10 லட்சம் விலையில் இந்தியாவின் டாப் - 5 எம்பிவி கார்கள்: சிறப்புத் தொகுப்பு

Posted By:

இடவசதி, பாதுகாப்பு, டிசைன் என அனைத்து விதத்திலும் குடும்ப உறுப்பினர்களை திருப்தியடைய வைக்கின்றன எம்பிவி ரக கார்கள். இதன் காரணமாக எம்பிவி ரக கார்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகின்றன. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக செல்வதற்கு ஏதுவானதாக இருப்பதால், வாடிக்கையாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக புதிய மாடல்களின் எம்பிவி மாடல்களும் வரிசை கட்டி வருகின்றன. இந்த நிலையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும் 5 சிறந்த எம்பிவி கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாப் - 5 பட்டியல்

டாப் - 5 பட்டியல்

இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் எம்பிவி கார் செக்மென்ட்டில் 5 சிறந்த மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

5. செவர்லே என்ஜாய்

5. செவர்லே என்ஜாய்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.6.94 லட்சம்(பெட்ரோல்)

பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் செவர்லே என்ஜாய் மூன்றாவது வரிசையிலும் ஓரளவு நல்ல இடவசதியை வழங்கும் மாடல். போட்டியாளர்களைவிட விலையும் குறைவான மாடல். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. செவர்லே பிராண்டின் நம்பகத்தன்மைதான் இந்த விற்பனைக்கு தடைக்கல்லாக இருக்கிறது. அடுத்த ஸ்லைடில் முக்கிய அம்சங்கள் விபரம்.

 செவர்லே என்ஜாய் தொடர்ச்சி...

செவர்லே என்ஜாய் தொடர்ச்சி...

மைலேஜ்:

பெட்ரோல் 13.7 கிமீ/லி

டீசல்: 18.2 கிமீ/லி

இந்த எம்பிவி காரில் டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 77 பிஎச்பி பவரை அளிக்கும். பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் ஸ்மார்ட்டெக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எம்பிவி காரின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கவும்.

செவர்லே என்ஜாய் சிறப்பம்சங்கள்

4.மஹிந்திரா ஸைலோ

4.மஹிந்திரா ஸைலோ

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.8.83 லட்சம்(டீசல்)

மிகச்சிறப்பான இடவசதி கொண்ட எம்பிவிகளில் ஒன்றான ஸைலோ டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. பாடி ரோல் அதிகம் இருப்பதுதான் இதன் பிரச்னை. மற்றபடி, மஹிந்திரா வாகனங்களுக்குரிய சிறப்பம்சங்கள், ஸ்டைல் என அனைத்திலும் முன்னிலை வகிக்கிறது. கூடுதல் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மஹிந்திரா ஸைலோ தொடர்ச்சி...

மஹிந்திரா ஸைலோ தொடர்ச்சி...

மைலேஜ்: டீசல் 13.9கிமீ/லி

இந்த எம்பிவி காரில் 95 பிஎச்பி பவரை அளிக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. முழுமையான சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

மஹிந்திரா ஸைலோ சிறப்பம்சங்கள்

3.டொயோட்டா இன்னோவா

3.டொயோட்டா இன்னோவா

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.11.64 லட்சம்(டீசல்)

டாப் எம்பிவி கார்களின் பட்டியலில் இன்னோவா இல்லாமல் நிறைவடையாது. ஆனால், இந்த எம்பிவி காரின் பேஸ் மாடலே ரூ.11.64 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. ஒன்றரை லட்சம் விலை கூடுதலாக இருப்பினும், ஓர் சிறப்பான எம்பிவி மாடல் என்பதால் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் ஆகியவை இந்த காருக்கு எம்பிவி மார்க்கெட்டில் தனித்தன்மையையும், மார்க்கெட்டையும் பெற்றுத் தந்துள்ளது. இதன் முக்கிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக விலை மற்றும் குறைவான மைலேஜ் ஆகியவை குறைகள். கூடுதல் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 டொயோட்டா இன்னோவா தொடர்ச்சி...

டொயோட்டா இன்னோவா தொடர்ச்சி...

