரத்த பரிசோதனை நடத்தியுள்ளனர்.

குழப்பம்

குழப்பம்

நீச்சல் குளம்போல காரை கஸ்டமைஸ் செய்துள்ளது சட்டப்படி குற்றமா என்பது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை போலீசார் கோரியுள்ளனர்.

 வேகம்

வேகம்

அந்த கார் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X