ஸ்கார்ப்பியோவுக்கு குட்பை... இதுதான் இனி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கார்!

By Saravana

நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த ஸ்கார்ப்பியோ காருக்கு விடை கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். ஆம், இனி பிரதமருக்கான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனது அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்த பிரதமர் மோடி இசைந்துவிட்டார்.

பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு படையினரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். எனவே, சுதேசி காரிலிருந்து தற்போது விதேசி காருக்கு மாறுகிறார் பிரதமர் மோடி.


முதல்வர் முதல் பிரதமர் வரை

முதல்வர் முதல் பிரதமர் வரை

முதல்வராக இருந்தபோது தோளோடு தோள் நின்ற ஸ்கார்ப்பியோ எஸ்யூவிதான் அவரை பிரதமர் பதவி வரை கொண்டு வந்து சேர்த்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்தபோது அதிகாரப்பூர்வ காராக இருந்ததோடு, மக்களவை தேர்தல் பிரச்சாரங்களின்போதும் மோடிக்கு தோளோடு தோள் நின்றது ஸ்கார்ப்பியோவும்தான்.

மாற்றம் ஏன்?

மாற்றம் ஏன்?

மோடி பயன்படுத்தி வந்த ஸ்கார்ப்பியோ எஸ்யூவி குண்டு துளைக்காத வசதி கொண்டது. ஆனாலும், பிரதமருக்கான போதிய பாதுகாப்பு வசதிகள் அந்த காரில் இல்லை என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர். எனவே, பிரதமருக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை பரிந்துரைத்துள்ளனர்.

மஹிந்திரா ஆஃபர்

மஹிந்திரா ஆஃபர்

ஸ்கார்ப்பியோவை மோடி தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும், அதனை பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தி தர தயார் என்றும் மஹிந்திரா தெரிவித்தது. ஆனால், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் அளவுக்கு அதில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாது என்று சிறப்பு பாதுகாப்புப் படையினர் கருதுகின்றனர்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் வசதிகள்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் வசதிகள்

குண்டு துளைக்காத கண்ணாடிகள், கண்ணி வெடி மற்றும் குண்டு வெடிப்புகளில் சேதமடையாத பாடி, தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவை உடையது.

இதர நவீன வசதிகள்

இதர நவீன வசதிகள்

வெடிகுண்டுகளை கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைகோள் தொடர்பு சாதனம் போன்ற பல வசதிகள் உள்ளன. ஏவுகணை மற்றும் ரசாயனத் தாக்குதலிலிருந்து கூட பாதுகாப்பு தரும்.

அணிவகுப்பு

அணிவகுப்பு

மொத்தம் 9 கார்கள் பிரதமர் காருடன் அணிவகுப்பில் இடம்பெறும். இதில், இரண்டு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்கள் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். அதில் ஒன்றில்தான் பிரதமர் செல்வது வழக்கம். தற்போது பிரதமரின் 7 சீரிஸ் காரின் அணிவகுப்பில் பாதுகாப்பு கருதி மேலும் சில 7 சீரிஸ் கார்களை சேர்க்க சிறப்பு பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், பிரதமர் செல்லும் காரை எளிதில் அடையாளம் காண முடியாது. பிற கார்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அலுவலர்கள் செல்வார்கள்.

கார் மாடல்

கார் மாடல்

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட இருக்கும் கார் பிஎம்டபிள்யூ 760எல்ஐ ஹை செக்யூரிட்டி என்ற மாடலாகும். இது பார்ப்பதற்கு பிஎம்டபிள்யூ 745எல்ஐ மாடலை ஒத்ததாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ பயிற்சிபெற்ற ஓட்டுனர்கள்

பிஎம்டபிள்யூ பயிற்சிபெற்ற ஓட்டுனர்கள்

பிரதமருக்கான காரை ஓட்டும் ஓட்டுனர்கள் பிஎம்டபிள்யூவின் டிரைவிங் நிபுணர்களிடமிருந்து சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். மேலும், அவசர மற்றும் ஆபத்து சமயங்களில் காரை எவ்வாறு ஓட்டுவது என்பது குறித்து பல பயிற்சிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பின்புறமாக காரை வேகமாக செலுத்துவதிலும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

தொழில்நுட்ப சிறப்புகள்

தொழில்நுட்ப சிறப்புகள்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி எடிசன் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 439 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். 6 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பு கமான்டோ படை

சிறப்பு கமான்டோ படை

தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததை தொடர்ந்து, 1988ம் ஆண்டு பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்புப் பாதுகாப்புப் படை பிரிவு(SPG) துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்தான வாகனம்

ஆஸ்தான வாகனம்

2003ம் ஆண்டு வரை அம்பாசடர்தான் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹைசெக்யூரிட்டி கார்கள் வாங்கப்பட்டன.

பிரபல மாடல்கள்

பிரபல மாடல்கள்

நம் நாட்டு பிரதமருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் போன்றே உலகின் பிரபலமான குண்டு துளைக்காத கார் மாடல்களின் பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
India's 15th Prime Minister Mr. Narendra Modi has opted for a specially designed armoured BMW 7-Series as his official car. On his first day to office, Mr. Modi came chauffeured in a BMW 7-Series, given to the Prime Minister in India. Take a look at this car. 
Story first published: Friday, May 30, 2014, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X