மைலேஜ்: டீசல் 12.99 கிமீ/லி

டொயோட்டா இன்னோவாவில் 101 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. வசதிகளுக்கு ஏற்ப 22 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. சிறப்பான வசதிகள், சொகுசான பயணம் என இன்னோவாவுக்கு நிகர் இன்னோவாதான். டொயோட்டா இன்னோவாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்துகொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவா சிறப்பம்சங்கள்

2. மாருதி எர்டிகா

2. மாருதி எர்டிகா

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.7.29 லட்சம்(பெட்ரோல்)

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சிஎன்ஜி எரிபொருள் வகை மாடல்களில் கிடைக்கும் மாருதி எர்டிகா, இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் காம்பேக்ட் எம்பிவி மாடல். 7 பேர் செல்வதற்கான இடவசதி கொண்டது. மாருதி நிறுவனத்தின் மிகப்பெரிய சர்வீஸ் நெட்வோர்க்,மைலேஜ், சிறப்பான எஞ்சின்கள் மற்றும் விலை ஆகியவை இந்த காருக்கு வலுசேர்க்கும் அம்சங்கள். மூன்றாவது வரிசை இடவசதி குறைவு என்பது முக்கிய மைனஸ். கூடுதல் விபரங்கள் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மாருதி எர்டிகா தொடர்ச்சி...

மாருதி எர்டிகா தொடர்ச்சி...

மைலேஜ்

பெட்ரோல்: 16.02கிமீ/லி

டீசல்: 20.77கிமீ/லி

இந்த காரின் பெட்ரோல் மாடலில் 94 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 89 பிஎச்பி பவரை அளிக்கும் ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டில் ஏபிஎஸ், ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மாருதி எர்டிகாவில் இருக்கும் வேரியண்ட்டுகள், சிறப்பம்சங்கள் விபரங்களை கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்துகொள்ளலாம்.

மாருதி எர்டிகா சிறப்பம்சங்கள்

1. ஹோண்டா மொபிலியோ

1. ஹோண்டா மொபிலியோ

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.7.7 லட்சம் (பெட்ரோல்)

போட்டியாளர்களைவிட பல விதத்திலும் சிறப்பான மாடல் ஹோண்டா மொபிலியோ. இடவசதி, டிசைன், மைலேஜ், ஹோண்டாவின் நம்பகத்தன்மை வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிக மைலேஜே வழங்கும் டீசல் எஞ்சின் ஆகியவை இதற்கு வலுசேர்க்கும் அம்சங்கள். இதுவும் 7 சீட்டர் மாடல்தான். காம்பேக்ட் எம்பிவி ரகத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் போட்டியாளர்களைவிட விலை அதிகம் என்பதுதான் மைனஸாக அமைந்துவிட்டது. இருப்பினும், தற்போதைய நிலையில் ஓர் சிறந்த சாய்ஸ் மொபிலியோவை கூறலாம். மேலும், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எம்பிவி கார் மாடலும் மொபிலியோதான் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விபரங்கள் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஹோண்டா மொபிலியோ தொடர்ச்சி...

ஹோண்டா மொபிலியோ தொடர்ச்சி...

மைலேஜ்:

பெட்ரோல்:17.3கிமீ/லி

டீசல்: 24.5 கிமீ/லி

பெட்ரோல் மாடலில் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. டீசல் மாடலில் 99 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மொபிலியோ பற்றிய அனைத்து விபரங்களையும் பெறுவதற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

ஹோண்டா மொபிலியோ சிறப்பம்சங்கள்

இதே பட்ஜெட்டில் இதர மாடல்கள்

இதே பட்ஜெட்டில் இதர மாடல்கள்

விற்பனை எண்ணிக்கை, டாக்சி மார்க்கெட் பயன்பாடு, கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு போன்ற காரணங்களால் இந்த பட்டியலில் இடம்பெறாத மாடல்கள்.

1.நிசான் எவாலியா

2.அசோக் லேலண்ட் ஸ்டைல்

3.செவர்லே தவேரா

4.டாடா ஆரியா

5.ஐசிஎம்எல் எக்ஸ்ட்ரீம்

 

English summary
Here are the Top 5 MPV cars in India around 10 lakh budget. Have a look.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark