இந்தியாவின் மிக நீளமான டாப்-10 தேசிய நெடுஞ்சாலைகள்!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைப்பதிலும், விரைவான பயணத்தை வழங்குவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. பெரு நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களின் ஊடாக சென்று அந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியிலும் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்களிப்பை தருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு நெடுஞ்சாலைகள் சிறப்பான கட்டமைப்பு வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால், சுகமான, விரைவான பயணத்தை பெறும் வாய்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது 92,851.05 கிமீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த நீளம் குறைவானதாக இருப்பதுடன், கட்டமைப்பு வசதிகளும் மேம்பட வேண்டியிருக்கின்றன.

அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நெடுஞ்சாலைகளிலும் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருவதால் நாளுக்கு நாள் நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் மிக நீளமான நெடுஞ்சாலைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


சொற்பமான அளவு

சொற்பமான அளவு

2010ம் ஆண்டு வெளியான புள்ளிவிபரத்தின்படி, இந்தியாவின் மொத்த சாலை நீளத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், நாட்டின் 40 சதவீத போக்குவரத்து இந்த சாலைகளின் வழியாகத்தான் நடக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் மிக நீளமான டாப்-10 நெடுஞ்சாலைகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

Picture credit: Wiki Commons

j929

 10. தேசிய நெடுஞ்சாலை எண் 31

10. தேசிய நெடுஞ்சாலை எண் 31

டாப்-10 பட்டியலில் 10வது இடத்தை தேசிய நெடுஞ்சாலை 31 பெறுகிறது. ஜார்கண்ட் மாநிலம், பர்ஹி என்ற இடத்தில் துவங்கும் இந்த நெடுஞ்சாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஜலுக்பரி என்ற இடத்தில் முடிகிறது. இது 1,125 கிமீ நீளம் கொண்டது. ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் மிக முக்கியமான நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதி சாலை கிழக்கு- மேற்கு காரிடர் சாலையில் வருகிறது.

Picture credit: Wiki Commons

Tanmoy Bhaduri

9. தேசிய நெடுஞ்சாலை எண் 3

9. தேசிய நெடுஞ்சாலை எண் 3

இந்த பட்டியலில் 9வது இடத்தில் மிக நீளமான நெடுஞ்சாலையாக NH-3 பெறுகிறது. இதனை AB சாலை என்றும் அழைக்கின்றனர். ஆக்ராவிலிருந்து மும்பையை இணைக்கும் இந்த சாலை 1,190 கிமீ நீளம் கொண்டது. மேலும், இந்த சாலையின் ஆக்ரா- குவாலியர் இடையிலான பகுதி வடக்கு- தெற்கு இணைப்பு சாலையில் இடம்பெறுகிறது. அதிலிருந்து மும்பையை நோக்கி செல்லும் சாலை கிழக்கு அதிவிரைவு சாலையாக குறிப்பிடப்படுகிறது. மும்பைக்கு பிறகு மும்பை-நாசிக் விரைவு சாலையாக குறிப்பிடப்படுகிறது.

Picture credit: Wiki Commons

rajkumar1220

8. தேசிய நெடுஞ்சாலை எண் 4

8. தேசிய நெடுஞ்சாலை எண் 4

அதிக மக்கள்தொகை கொண்ட டாப்-10 நகரங்களில் 4 முக்கிய நகரங்களை இந்த தேசிய நெடுஞ்சாலை இணைக்கிறது. இது 1,235 கிமீ நீளம் கொண்டது. மும்பை, புனே, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் அதி முக்கிய சாலை இது. மஹராஷ்டிரா, கர்நாடாக, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

Picture credit: Wiki Commons

Ashwin Kumar

 7. தேசிய நெடுஞ்சாலை எண் 17

7. தேசிய நெடுஞ்சாலை எண் 17

மேற்கு கடற்கரை சாலையாக குறிப்பிடப்படும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இணையாக பயணிக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், பன்வெல் நகரிலிருந்து கேரள மாநிலம், கொச்சியை இணைக்கிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான பயண அனுபவத்தை தரும் சாலையாகவும் விளங்குகிறது. இந்த நெடுஞ்சாலை 1,269 கிமீ நீளம் கொண்டது. மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது. 6 விதமான மொழி பேசும் மக்களை கடந்து இந்த நெடுஞ்சாலை செல்கிறது.

Picture credit: Wiki Commons

SBC-YPR

6. தேசிய நெடுஞ்சாலை எண் 8

6. தேசிய நெடுஞ்சாலை எண் 8

மொத்தம் 1,428 கிமீ தூரத்திற்கு இந்த நெடுஞ்சாலை நீண்டு கிடக்கிறது. நாட்டின் தலைநகரான டெல்லியையும், நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பையையும் இணைக்கும் அதிக முக்கிய சாலை இது. இந்த நெடுஞ்சாலை குர்கான், அஜ்மீர், உதய்பூர், அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், வதோதரா உள்ளிட்ட நகரங்களை இணைப்பதால், தொழிலக சாலையாகவும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகவும் விளங்குகிறது. இது தங்க நாற்கர திட்டத்திற்குட்பட்ட சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Picture credit: Wiki Commons

Vssun

 5. தேசிய நெடுஞ்சாலை எண் 2

5. தேசிய நெடுஞ்சாலை எண் 2

டெல்லி- கோல்கட்டா நகரை இணைக்கும் இந்த சாலை 1,465 கிமீ நீளம் கொண்டது. டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை இணைக்கும் சாலையாகவும் இருக்கிறது. இந்த சாலை ஆசிய சாலை கட்டமைப்பிலும் இடம்பெற்றிருக்கிறது. இது AH1 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையிலும், நெடுஞ்சாலையை ஒட்டியும் 34 நகரங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: Wiki Commons

Atishtiwari18

 4. தேசிய நெடுஞ்சாலை 15

4. தேசிய நெடுஞ்சாலை 15

குஜராத் மாநிலம், சமகியாலி என்ற இடத்திலிருந்து பஞ்சாம் மாநிலம் பதான்கோட்டை இணைக்கும் நெடுஞ்சாலை இது. 1,526 கிமீ நீளம் கொண்டது. குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் வழியாக செல்கிறது.

Picture credit: BCMTouring

KurtRules

3. தேசிய நெடுஞ்சாலை எண் 5

3. தேசிய நெடுஞ்சாலை எண் 5

நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியின் மிக முக்கியமான நெடுஞ்சாலையாக குறிப்பிடப்படுகிறது. இது 1,533 கிமீ நீளம் கொண்டது. ஒடிஷா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தை இணைக்கிறது. ஒடிஷா மாநிலம் ஜார்போகாரியாவில் துவங்கி சென்னை வரை நீள்கிறது. இந்த நெடுஞ்சாலையும் தங்க நாற்கர திட்டத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: Wiki Commons

Adityamadhav83

2. தேசிய நெடுஞ்சாலை எண் 6

2. தேசிய நெடுஞ்சாலை எண் 6

இந்தியாவின் இரண்டாவது நீளமான தேசிய நெடுஞ்சாலை இது. மொத்தம் 1,949 கிமீ நீளம் கொண்டது. மேற்கு- கிழக்கு பகுதிகளை இணைக்கும் இது மிகவும் பரபரப்பான வாகன போக்குவரத்தை கொண்டது. குஜராஜ் மாநிலம், ஹஜிராவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா வரை நீள்கிறது. குஜராத், மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் ஊடாக அமைந்துள்ளது.

Picture credit: Wikimapia

 1. தேசிய நெடுஞ்சாலை எண் 7

1. தேசிய நெடுஞ்சாலை எண் 7

நாட்டின் 21 முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலைதான் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையாக குறிப்பிடப்படுகிறது. மத்திய பொதுப்பணித்துறை பராமரிப்பில் இந்த சாலை இருக்கிறது. இது 2,369 கிமீ நீளம் கொண்டது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் துவங்கி தென்கோடி முனையான தமிழ்நாட்டிலுள்ள கன்யாகுமரி வரை நீள்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடாக மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கிறது.

Picture credit: Wiki Commons

j929

உலகின் அதிவேக சாலைகள்

உலகின் அதிவேக சாலைகள்

உலகின் அதிவேக சாலைகள் செய்தியை படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஆட்டோபான் தகவல்கள்

ஆட்டோபான் தகவல்கள்

உலகின் அதிவேக சாலை ஜெர்மனியின் ஆட்டோபான் பற்றிய தகவல்களை படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆட்டோபான் சாலையின் விந்தையான சாலை விதிகள்

ஆட்டோபான் சாலையின் விந்தையான சாலை விதிகள்

ஆட்டோபான் சாலையின் விந்தையான விதிகள் பற்றிய செய்தித் தொகுப்பிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
In 2010, according to a survey, the national highway is just 2% of the total road network in India and yet carries 40% of the total traffic. So if one is wondering, which is the longest highway, here are the top 10 longest highways in India:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X